Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | இரும்பின் உலோகவியல்

தாதுக்களின் தோற்றம், இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள், பயன்கள் - இரும்பின் உலோகவியல் | 10th Science : Chapter 8 : Periodic Classification of Elements

   Posted On :  30.07.2022 03:06 am

10வது அறிவியல் : அலகு 8 : தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

இரும்பின் உலோகவியல்

அலுமினியத்திற்கு அடுத்து, மிக அதிகமாக காணப்படும் உலோகம் இரும்பு ஆகும். இயற்கையில், இது ஆக்சைடு, சல்பைடு மற்றும் கார்பனேட்டுகளாக கிடைக்கின்றன.

இரும்பின் உலோகவியல்

 

கிடைக்கும் பாங்கு : அலுமினியத்திற்கு அடுத்து, மிக அதிகமாக காணப்படும் உலோகம் இரும்பு ஆகும். இயற்கையில், இது ஆக்சைடு, சல்பைடு மற்றும் கார்பனேட்டுகளாக கிடைக்கின்றன. இரும்பின் தாதுக்களாவன:


இரும்பின் முக்கிய தாது ஹேமடைட் (Fe2O3) ஆகும்

1. புவியீர்ப்பு முறையில் அடர்ப்பித்தல்: தூளாக்கப்பட்ட தாதுவை, சீராக ஓடும் நீரில் கழுவும்போது லேசான மாசுக்கள் அகற்றப்பட்டு, கனமான தாதுக்கள் கீழே படிகின்றன.

2. காற்றுள்ள மற்றும் காற்றில்லா சூழலில் வறுத்தல்: அடர்ப்பிக்கப்பட்ட தாதுவானது, அளவான காற்றில் உலையில் சூடேற்றப்படும் போது, ஈரப்பதம் வெளியேறி சல்பர், ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் மாசுக்கள் ஆக்ஸிஜனேற்றம் அடைகின்றன.

3. ஊது உலையில் உருக்கிப்பிரித்தல்: வறுக்கப்பட்ட தாது, கல்கரி, சுண்ணாம்புக்கல் இவற்றை 8:4:1 என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு, உலையின் மேலுள்ள கிண்ணக்கூம்பு அமைப்பு வழியாக, செலுத்தப்படுகிறது. உலையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன.


அ. கீழ்ப்பகுதி (எரிநிலை மண்டலம்)

இந்தப் பகுதியின் வெப்பநிலை 1500°C ஆகும் வெப்பக்காற்றுடன் தாதுக்கலவை சேரும் போது, ஆக்ஸிஜனுடன் எரிந்து CO2 வாக மாறுகிறது.


இவ்வினையிலிருந்து வெப்ப ஆற்றல் வெளியாவதால் வெப்ப உமிழ்வினை எனப்படும்.

. நடுப்பகுதி அல்லது உருக்கு மண்டலம்

இப்பகுதி 1000°C வெப்பநிலையில் உள்ளது. இங்கு CO2 ஆனது CO ஆக ஓடுக்கமடைகிறது.


சுண்ணாம்புக்கல் சிதைந்து, கால்சியம் ஆக்சைடையும், CO2 வையும் தரும்.


மேற்கண்ட இருவினைகளில், வெப்பம் உட்கவரப்படுவதால் வெப்ப கொள்வினைகள் ஆகும். கால்சியம் ஆக்சைடு மணலுடன் சேர்ந்து கால்சியம் சிலிகேட் எனும் கசடாகிறது.


. மேற்பகுதி (ஒடுக்கும் மண்டலம்)

இப்பகுதியில் 400°C வெப்பநிலையில் ஃபெரிக் ஆக்சைடு, கார்பன் மோனக்சைடு மூலம் இரும்பாக ஒடுக்கம் அடைகிறது.


கசடை நீக்கிய பிறகு, உருகிய இரும்பானது, உலையின் அடியில் சேகரிக்கப்படுகிறது. இவ்விரும்பு மீண்டும் உருக்கப்பட்டு விதவித அச்சுக்களில் வார்க்கப்படுவதால், இது வார்ப்பிரும்பு எனப்படும்.

 

இயற்பண்புகள்

· இது ஒரு பளபளப்பான உலோகம், சாம்பல் வெள்ளை நிறமுடையது.

