Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகள்

பன்னாட்டுப் பொருளியல் - பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகள் | 12th Economics : Chapter 7 : International Economics

   Posted On :  16.03.2022 06:19 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல்

பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகள்

பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு அது பல ஆதாயங்களை வழங்குகிறது. ஒரு நாட்டில் உபரியாக உற்பத்தி செய்யப்படும் பொருள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதன் மூலம் பொருளுக்கான சந்தை விரிவடைகிறது.

பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகள்

பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு அது பல ஆதாயங்களை வழங்குகிறது. ஒரு நாட்டில் உபரியாக உற்பத்தி செய்யப்படும் பொருள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதன் மூலம் பொருளுக்கான சந்தை விரிவடைகிறது. ஒரு நாட்டில் உற்பத்தியே செய்ய முடியாத பொருட்களையும் அதிக செலவில் உற்பத்தியாகும் பொருட்களையும் நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்ய உதவுகிறது. பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகள் கீழ்கண்ட நான்கு இனங்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.



I. திறனுடைய உற்பத்தி

பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் முழு அல்லது ஒப்பிட்டுத் தனிதேர்ச்சி கிடைப்பதனால் கீழ்கண்ட நன்மைகளைப் பெறுகின்றன.

1. உற்பத்தி வளங்களை சிறப்பாக பயன்படுத்துதல்

2. ஒப்பிட்டுத் தனித் தேர்ச்சியுள்ள பொருளுற்பத்தியில் கவனம் செலுத்துதல் 

3. உழைப்பு விரயம் தவிர்த்தல்

4. உற்பத்தி திறன் மேம்படுதல்

5. உற்பத்தி தொழில் நுட்பம் மேம்படுதல் 

6. உற்பத்தி அளவு அதிகரித்தல் 

7. பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபடும் நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.



II. நாடுகளிடையே விலை சமனடைதல்

பன்னாட்டு வாணிகம் அனைத்து வணிக நாடுகளிலும் சமநிலை நிலவ உதவுகிறது. 

1. பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபடும் நாடுகளில் விலை சமமாகும்.

2. போக்குவரத்து செலவில் மட்டும் வேறுபாடு காணப்படும். 

3. உற்பத்தி காரணிகளின் விலையும் நாடுகளிடையே சமமாகும். 



III. பற்றாக்குறையுள்ள வளங்களை சமமாகப் பகிர்தல்

பன்னாட்டு வாணிகம் பற்றாகுறையான வளங்களை சமமாக பகிர்ந்து கொள்ள உதவுகிறது.



IV. பன்னாட்டு வாணிகத்தின் பொதுவான நன்மைகள்

1. மக்கள் வாங்கி பயன்படுத்த பலவகையான பொருட்கள் கிடைக்க வழி வகுக்கிறது

2. வேலைவாய்ப்பு அதிகரிக்கச் செய்கிறது 

3. பின்தங்கிய நாடுகள் தொழில்மயமாகலாம்.

4. நாடுகளுக்கிடையேயான உறவு மேம்பட வாய்ப்புள்ளது.

5. உழைப்பு பகுப்பு மற்றும் பொருள் உற்பத்தியில் தனிதேர்ச்சியடைதலுக்கு உதவுகிறது.

6. போக்கு வரத்து வசதிகள் வளரும்.


Tags : International Economics பன்னாட்டுப் பொருளியல்.
12th Economics : Chapter 7 : International Economics : Gains from International Trade International Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல் : பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகள் - பன்னாட்டுப் பொருளியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல்