Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | களப்பணி செயல்பாடுகள்

புவியியல் - களப்பணி செயல்பாடுகள் | 11th Geography : Chapter 13 : Field Work and Report Writing

   Posted On :  15.05.2022 09:33 pm

11 வது புவியியல் : அலகு 13 : களப்பணி மற்றும் அறிக்கை தயாரித்தல்

களப்பணி செயல்பாடுகள்

இயற்புவியியல் மற்றும் மானுடப் புவியியல் சார்ந்த களப்பணி மேற்கொள்வதில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன.

களப்பணி செயல்பாடுகள்

இயற்புவியியல் மற்றும் மானுடப் புவியியல் சார்ந்த களப்பணி மேற்கொள்வதில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. இயற்புவியியல் சார்ந்த களப்பணி நேரடி உற்றுநோக்கல்புகைப்படம்கள சுருக்கப்படம்நில வரைப்பட பயன்பாடுசெயற்கைக்கோள் புகைப்படங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது. மானுடப் புவியியல் படிப்பின் தேவையானது மாதிரி ஆய்வுவினாத்தாள் தொகுப்பு தயாரித்தல்நேர்காணல்புள்ளி விவரப் பகுப்பாய்வுவிளக்கமளிக்க புள்ளி விவர தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கியது.

அனைத்து களப்பணிகளும் மூன்று நிலைகளை உள்ளடக்கியுள்ளது. அவை


1. களப்பணிக்கு முன்பு


2. களப்பணியின் பொழுது


3. களப்பணிக்கு பிறகு

 

1. களப்பணிக்கு முன்பு

இது முறையான திட்டமிடல்தயாரித்தல் மற்றும் முன்னேற்பாடுகளை செய்தல் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. இப்பணியானது ஆசிரியர் / பள்ளி நிர்வாகம் அல்லது பொறுப்பாளார்களால் மேற்கொள்ளப்படுகிறது.

களப்பயணம் குறித்த தகவல்களை முதன்மை கல்வி அலுவலர்/மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் களப்பயணம் மேற்கொள்ளும் பகுதியின் காவல் நிலையத்திற்கும் களப்பயணத்தில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியரின் பெயர்முகவரி,தொடர்பு எண்கள் போன்றதகவல்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

தேவையான அளவு உணவுப் பொருட்கள், குடிநீர் போன்றவற்றிற்கான முன்னேற்பாடுகள் செய்தல். மாணவர்களுக்கு தேவையான உடைகள் குறித்து அறிவுறுத்த வேண்டும். (கம்பளி, தொப்பி, காலணிகள், கம்பளி ஆடை, கொசு விரட்டிகள்)

களப்பயண மேற்கொள்ளும் இடத்திற்கான சுருக்கப் படம் ஆசிரியரின் உதவியுடன் சிறிய மாணவர் குழுவினரால் வரையப்பட வேண்டும். களப்பயணம் மேற்கொள்வதற்கான நோக்கம் மற்றும் இலக்கு குறித்து மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும். கள ஆய்வு முறை மற்றும் ஆய்வுக்கான உபகரணங்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

களப்பயணம் மேற்கொள்ளும் இடத்திற்கான சுருக்க வரைபடம் தயாரிக்கும் முறை பற்றி பலகுழுக்களில் உள்ள மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் அவ்விடத்தின் நில வரைபடம் வழங்கப்பட வேண்டும். களப்பயணத்தின் போது செய்யக்கூடிய மற்றும் செய்யக் கூடாதவை பற்றி தெரிவிக்க வேண்டும். இயற்புவியியல் சார்ந்த களப்பயணம் மேற்கொள்ள தேவையான பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. எழுது பொருட்கள் (Stationeryநோட்டு புத்தகங்கள்பென்சில்மெழுகு பென்சில்காகிதம் மற்றும் பேனா போன்றவை.

2. சிறந்த தொழில் நுட்ப வசதிக் கொண்ட புகைப்பட கருவி

3. ஒலி/காட்சி பதிவு கருவிபறவைகளின் ஒலி மற்றும் அங்குள்ள மக்களின் குரலை பதிவு செய்ய .

4. போதுமான எண்ணிக்கையில் உருப்பெருக்கி (பைனாகுலர்) தூரத்தில் உள்ளவற்றை பார்க்க தேவைப்படுகிறது.

5. கள ஆய்வுக்கு தேவையான சிறிய கருவிகள் அதாவது அளவை நாடாகாந்ததிசைக்காட்டிசாய்வு மானி, (GNSS – Global Navigation satellite Systemகையடக்கக் கருவி போன்றவை.

6. வானிலை கருவிகள் - களப்பயணம் வானிலையோடு தொடர்புடையது (வெப்பமானி, மழைமானி, காற்றழுத்த மானி, காற்று திசைகாட்டி)

7. களப்பயண பகுதியின் நிலவரைபடம், தலப்படம், செயற்கை கோள் புகைப்படம்.

 

2. களப்பயணத்தின் பொழுது (தகவல் சேகரிக்கும் முறை)

மாணவர்கள் உள்ளூர் ஆய்வுப் பகுதியை அடைந்தவுடன் உண்மையான களப்பணி தொடங்கப்பட்டு தகவல் சேகரிக்கப்பதன் மூலமாக

1. விவரங்களை உற்றுநோக்கி குறிப்பு எடுத்துக் கொள்ளுதல். மாணவர்கள் புகைப்படம்ஒலி/காட்சிப் பதிவுக் கருவிகள் மூலம் தகவல்களை பதிவு செய்தல்

2. கள சுருக்கப் படத்தை வண்ணப் பென்சில் கொண்டு தயாரித்ததல்.

3. கருவிகளைக் கொண்டு தொலைவுவானிலைக் கூறுகள்உயரம்ஆழம் போன்றவற்றை அளத்தல்.

4. காந்த திசைக்காட்டி மற்றும் வரைபடங்கள் திசைஅமைவு பயன்படுத்தி திசையை கண்டுபிடித்தல்.

5. நில வரைபடத்தை படித்தறியும் திறனை பயிற்சியின் மூலமாக நினைவூட்டி செயற்கைக் கோள் புகைப்படங்கள் மற்றும் வானியல் புகைப்படங்கள் போன்றவற்றின் விவரங்களை விவரிக்கச் செய்தல்.

6. உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு (GNSS) மற்றும் இணையதளத்தின் அடிப்படையிலான வசதிகளைப் பயன்படுத்தி முக்கியமான இடங்களையும் பாதைகளையும் கண்டறிதல்.

7. தனித்துவம் வாய்ந்த பாறை, மண், மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீரின் மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வு செய்யவும், வகுப்பறை கலந்துரையாடலுக்கும், கண்காட்சி அமைக்கவும் பயன்படுத்துதல். களப்பணி மேற்கொள்ளும் இடத்திலிருந்து தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள் போன்றவற்றை சேகரிக்கக்கூடாது.

8. இரண்டாம் நிலை தகவல்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அப்பகுதியின் அலுவலக பொறுப்பாளர்களிடம் பெற முடியும்.

களப்பணியில் பல நன்மைகளும் சில கட்டுப்பாடுகளும் உள்ளன. அவை

1. இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதோடு செலவும் அதிகமாகும்.

2. இதற்கான உபகரணங்கள், வரைபடங்கள், செயற்கைகோள் புகைப்படங்கள், போன்றவை விவரணம் செய்ய தேவைப்படுகிறது.

3. தடை செய்யப்பட்ட பகுதிகளை பார்வையிட அரசு நிறுவனங்களில் இருந்து பெற வேண்டிய அனுமதி விரைவில் கிடைக்காமல் தாமதமானால் நாம் மேற்கொள்ள வேண்டிய களப்பணி நிலையற்றதாகிவிடும்.

4. களப்பயணம் மேற்கொள்ளும் பொழுது காலநிலை மாற்றம்களப்பயணம் சார்ந்த நோய்கள் போன்ற சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

 

3. களப்பணிக்கு பிறகு

களப்பணியின் பொழுது பெறப்பட்ட தகவல்களை வரிசையின்படி தொகுக்க வேண்டும். தேவையான புகைப்படங்கள் மற்றும் மாதிரிப் படங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கணக்கீடுகள் மேற்கொள்ளப்படுதல், முடிவுகள் அறியப்படுதல், நிலவரைப்படம் வரையப்படுதல் மற்றும் அறிக்கை தயாரித்தல்.


Tags : Geography புவியியல்.
11th Geography : Chapter 13 : Field Work and Report Writing : Field work process Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 13 : களப்பணி மற்றும் அறிக்கை தயாரித்தல் : களப்பணி செயல்பாடுகள் - புவியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 13 : களப்பணி மற்றும் அறிக்கை தயாரித்தல்