Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | கோப்பு, கோப்புத் தொகுப்பு

காட்சித்தொடர்பு - கோப்பு, கோப்புத் தொகுப்பு | 10th Science : Chapter 23 : Visual Communication

   Posted On :  01.08.2022 01:41 am

10வது அறிவியல் : அலகு 23 : காட்சித்தொடர்பு

கோப்பு, கோப்புத் தொகுப்பு

அதென்ன கோப்பு? கணினியில் இடம் பெற்றிருக்கும் செயலி முலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் கோப்பு என்று அழைக்கப்படும். ஆகவே நாம் பயன்படுத்தும் செயலியின் தன்மையைக் கொண்டே கோப்பின் தன்மை அமையும்.

கோப்பு

அதென்ன கோப்பு? கணினியில் இடம் பெற்றிருக்கும் செயலி முலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் கோப்பு என்று அழைக்கப்படும். ஆகவே நாம் பயன்படுத்தும் செயலியின் தன்மையைக் கொண்டே கோப்பின் தன்மை அமையும்.

எ.டு. word document

 

கோப்புத் தொகுப்பு :

கோப்புத் தொகுப்பு என்றால் என்ன? கோப்புத் தொகுப்பு என்பது பல கோப்புகளை உள்ளடக்கிய பெட்டகம் போன்றது ஆகும். இவற்றைத் தேவைக்கேற்ப பயனரால் உருவாக்கிக் கொள்ள முடியும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமெனில் நம் வீட்டில் உள்ள புத்தக அலமாரிகளில் உள்ள ஒரு புத்தகம் என்பது கோப்பு என்றும் புத்தக முழுமையையும் கொண்ட அலமாரியைக் கோப்புத்தொகுப்பு என்றும் எளிதில் கூறிவிடலாம். சரி கோப்புகளை உருவாக்குவது எப்படி? பொதுவாகச் சுட்டியின் வலப்புறப் பொத்தானை அழுத்தியதும் கணினித் திரையில் New எனத் தோன்றும். அதில் Folder என்பதைச் சொடுக்கினால் புதிய கோப்புத் தொகுப்பு நம் பயன்பாட்டிற்குத் தயாராகிவிடும். இந்த கோப்புத் தொகுப்பில் நாம் உருவாக்கிய கோப்புகளை விருப்பப்படி சேமித்து வைக்கலாம்.


அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் இயக்க மென்பொருளான விண்டோஸ் மற்றும் லினக்ஸில் குறிப்புகளைச் சேகரித்தல், படங்கள் வரைதல், அசைவூட்டப் படங்கள் தயாரித்தல் போன்ற பல செயல்களைத் தனித்தனியாக நம்மால் செய்ய இயலும்.

எப்படி முன் பின் தெரியாத ஊர்களுக்குச் செல்ல ஆங்காங்கே வழிகாட்டிப் பலகைகள் இருக்கின்றனவோ அதே போல் கணினியை இயக்கத் தொடங்கியவுடன் இடப்புறத்தின் கீழ் உள்ள START என்பதைக் கிளிக் செய்த உடன் கணினியில் உள்ள அனைத்து நிரல்களின் பட்டியல் திரையில் காட்டப்படும். அதில் நமக்குத் தேவையானதைத் தேர்வு செய்துகொள்வதன் மூலம் அந்த நிரல்களில் தேவைக்கேற்ப கோப்புகளை உருவாக்க முடியும்.

 


கோப்புகளை உருவாக்குவது எப்படி?

சான்றாக விண்டோஸ் இயங்குதளம் உள்ள கணினிகளில் நம் குறிப்புகளைச் சேகரித்து வைக்க நோட்பேடு (Notepad) செயலியையும், படங்கள் வரைய பெயிண்டு (Paint) என்னும் செயலியையும் பயன்படுத்தலாம்.

பெயருக்கேற்றபடி Notepad இல் தேவையான குறிப்புகளைத் தட்டச்சு செய்வதன் மூலம் உருவாக்கப்பட்ட கோப்புகளைக் கோப்புத் தொகுப்புகளில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இது போல Paint என்னும் செயலியில் ஒரு படத்தை உருவாக்கவோ உருவாக்கிய படங்களைத் திருத்தம் செய்யவோ இயலும். இந்தப் படங்களைக் கொண்டு படத்தொகுப்பினை உருவாக்குவது பற்றியும், அசைவூட்டப் படங்களையும் வரைகலைப் படங்களையும் எளிமையாக உருவாக்குவது பற்றியும் அது தொடர்பான செயலிகளின் பயன்பாடுகளைப் பற்றியும் இனிக் காண்போம்.


ஒரு செய்தியைப் பேசியும், கரும்பலகையில் எழுதியும் நமக்குப் புரியவைப்பதைவிட காட்சிப்படங்கள், ஒலி ஒளிப் படங்களைக் காண்பித்தால் நமக்கு எளிதில் புரிந்து விடுகிறது அல்லவா?


ஒரு ஊர்ல ஒரு ராஜா என்று சொல்லப்படும் கதையை விட, ஒரு காணொளிக் காட்சி எளிதாகப் புரிய வைத்து விடுகிறது. மேலும் அக்காட்சி மனதில் அப்படியே பதிந்தும் விடுகிறது. இவ்வாறு படங்கள் வழியாகக் குறிப்பிட்ட கருத்தினை நமக்கு எளிதில் புரிய வைப்பவையே காட்சித் தொடர்பு சாதனங்கள் ஆகும். உதாரணமாக நிழற்படங்கள், ஒலி-ஒளிப்படங்கள், வரைபடங்கள், அசைவூட்டப்படங்கள் போன்ற அனைத்தையும் கணினியின் உதவியுடன் எளிதாகச் செய்ய முடியும். காட்சித் தொடர்பு சாதனத்துக்குத் திரைப்படம் ஒரு சிறந்த சான்றாகும்.


Tags : Visual Communication காட்சித்தொடர்பு.
10th Science : Chapter 23 : Visual Communication : File, Folder Visual Communication in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 23 : காட்சித்தொடர்பு : கோப்பு, கோப்புத் தொகுப்பு - காட்சித்தொடர்பு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 23 : காட்சித்தொடர்பு