Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | சமத்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள், நன்மைகள், தீமைகள்

பொருளாதாரம் - சமத்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள், நன்மைகள், தீமைகள் | 12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics

   Posted On :  14.03.2022 04:17 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம்

சமத்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள், நன்மைகள், தீமைகள்

அரசே பெரும்பான்மையான தொழில்களை உரிமம் கொண்டு மற்றும் கட்டுப்படுத்தி ஒரு சமுதாயத்தின் ஒழுங்குபடுத்தும் முறையை வரையறுப்பது சமத்துவம் ஆகும்.

2. சமத்துவப் பொருளாதார அமைப்பு (Socialism)


கார்ல் மார்க்ஸ் சமத்துவத்தின் தந்தை ஆவர். சமத்துவம் என்பது மொத்த திட்டமிடுதல், பொது உடமை மற்றும் பொருளாதார நடவடிக்கைளில் அரசின் கட்டுப்பாடு ஆகிய முறைகளை குறிப்பிடுவதாகும். அரசே பெரும்பான்மையான தொழில்களை உரிமம் கொண்டு மற்றும் கட்டுப்படுத்தி ஒரு சமுதாயத்தின் ஒழுங்குபடுத்தும் முறையை வரையறுப்பது சமத்துவம் ஆகும். ஒரு சமத்துவ பொருளாதார அமைப்பை, திட்டமிட்ட பொருளாதாரம் (Planned Economy) அல்லது கட்டளைப் பொருளாதாரம் (Command Economy) என்றும் அறியப்படுகிறது.


ஒரு சமத்துவ பொருளாதார அமைப்பின் அனைத்து வளங்களையும் அரசே உரிமமாக்கி பயன்படுத்தும். பொதுநலமே (Public Welfare) அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் பின்புல முக்கிய நோக்கமாகும். வருவாய் மற்றும் செல்வம் பகிர்வதில் சமத்துவம் மற்றும் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்குவதே இதன் குறிக்கோள். ரஷ்யா, சீனா, வியட்நாம், போலந்து மற்றும் கியூபா ஆகியவை சமத்துவ பொருளாதார அமைப்புகளுக்கு உதாரணமாகும். ஆனால் தற்காலத்தில், முற்றிலும் பொருத்தமான சமத்துவ பொருளாதார அமைப்புகள் எங்கும் இல்லை.





சமத்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள்



1. உற்பத்தி மூலங்களின் பொது உரிமம் (Public Ownership)

அனைத்து வளங்களுக்கும் அரசே உரிமம் கொண்டிருக்கும். இதன் பொருள் என்னவெனில், அனைத்து உற்பத்திக் காரணிகளும் பொது அதிகாரத்தால் (அரசால்) தேசிய மயமாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்.


2. மைய திட்டமிடல் (Central Planning)

ஒரு சமத்துவ பொருளாதார அமைப்பில், திட்டமிடுதல் என்பது ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். இந்த அமைப்பு முறையில், மைய திட்ட அதிகாரமே அனைத்து முடிவுகளையும் மேற்கொள்ளும்.


3. அதிகபட்ச சமூக நலன் (Social Benefit)

சமூக நலன் அனைத்து பொருளாதார நடவடிக்கையின் வழி காட்டுக் கொள்கையாகும். பெரும்பாலான பயன்கள் சமூகத்திற்கு சம அளவில் பகிரும்படியாக முதலீடுகள் திட்டமிடப்படுகின்றன.


4. போட்டி இல்லாமை

சமத்துவ பொருளாதார அமைப்பு முறையில் போட்டி இல்லாத அங்காடி காணப்படும். பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தியையும், பகிர்வையும் அரசே முற்றிலும் கட்டுப்படுத்துகிறது. நுகர்வோருக்கு ஒரு வரையறுக்கப்பட்ட விருப்ப அளவே உண்டு .


5. விலை இயங்கு முறை இல்லாமை (Price mechanism)

மையதிட்ட அதிகாரத்தின் கட்டுபாடு மற்றும் ஒழுங்குப்படுத்துதலின் அடிப்படையில் விலை நிர்ணய முறை காணப்படும்.


6. வருவாயில் சமத்துவம் (Equality of Income)

சமத்துவ பொருளாதார அமைப்பின் மற்றொரு அத்தியாவசிய தன்மையானது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதும் மற்றும் குறைப்பதும் ஆகும். சமத்துவ பொருளாதாரத்தில், தனியார் சொத்துரிமை மற்றும் வாரிசு சொத்துரிமை நடைமுறையில் இல்லை.


7. வாய்ப்புகளில் சமத்துவம் (Equality of Opportunity)

இலவச மருத்துவம், கல்வி மற்றும் பயிற்சி ஆகியவை சமத்துவ பொருளாதாரத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்.


8. வகுப்பு பேதமில்லா சமூகம் (Classless Society)

சமத்துவ பொருளாதாரத்தில், வகுப்பு பேதமில்லா சமூகம்மற்றும் வகுப்பு சண்டைகள் இல்லை. ஒரு உண்மையான சமத்துவ சமூகத்தில், பொருளாதார நிலையில் அனைவரும் சமம்.



சமத்துவ பொருளாதார அமைப்பின் நன்மைகள்



1. ஏற்றத்தாழ்வுகளில் குறைவு

எந்த நபராலும் தனியார் சொத்துக்களை உரிமம் கொண்டு மற்றும் பயன்படுத்துவதன் மூலம் மற்றவர்களை சுரண்ட அனுமதி இல்லை.


2. வளங்கள் அறிவார்ந்த முறையில் ஒதுக்கீடு

மைய திட்ட அதிகாரத்தால் திட்டமிட்டபடி வளங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வளங்கள் விரயமாவது குறைக்கப்படுவதுடன் முன்திட்ட அடிப்படையில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகிறது.


3. வகுப்பு சண்டைகள் இல்லாமை

ஏற்றத்தாழ்வுகள் குறைவாக இருப்பதால், பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கிடையேயான சண்டைகள் இருப்பதில்லை. சமூகம் சுமுகமான சூழலில் செயல்படும்.


4. வாணிக சூழலுக்கு முடிவு

பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் பகிர்வை திட்ட அதிகாரமே முழு கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் அதனால், தவிர்க்க முடியும்.


5. சமூக நலன் முன்னேற்றம்

சுரண்டல் இல்லாமை, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்படுகிறது. ஏற்றத்தாழ்வுமிக்க வாணிகச் சுழல் தவிர்த்தல் மற்றும் உற்பத்தித்திறன் அதிகரித்தல் ஆகியவை சமூக நலன் வளர உதவுகிறது.



சமத்துவ பொருளாதார அமைப்பின் தீமைகள்



1. சிகப்பு நாடா (Red Tapism) மற்றும் அதிகார வர்க்கம் (Bureaucracy)

அனைத்து முடிவுகளையும் அரசு அமைப்புகளை எடுப்பதாலும், அநேக அலுவலர்களின் அனுமதி பெற வேண்டி, கோப்புகள் ஒரு மேஜையிலிருந்து மற்றொன்றுக்கு செல்ல எடுக்கும் கால அளவு அதிகமாவதாலும் ஒரு சிகப்பு நாடா நிலைக்கு கொண்டு செல்லப்படும்.


2. ஊக்கமில்லாமை (Absence of Incentive)

சமத்துவத்தின் மிகப்பெரிய குறை என்பது, இந்த முறையில் திறமைக்கு எந்த ஊக்கமும் அளிப்பதில்லை. எனவே, உற்பத்தி திறனும் பாதிக்கப்படும்.


3. தெரிவு செய்வதில் சுதந்த குறைவு (Limited Freedom & Choice)

பண்டங்கள் மற்றும் பணிகளை நுகர்வதில் தெரிவு செய்யும் சுதந்திரம் நுகர்வோரால் அனுபவிக்க முடியாது.


4. அதிகாரம் குவிதல் (Concentration of Power)

அரசே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது. பொருளாதார தீர்மானங்களில் தனியார் எந்த முயற்ச்சியும் எடுப்பது இல்லை. எனவே, அரசே மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு வாய்ப்பாகவும் அமைகிறது.




Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics : Features, Merits, Demerits of Socialistic Economy (Socialism) Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம் : சமத்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள், நன்மைகள், தீமைகள் - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம்