பலபடி வேதியியல் | மூன்றாம் பருவம் அலகு 3 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - இழைகள் | 7th Science : Term 3 Unit 3 : Polymer Chemistry

   Posted On :  22.05.2022 10:51 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : பலபடி வேதியியல்

இழைகள்

நாம் ஆடைகள் அணிகிறோம், பைகள், கயிறுகள், போர்வைகள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இப்பொருள்கள் அனைத்தும் எந்தெந்த மூலப்பொருள்களால் ஆனது என உங்களுக்குத் தெரியுமா? இவை அனைத்தும் இழைகளால் ஆனவை. முற்காலங்களில் வாழ்ந்த மக்கள், பருத்தி மற்றும் கம்பளி போன்ற இயற்கை இழைகளைப் பயன்படுத்தினர். தற்பொழுது நாம் அதிகளவு செயற்கை இழைகளால் ஆன பொருள்களைப் பயன்படுத்துகிறோம்.

இழைகள்

நாம் ஆடைகள் அணிகிறோம், பைகள், கயிறுகள், போர்வைகள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இப்பொருள்கள் அனைத்தும் எந்தெந்த மூலப்பொருள்களால் ஆனது என உங்களுக்குத் தெரியுமா? இவை அனைத்தும் இழைகளால் ஆனவை. முற்காலங்களில் வாழ்ந்த மக்கள், பருத்தி மற்றும் கம்பளி போன்ற இயற்கை இழைகளைப் பயன்படுத்தினர். தற்பொழுது நாம் அதிகளவு செயற்கை இழைகளால் ஆன பொருள்களைப் பயன்படுத்துகிறோம். இயற்கை மற்றும் செயற்கை இழைகள் அனைத்தும் பலபடிபொருள்களே,

இயற்கை மற்றும் செயற்கை இழைகளுக்கு இடையேஉள்ள வேறுபாடுகளை உற்றுநோக்குக.



1. இயற்கை மற்றும் செயற்கை இழைகள்

நீண்ட மூலக்கூறுகள் பின்னிப் பிணைந்து நீளமான, சரம் போன்ற அமைப்பு உருவாக்கப்படும் இழைகள், இயற்கை இழைகளாகும். பருத்தி, தேங்காய் நார், முடி, கம்பளி போன்றவை இயற்கை இழைகளின் எடுத்துக்காட்டுகள் ஆகும். பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட மூலப்பொருள்களைக்கொண்டு உருவாக்கப்படும் இழைகளுக்குச் செயற்கை இழைகள் என்று பெயர். பாலியெஸ்டர், அக்ரிலிக் மற்றும் நைலான் போன்றவை செயற்கை இழைகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். காலங்காலமாக, தாவர இழைகள் மற்றும் விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட உரோமங்களைக் கொண்டு இழைகள் உருவாக்கி, அவற்றைக் கொண்டு உடை தயாரித்தும், தங்குமிடம் அமைத்தும், வானிலையிலிருந்து மனிதர்கள் தம்மைப் பாதுகாத்தும் வந்தனர். இன்றும்கூட, பலவகையான இயற்கை இழைகள், தாவர மற்றும் விலங்கு மூலங்களாக வளர்க்கப்பட்டும், பதப்படுத்தப்பட்டும் பருத்தி, பட்டு மற்றும் கம்பளி போன்ற இழைகளாக இயற்கை வெளிவருகின்றன. இயற்கை நார்களைச்சுழற்றி இழையாக, நூலாக, கயிறாக ஆக்க முடியும். அதன்பின் அவற்றை நெய்தோ , பின்னியோ, படரவிட்டோ, இணைத்தோ, துணிகளாகவும், கலன்களாகவும், மின்கடத்தாப் பொருள்களாகவும், மற்றும் நம் அன்றாட வாழ்வில் பயன்படும் இன்னபிற பொருள்களாகவும் மாற்ற முடியும். இயற்கை இழையை உருவாக்கும் குறிப்பிடத்தக்க மூன்று மூலங்களாவன:



2. வகைகள் மற்றும் பயன்கள்

பட்டு : இயற்கை இழை

குறிப்பிட்ட சிலவகைப் பட்டுப்புழுக்களின் கூடுகளை கொதிக்க வைத்துப் பெறும் இயற்கை இழைகள் பட்டாகும். மல்பெரி பட்டு, டஸ்ஸர் பட்டு, முகா பட்டு மற்றும் எரி பட்டு என நான்கு வகைகளில் இயற்கை பட்டு கிடைக்கிறது. உலகெங்கிலும் உற்பத்தியாகும் மல்பெரி வகை பெருமளவு இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இவை உடைகளாகவும், தரைவிரிப்புகளாகவும், பாராசூட்டுகளாகவும் பயன்படும் பட்டுகளாகவும், வலிமையான இயற்கை இழைகளுள் ஒன்றாகும்.


பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் ரேயான் என்ற பெயரில் முதல் செயற்கை பட்டினை உருவாக்குவதில் வெற்றி கண்டனர். 1946 - இல் இந்தியாவில் கேரள மாநிலத்தில் முதல் ரேயான் தொழிற்சாலை நிறுவப்பட்டது. மனிதனால் தயாரிக்கப்பட்ட இழையான ரேயானை முழுமையான செயற்கை இழை என்று சொல்வதற்கில்லை, ஏனெனில் மரக்கூழிலிருந்து பெறப்பட்ட செல்லுலோசினால் ரேயான் தயாரிக்கப்படுகிறது. மரம் அல்லது மூங்கிலின் கூழிலிருந்து பெறப்பட்ட செல்லுலோசை பல வேதிப்பொருள்களைச் சேர்த்து திடப்படுத்தினர் முதலாவதாக, கூழுடன் சோடியம் ஹைட்ராக்ஸைடு சேர்க்கப்பட்டு பின்னர் கார்பன்-டைசல்பைடு சேர்க்கப்படுகிறது. சேர்க்கப்பட்ட வேதிப்பொருள்களுடன் செல்லுலோஸ் கரைந்து விஸ்கோஸ் என்ற திரவத்தினை உருவாக்குகிறது. திரவ விஸ்கோஸினை ஓர் ஸ்பின்னரெட்டின் (பக்க நுண்ணிய துளைகள்கொண்ட உலோகத்தட்டுகள் பொருந்திய ஒரு சாதனம்) வழியே அழுத்தி, நீர்த்த கந்தக அமிலத்தினுள் செலுத்தும் பொழுது பட்டு போன்ற இழைகள் கிடைக்கின்றன. அந்த இழைகளினை கோப்பினால் சுத்தம் செய்து, உலர வைத்துப் பெறும் புதிய இழைகளுக்க ரேயான் என்று பெயர்

பருத்திப்பூக்களில் உள்ள விதைகளை நீக்கும் பொழுது, பருத்திக் கொட்டைகளில் ஒட்டியிருக்கும் குட்டையான பருத்தி இழைகளில் இருந்தும் சிலவகை ரேயான்கள் தயாரிக்கப்படுகின்றன. பட்டினைவிட விலை மலிவாகவும், பட்டு இழை போன்றே நெய்யப்பட்டும், பலவகை வண்ணச் சாயங்களால் நிறமேற்றப்பட்டும் ரேயான் தயாரிக்கப்படுகிறது. ரேயானை பருத்தியுடன் கலந்து போர்வையாகவும், கம்பளியுடன் கலந்து விரிப்பாகவும் பயன்படுத்துகிறோம். மேலும், சுகாதாரப் பொருள்களான பயபர்களாகவும், காயங்களுக்கு மருந்திடும் வலைத்துணிகளாகவும் பேண்டேஜ் துணிகளாகவும் ரேயான் பயன்படுகிறது.

நைலான் : செயற்கை இழை 

முதன்முதலில் முழுமையாகப் பதப்படுத்தப்பட்ட செயற்கை இழை நைலானாகும். இரண்டாம் உலகப் போரின் பொழுது, பாரசூட்டுகள் மற்றும் கயிறு போன்ற பொருள்களைத் தயாரிக்க நைலான் பயன்படுத்தப்பட்டது. ஆடை தயாரிப்புகளில், இயற்கைப் பட்டின் பதிலியாக ரேயான் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது, இன்று நாம் பயன்படுத்தும் செயற்கை இழைகளுள் அதிகம் பயன்படும் இழையாக நைலான் விளங்குகிறது.

நைலான் இழை வலுவாகவும், நீட்சித்தன்மை கொண்டதாகவும், எடை குறைவாகவும் உள்ளது. பளபளக்கும் தன்மை கொண்டதாகவும், தோய்ப்பதற்கு எளிதானதாகவும் இருப்பதால் ஆடைத் தொழிற்சாலைகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காலுறைகள், கயிறுகள், கூடாரங்கள், பல்துலக்கிகள், கார்களில் இருக்கையின் பட்டைகள், தூங்கத் தேவைப்படும் தலையணை போன்ற பைகள், திரைச்சீலைகள் போன்ற பலவகையான பொருள்கள் நைலானால் ஆனவை. ஓர் இரும்புக் கம்பியைக் காட்டிலும் ஒரு நைலான் இழையானது வலிமையாக இருப்பதால், பாரசூட்டுகள் தயாரிப்பிலும், மலை ஏறத் தேவையான கயிறுகள் தயாரிப்பிலும் நையான்கள் பயன்படுகின்றன.


நைலான் இழை அதிக வலுவானதாக உள்ளதால் மலை ஏறவும் பயன்படுத்தப்படுகிறது.

நைலான் என்ற பலபடி இழையானது - பாலிஅமைடுகள் என்ற வேதித்தொகுப்புகளால் ஆனது. ஹெக்ஸாமெத்திலீன்-டை - அமின் மற்றும் அடிபிக் அமிலங்கள் இணைந்து உருவாகும் பொருள் பாலி அமைடுகள். திண்ம சில்லுகளாக இந்த பாலிஅமைடுகளை உருக்கி, -வெப்பமாக்கப்பட்ட ஸ்பின்னரெட்டின் மிக நுண்ணிய துளைகளில் அழுத்தும்பொழுது நைலான் உருவாகிறது.



இழைகளை அவற்றின் வலிமை அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்திக

விடை : பருத்தி, கம்பிளி, பட்டு, நைலான்

மேலே உள்ள செயல்பாட்டிலிருந்து நீவிர் அறிவது யாது?

விடை : நைலான் நூல் வலிமையான நூல் ஆகும்.

எந்த வகை இழை அதிக வலிமையானது?

விடை : நைலான்

எந்த வகை இழை வலிமை குறைவானது?

விடை : பருத்தி


இரும்புத் தாங்கியில் கிளாம்ப் பொருத்தப்பட்டு முனையில் எடைகற்கள்


செயல்பாடு : 2

நைலான் எவ்வளவு வலிமையானது?

இரும்பாலான தாங்கி ஒன்றினை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு கிளாம்பினைப் பொருத்தவும். 50செ.மீ நீளமுடைய பருத்தி இழை, நைலான் இழை மற்றும் பட்டு இழைகளை எடுத்துக் கொள்.

முதலில், பருத்தி இழையின் ஒரு முனையைத் தாங்கியில் கட்டித் தொங்கவிட்டு, அதன் கட்டப்படாமல் முனையில் எடைகற்கள் வைக்கக்கூடிய அளவிற்கு ஒரு குறுந்தட்டினை பொருத்தமாகத் தொங்கவிடுக. பின்னர் குறந்தட்டின்மேல் பத்து கிராமில் தொடங்கி, ஒவ்வோர் எடைகல்லாக வைத்துக் கொண்டே வருக, நூல் அறுந்து போகும்வரை வரை எடைகற்களை ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, அறுந்துபோகும் போது, எந்த எடையில் கயிறு அறுந்தது என்பதனைக் குறித்துக் கொள்க. இதே செயல்பாட்டினை கம்பளி நூல், பட்டு நூல் மற்றும் நைலான் இழைகள் கொண்டு மீளச் செய்க. 

குறிப்பு : அனைத்து வகை இழைகளும் ஒரே தடிமனாக இருக்க வேண்டும்.


கீழ்க்காணும் அட்டவணையில் தகவல்களை நிரப்புக





பாலியெஸ்டர் மற்றும் அக்ரிலிக் :

செயற்கை இழைகள்

பாலியெஸ்டர் மற்றொரு செயற்கை இழையாகும். இதனை மிக மெல்லிய இழைகளாக இழுத்து, மற்ற நூல்களை நெய்வது போல், நெய்யவும் முடியும். பாலிகாட், (polycot) பாலிவுல், (polywool) டெரிகாட் போன்ற பல பெயர்களால் பாலியெஸ்டர் விற்பனை செய்யப்படுகிறது. பாலிகாட் என்பது பாலியெஸ்டர் மற்றும் பருத்தியின் கலவை, பாலிவுல் என்பது பாலியெஸ்டர் மற்றும் கம்பளியின் கலவை.

PET (பாலிஎத்திலின் டெரிப்தாலேட் - Poly Ethylene Terephthalate) என்பது மிகப் பிரபலமான பாலியெஸ்டர் வகையாகும். PET -யைக் கொண்டு நீர் மற்றும் சோடா பாட்டில்கள், கலன்கள், படங்கள், இழைகள் மற்றும் இன்னபிற பயனுள்ள பொருள்களைத் தயாரிக்கலாம். இந்த இழைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் துணிகள் எளிதில் சுருங்குவதில்லை, மேலும் பாலியெஸ்டர் துணிகளைத் தோய்ப்பது எளிது, அதனால், பலவகையான ஆடைகள் தயாரிப்பில் பாலியெஸ்டர் இழைகள் பயன்படுகின்றன.

குளிர்காலங்களில் நாம் ஸ்வெட்டர்கள் அணிகிறோம், சால்வைகள் மற்றும் போர்வைகளைப் பயன்படுத்துகிறோம், அல்லவா? இவற்றுள் பெரும்பாலானவை கம்பளியைப் போல் தோற்றமளித்தாலும், அப்பொருள்கள் இயற்கை கம்பளி இழைகளால் செய்யப்பட்டவை அல்ல. இவை அக்ரிலிக் என்ற மற்றொரு வகை செயற்கை இழையால் செய்யப்பட்டவை ஆகும். இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படும் கம்பளி ஆடைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. நெகிழிகளின் தயாரிப்பின் பொழுது கிடைக்கும் துனைப்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த அக்ரிலிக் ஆடைகள், கம்பளி ஆடைகளைக் காட்டிலும் விலை மலிவானவை. பலவித வண்ணங்களிலும் ஆடைகள் விற்பனையாகின்றன. இவ்வாறாக, செயற்கை இழைகளின் நீடித்து உழைக்கும் தன்மையும், அனைவரும் வாங்கக்கூடிய அளவில் மலிவான விலையும், அவற்றின் பரவலான பயன்பாட்டிற்குப் பங்களிக்கின்றன.



செயல்பாடு : 3

இழையினை இனங்காண்க : ஒரு செயல்பாட்டினைச் செய்வோமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களைக் கண்டு அவை எந்த வகையான இழைகளால் ஆனவை என்பதனை இனம் காண்போமா



செயல்பாடு : 4

செயற்கை இழையா? இயற்கை இழையா? 

பல இழைகளாவன துண்டுத் துனிகளை, மாணவர்கள் ஒவ்வொருவரையும் தொட்டுப் பார்க்கச் செய்க. ஒவ்வோரு துண்டுத் துணியும், எந்த வகை இழையால் செய்யப்பட்டது என்பதனைக் கண்டறிந்து, அது செயற்கை இழையா அல்லது இயற்கை இழையா என வகைப்படுத்த வேண்டும்.



1. சணல் – இயற்கை 

2. பருத்தி  – இயற்கை

3. ரேயான்  – செயற்கை 

4. கம்பிளி  – இயற்கை

5. பாலிஸ்டர்   செயற்கை

இதுவரை நான்கு செயல்பாடுகளைச் செய்துள்ளோம். இவற்றுள் எந்தச் செயல்பாடு, கொடுக்கப்பட்ட துணியிலுள்ள இழையின் வகையினை இனம் காண உதவியது எனக் கூற இயலுமா? 

விடை : செயல்பாடு : 3, 4

(நமக்கு நன்கு அறிமுகமான படங்களைக் காட்டியும், அப்படங்களிலுள்ள பொருள்களின் இழைகளை மாதிரியாகக் கொடுத்துத் தொட்டுப் பார்த்ததும், அந்த இழையின் வகையை இனம்காண உதவியது அல்லவா!) இதுவரையில் நாம் பாலியெஸ்டர், நைலான், அக்ரிலிக் போன்ற இழைகளால் ஆன பொருள்களைப் பற்றி படித்தோம். இந்தச் செயற்கை இழைகள் அனைத்தும் பலபடிபொருள்கள் என்றழைக்கப்படும். பலபடி பொருள்கள் பற்றி மேலும் சில பக்கங்களில் விவரமாக அறியவிருக்கிறோம்.


செயல்பாடு : 5 

இயற்கை இழையால் ஆன ஒரு துண்டுத்துணியினையும் செயற்கை இழையால் ஆன ஒரு துண்டுத்துணியினையும் எரித்தல்

குறிப்பு : இந்தச் செயல்பாட்டினை ஆசிரியரே மாணவர்களுக்குச் செய்து காட்ட வேண்டும்.

பருத்தியால் ஆன துண்டுத்துணி ஒன்றினையும், பாலியெஸ்டராலான ஆன துண்டுத்துணி ஒன்றினையும் எடுத்துக்கொள்க. இரு துண்டுத்துணிகளும் ஒரே அளவாக இருக்கலாம். (2 செ.மீ ×  2 செ.மீ போதுமானது). தீச்சுடர் மற்றும் வெப்பத்திலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள துணிகளை இடுக்கியால் பிடித்திடுக. இரு துண்டுத் துணிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக எரித்து, அவை எரியும்பொழுது என்ன நிகழ்கிறது என உற்றுநோக்குக.

பருத்தித் துணி எரியும் பொழுது நீங்கள் கண்டது என்ன?

பருத்தித் துணி முற்றிலும் எரிந்துவிடும் உருகாது மற்றும் காகிதம் எரிவது போல் வாசனை வருகிறது

பாலியெஸ்டர் துணி எரியும்பொழுது நீங்கள் கண்டது என்ன?

பாலியெஸ்டர் துணி எறியும் பொழுது கரும்புகை உண்டாகிறது

இயற்கை இழைகளின் (பருத்தி) எரிதல், செயற்கை இழைகளின் (பாலியெஸ்டர்) எரிதலில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருப்பதைக்  கவனித்திருப்பீர்கள்.

பருத்தித் துணியினைச் சுடரில் காட்டியபொழுது அது எரிந்திருக்கும். மாறாக, செயற்கை இழைகளைக் கொண்ட பாலியெஸ்டர் துணியானது சுடரில் காட்டியபொழுது அது உருகியிருக்கும். செயற்கை இழைகளால் ஆன ஆடைகளை அணிவதிலுள்ள குறைபாடுகளுள் இதுவும் ஒன்று. செயற்கை இழையாலான ஆடை அணிந்திருக்கும் பொழுது, துணி தீப்பற்றினால் அந்த ஆடை உருகி உடம்புடன் ஒட்டிக்கொண்டு கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே, சமைக்கும்பொழுதும் ஆய்வகங்களில் பணியாற்றும்பொழுதும், செயற்கை இழைகளால் ஆன ஆடைகளை அணியக் கூடாது



பெட்ரோலிய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வாயுவினை காய்ச்சி வடிக்கும்பொழுது கிடைக்கும் துணை விளைபொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் பொருள்களே செயற்கை இழைகளாகும். பெட்ரோலிய எண்ணெய்யைக் காய்ச்சி வடித்தல் பற்றி உயர் வகுப்புகளில் கற்றுக் கொள்வீர்கள்.