· இழுவிசை, தகடாக்கும் தன்மை மற்றும் கம்பியாக்கும் தன்மையைப் பெற்றிருக்கும்.

· காந்தமாக மாற்ற இயலும்.

 

வேதிப்பண்புகள்

1. காற்றுடன் வினை: இரும்பு, காற்றுடன் சூடேற்றும் போது வினைபுரிந்து இரும்பு ஆக்சைடு உருவாகிறது.

3Fe + 2 O→ Fe3O4  (கறுப்பு நிறம்)

2. ஈரக்காற்றுடன் வினை: இரும்பானது ஈரக்காற்றுடன் வினைபுரிந்து பழுப்பு நிற, நீரேறிய பெர்ரிக் ஆக்சைடை உருவாக்குகின்றது. இச்சேர்மமே துரு எனப்படும். இந்நிகழ்ச்சி துருபிடித்தல் எனப்படும்.

4 Fe+ 3 O2 + x H2O → 2 Fe2O3 . xH2O (துரு)

3. நீராவியுடன் வினை: செஞ்சூடெற்றிய இரும்பின் மீது, நீராவியை பாய்ச்சும் போது மேக்னட்டிக் ஆக்சைடு உருவாகிறது.

 3Fe + 4 H2O (நீராவி) → Fe3O4 + 4 H2 ↑

4. குளோரினுடன் வினை: இரும்பு குளோரினுடன் சேர்ந்து ஃபெரிக்குளோரைடு உருவாகிறது.

2Fe + 3Cl→ 2FeCl3 (ஃபெரிக்குளோரைடு)

5. அமிலங்களுடன் வினை: நீர்த்த HCl மற்றும் H2SO4 அமிலங்களுடன் இரும்பு வினைபுரிந்து, H2 வாயுவை வெளியேற்றுகின்றது.

Fe + 2HCl → FeCl2 + H2 ↑

Fe + H2SO→ FeSO4 + H2 ↑

நீர்த்த நைட்ரிக் அமிலத்துடன், இரும்பு குளிர்ந்த நிலையில் வினைபுரிந்து பெரஸ் நைட்ரேட் மற்றும் அம்மோனிம் நைட்ரேட்டை உருவாக்குகின்றது.

4 Fe + 10 HNO3 → 4 Fe(NO3)2 + NH4NO3 + 3 H2O

அடர்கந்தக அமிலத்துடன், இரும்பு வினைபுரிந்து ஃபெரிக் சல்பேட்டை உருவாக்குகின்றது.

2 Fe + 6 H2SO4 → Fe2(SO4)3 + 3 SO2 + 6 H2O

அடர் நைட்ரிக் அமிலத்தில், இரும்பை அமிழ்த்தும் போது இரும்பு ஆக்சைடு படலம் உருவாவதால், இரும்பு தன் திறனை இழக்கின்றது.

 

இரும்பின் வகைகள் மற்றும் பயன்கள்

வார்ப்பிரும்பு (2% - 4.5% கார்பன் உடைய இரும்பு) ஸ்டவ்கள், கழிவு நீர்க் குழாய்கள், ரேடியேட்டர்கள், கழிவு நீர் சாக்கடை மூடிகள் இரும்பு வேலிகள் ஆகியவற்றை உருவாக்கப் பயன்படுகிறது.

எஃகு ( 0.25% - 2%கார்பன் உடைய இரும்பு ) கட்டிடக் கட்டுமானங்கள், எந்திரங்கள் மின்கடத்து கம்பிகள், TV கோபுரங்கள் மற்றும் உலோகக் கலவைகள் ஆகியவற்றை உருவாக்கப் பயன்படுகிறது.

தேனிரும்பு (< 0.25% கார்பன் உடைய இரும்பு ) கம்பிச்சுருள், மின்காந்தங்கள் மற்றும் நங்கூரம் இவற்றை செய்யப் பயன்படுகிறது.

 

Tags : Occurrence of Ores, Physical and Chemical Properties, Uses தாதுக்களின் தோற்றம், இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள், பயன்கள்.
10th Science : Chapter 8 : Periodic Classification of Elements : Extractive Metallurgy of Iron Occurrence of Ores, Physical and Chemical Properties, Uses in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 8 : தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு : இரும்பின் உலோகவியல் - தாதுக்களின் தோற்றம், இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள், பயன்கள் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 8 : தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு