காட்சித் தொடர்பு | முதல் பருவம் அலகு 7 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - கோப்பு | 7th Science : Term 1 Unit 7 : Visual Communication

   Posted On :  09.05.2022 07:12 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 7 : காட்சித் தொடர்பு

கோப்பு

கணினியில் இடம் பெற்றிருக்கும் செயலி மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் 'கோப்பு' என்று அழைக்கப்படுகின்றது.

கோப்பு மற்றும் கோப்புத்தொகுப்பு 

கணினியை நாம் நாடுவதற்கான காரணம் அதன் வேகமும் தகவல்களைச் சேமிக்கும் திறனுமாகும். கணினியில் எவ்வாறு நம் தகவல்களைச் சேமித்து வைப்பது? தனிக் கோப்பு அல்லது பல கோப்புகளை உள்ளடங்கிய கோப்புத் தொகுப்பில் நமது செய்திகளைச் சேமித்து வைக்கலாம். கோப்பு (Files) மற்றும் கோப்புத் தொகுப்பு (Folder) பற்றி நாம் இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.


கோப்பு

கணினியில் இடம் பெற்றிருக்கும் செயலி மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் 'கோப்பு' என்று அழைக்கப்படுகின்றது. ஆகவே, நாம் பயன்படுத்தும் செயலியின் தன்மையைக் கொண்டே கோப்பின் தன்மை அமைகிறது.



கோப்புத் தொகுப்பு

கோப்புத் தொகுப்பு என்பது பல கோப்புகளை உள்ளடக்கிய பெட்டகம் போன்றதாகும். கோப்புகளை தேவைக்கேற்ப நாம் உருவாக்கிக் கொள்ள முடியும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமெனில் நூலகத்தில் உள்ள புத்தக அலமாரியை நாம் கருத்தில் கொள்வோம். அதிலுள்ள ஒரு தனித்த புத்தகம் என்பது கோப்பு என்றும், அனைத்து புத்தகங்களையும் கொண்ட அலமாரியை கோப்புத்தொகுப்பு என்றும் நாம் கூறலாம். பொதுவாக சுட்டியின் வலது பொத்தானை அழுத்தியதும் கணினித் திரையில் பல்வேறு தெரிவுகள் தோன்றும். அதில் New என்பதைச் சொடுக்கினால் மேலும் பல தெரிவுகள் தோன்றும். அதில் Folder என்பதைச் சொடுக்கினால் புதிய Folder நமது பயன்பாட்டிற்கு வந்துவிடும். இந்த Folder இல் நாம் உருவாக்கிய File களை விருப்பப்படி சேமித்து வைக்கலாம்.



கோப்புகளை உருவாக்குதல்

பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் இயக்க மென்பொருள்கள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆகும். இவற்றின் மூலம் குறிப்புகளைச் சேகரித்தல், படங்கள் வரைதல், அசைவூட்டப் படங்கள் தயாரித்தல் போன்ற பல செயல்களை நம்மால் செய்ய இயலும்.


முன் பின் தெரியாத ஊர்களுக்குச் செல்ல ஆங்காங்கே வழிகாட்டி பலகைகளை நாம் பயன்படுத்துகிறோம். அதே போல் கணினியை 'on' செய்து இடப்புறம் கீழ் உள்ள START என்பதைக் கிளிக் செய்தவுடன் அதில் உள்ள அனைத்து Program களின் பட்டியலை அது காட்டும். அதில் நமக்குத் தேவையான Program ஐத் தேர்வு செய்து நமது தேவைக்கேற்ப அதில் கோப்புகளை உருவாக்க முடியும்.

விண்டோஸ் இயங்குதளம் உள்ள கணினிகளில் நம் குறிப்புகளைச் சேகரித்து வைக்க Notepad செயலியையும், படங்கள் வரைய Paint என்னும் செயலியையும் நாம் பயன்படுத்தலாம். பெயருக்கேற்றபடி 'Notepad’ இல் தேவையான குறிப்புகளைத் தட்டச்சு செய்வதன் மூலம் உருவாக்கப்பட்ட கோப்புகளைக் கோப்புத் தொகுப்புகளில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அது போல, Paint என்னும் செயலியில் ஒரு படத்தை உருவாக்கவோ, உருவாக்கிய படங்களை Edit செய்யவோ இயலும். இந்தப் படங்களைக் கொண்டு எவ்வாறு படத்தொகுப்பு அசைவூட்டப் படங்கள் மற்றும் வரைகலை படங்களை எளிமையாக உருவாக்குவது என்பது பற்றி இனிக் காண்போம்.


காட்சித் தொகுப்பு சாதனங்கள்

ஒரு பாடத்தை பேசியும், கரும்பலகையில் எழுதியும் நமக்குப் புரியவைப்பதைவிட புகைப்படங்கள், ஒலிஒளிப் படங்கள் மூலம் புரிய வைப்பது எளிதாக இருக்கும் அல்லவா?


 ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா' என்று சொல்லப்படும் கதையை விட, காணொளி ஒரு கருத்தை எளிதாகப் புரிய வைத்து விடுகிறது. மேலும், அக்காட்சி மாணவர்களின் மனதில் அப்படியே பதிந்து விடுகிறது. இவ்வாறு படங்கள் வழியாகக் குறிப்பிட்ட கருத்தினை நமக்கு எளிதில் புரிய வைப்பவையே காட்சித் தொடர்பு சாதனங்கள் எனப்படுகின்றன. உதாரணமாக, நிழற்படங்கள், ஒலிஒளிப் படங்கள், வரைபடங்கள், அசைவூட்டப் படங்கள் போன்ற அனைத்தையும் கணினியின் உதவியுடன் எளிதாக உருவாக்க முடியும். காட்சித் தொடர்பு சாதனத்திற்கு, திரைப்படம் சிறந்த சான்றாகும்.



Tags : Visual Communication | Term 1 Unit 7 | 7th Science காட்சித் தொடர்பு | முதல் பருவம் அலகு 7 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 1 Unit 7 : Visual Communication : Folder Visual Communication | Term 1 Unit 7 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 7 : காட்சித் தொடர்பு : கோப்பு - காட்சித் தொடர்பு | முதல் பருவம் அலகு 7 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 7 : காட்சித் தொடர்பு