செயல்பாடு : 6 

ஒரு பருத்தித்துணி மற்றும் குடைத்துணியை நனைத்தல்

மழை நாள்களில் நாம் குடை பயன்படுத்துகிறோம் அல்லவா? நாம் என்ன வகையான குடை  பயன்படுத்துகிறோம்? பாலியெஸ்டர், நைலான்

பருத்தித் துணியால் ஆன குடையினைப் பயன்படுத்த முடியுமா? முடியாது

மழைநீரில் இருந்து நம்மைத் பாதுகாத்துக் கொள்ள, நாம் ஏன் பருத்தித்துணியால் ஆன குடையினைப் பயன்படுத்துவதில்லை என்ற கருத்தினில் தெளிவு பெற, தற்பொழுது ஒரு செயல்பாட்டினைச் செய்வோமா?

தோரயமாக 10 செ.மீ × 10 செ.மீ என்ற அளவில் பருத்தித்துணி ஒன்றினையும், அதே அளவிலான நைலான் அல்லது பாலியெஸ்டர் இழைகளாலான பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள ஓட்டைகள் ஏதுமற்ற பழைய குடைத்துணி ஒன்றினையும் எடுத்துக்கொள்க. நான்கு மாணவர்களை அழைத்து, அவர்களிடம் பருத்தித் துணியினைக் கொடுத்து, துணியின் நான்கு மூலைகளையும், ஒவ்வொருவர் ஒரு மூலை வீதம் பிடிக்கச் சொல்லி, துணியின் நடுவில் ஒரு டம்ளர் அளவுள்ள நீரை ஊற்றச் சொல்லவும். பின்னர், பழைய குடைத்துணியினையும் அதேபோல் மூலைக்கு ஒருவர் வீதம் நான்கு மூலைகளிலும் பிடித்துக் கொண்டு, துணியின் நடுவில் ஒரு டம்ளர் அளவுள்ள நீரை ஊற்றச் சொய்க. பருத்தி மற்றும் குடைத்துணி – இவ்விரண்டிலும் நீர் ஊற்றியபொழுது ஏற்பட்ட நிகழ்வுகளை உற்றுநோக்கி உமது குறிப்பேட்டில் நிகழ்வுகளைப் பதிவிடுக.

பருத்தித் துணி அல்லது குடைத்துணி (நைலான் அல்லது பாலியெஸ்டர்) தற்பொழுது, மாணவர்களை இரு துண்டுத் துணிகளையும் சூரிய ஒளியில் உலர்த்தச் சொல்லவும். எந்தத் துணி விரைவில் உலருகிறது? பருத்தித்துணி அல்லது குடைத்துணி? குடைத்துணி

எடுத்துக்கொண்ட இரு துணிகளுள் எது நீரினைத் தன் வழியே செல்ல அனுமதிக்கிறது? பருத்தித் துணி அல்லது குடைத்துணி

குடைத்துணி தன் வழியே நீரை செல்ல அனுமதிக்கிறது

(நைலான் அல்லது பாலியெஸ்டர்) தற்பொழுது, மாணவர்களை இரு துண்டுத் துணிகளையும் சூரிய ஒளியில் உலர்த்தச் சொல்லவும். எந்தத் துணி விரைவில் உலருகிறது?  பருத்தித்துணி அல்லது குடைத்துணி?

குடைத்துணி
Tags : Polymer Chemistry | Term 3 Unit 3 | 7th Science பலபடி வேதியியல் | மூன்றாம் பருவம் அலகு 3 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 3 Unit 3 : Polymer Chemistry : Fibres Polymer Chemistry | Term 3 Unit 3 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : பலபடி வேதியியல் : இழைகள் - பலபடி வேதியியல் | மூன்றாம் பருவம் அலகு 3 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : பலபடி வேதியியல்