Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | அமீன்களின் பொதுவான தயாரிப்பு முறைகள்
   Posted On :  07.08.2022 12:52 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 13 : கரிம நைட்ரஜன் சேர்மங்கள்

அமீன்களின் பொதுவான தயாரிப்பு முறைகள்

பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி அலிபாட்டிக் மற்றும் அரோமேட்டிக் அமீன்களைத் தயாரிக்கலாம்.

அமீன்களின் பொதுவான தயாரிப்பு முறைகள்

பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி அலிபாட்டிக் மற்றும் அரோமேட்டிக் அமீன்களைத் தயாரிக்கலாம்


1) நைட்ரோ சேர்மங்களிலிருந்து தயாரித்தல்

H2 / Ni அல்லது Sn / HCI அல்லது Pd/ H2 ஆகியனவற்றைப் பயன்படுத்தி நைட்ரோ சேர்மங்களை ஒடுக்கும் போது ஓரிணைய அமீன்கள் உருவாகின்றன.



2) நைட்ரைல்களிலிருந்து தயாரித்தல் 

) ஆல்கைல் அல்லது அரைல் சயனைடுகளை H2 / Ni (அல்லது) LiAIH4 (அல்லது) Na / C2H5OH ஆகியனவற்றைக் கொண்டு ஒடுக்கும் போது ஓரிணைய அமீன்கள் உருவாகின்றன. Na / C2H5OH ஐக் கொண்டு நிகழ்த்தப்படும் ஒடுக்க வினை மென்டியஸ் வினை (mendius) என அழைக்கப்படுகிறது


) சோடியம் ரசக்கலவை / C2H5OH கொண்டு ஐசோ சயனைடுகளை ஒடுக்கமடையச் செய்யும் போது ஈரிணைய அமீன்கள் உருவாகின்றன.



3) அமைடுகளிலிருந்து தயாரித்தல் 

) LiAIH4 ஐக் கொண்டு அமைடுகளை ஒடுக்கம் செய்யும் போது அமீன்கள் உருவாகின்றன.


) ஹாஃப்மனின் இறக்க வினை

அமைடுகளை புரோமினுடன், நீர்த்த அல்லது ஆல்கஹாலில் கரைக்கப்பட்ட KOH முன்னிலையில் வினைப்படுத்த, அமைடை விட ஒரு கார்பனை குறைவான எண்ணிக்கையில் கொண்டுள்ள அமீன்கள் உருவாகின்றன

எடுத்துக்காட்டு



4) ஆல்கைல் ஹேலைடுகளிலிருந்து தயாரித்தல் 

) காப்ரியல்தாலிமைடு தொகுப்பு முறை

அலிபாட்டிக் ஓரிணைய அமீன்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது தாலிமைடை எத்தனால் கலந்த KOH உடன் வினைப்படுத்த தாலிமைடின் பொட்டாசியம் உப்பு உருவாகிறது. இதனை ஆல்கைல் ஹேலைடுடன் வெப்பப்படுத்தி, பின் கார நீராற்பகுப்பு அடையச் செய்யும் போது ஓரிணைய அமீன்கள் உருவாகின்றன. இம்முறையினைப் பயன்படுத்தி அனிலீனைத் தயாரிக்க இயலாது. ஏனெனில் தாலிமைடிலிருந்து உருவாகும் எதிர் அயனியுடன் அரைல் ஹேலைடுகள் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினைக்கு உட்படுவதில்லை.


) ஹாஃப்மெனின் அம்மோனியாவால் பகுப்பு

ஆல்கைல் ஹேலைடுகள் அல்லது பென்சைல் ஹேலைடுகளை ஒரு மூடப்பட்ட குழாயில் ஆல்கஹால் கலந்த அம்மோனியாவுடன் வினைப்படுத்தும் போது, 1°,2°,3° மற்றும் நான்கினைய அம்மோனியம் உப்புகள் உருவாகின்றன


இவ்வினை ஒரு கருக்கவர் பதிலீட்டு வினையாகும். ஆல்கைல் ஹேலைடுகளின் ஹேலைடானது –NH2, தொகுதியால் பதிலீடு செய்யப்படுகிறது. இவ்வினையில் உருவாகும் விளைபொருளான ஓரிணைய அமீனும் கருக்கவர் பொருளாக செயல்படும் தன்மையுடையது. எனவே மிகுதியான ஆல்கைல்ஹாலைடு வினைக்கு உட்படுத்தப்படின், கருக்கவர் பதிலீட்டு வினை மேலும் நிகழ்ந்து நான்கினைய அம்மோனிய உப்பினைத் தருகிறது. எனினும், இவ்வினையானது அதிக அளவு அம்மோனியா கொண்டு நிகழ்த்தப்படின், முதன்மைவிளைபொருளாக ஓரிணைய அமீன் உருவாகிறது.

அமீன்களுடன் ஆல்கைல் ஹேலைடுகளின் வினைத்திறன் வரிசை

RI > RBr > RCI 

) ஆல்கைல்ஹேலைடுகளை சோடியம் அசைடுடன் (NaN3) வினைப்படுத்தி பின் லித்தியம் அலுமினியம் ஹைட்ரைடைக் கொண்டு ஒடுக்கமடையச் செய்வதன் மூலம் அதனை ஓரிணைய அமீன்களாக மாற்றலாம்


) குளோரோபென்சீனிலிருந்து அனிலீனைத் தயாரித்தல்

குளோரோபென்சீனை ஆல்கஹால் கலந்த அம்மோனியாவுடன் வெப்பப்படுத்தும் போது அனிலீன் உருவாகிறது.



5) ஹைட்ராக்சில் சேர்மங்களின் அம்மோனியாவால் பகுப்பு 

) ஆல்கஹால் மற்றும் அம்மோனியாவின் ஆவியினை அலுமினா, W2O5 அல்லது சிலிகா வழியே 400°C ல் செலுத்தும் போது அனைத்துவகை அமீன்களும் உருவாகின்றன. இம்முறை செபாட்டியர் - மெய்ல்ஹி முறை என்றழைக்கப்படுகிறது.


) பீனாலை அம்மோனியாவுடன் 300°C ல் நீரற்ற ZnCl, முன்னிலையில் வினைப்படுத்தும் போது அனிலீன் உருவாகிறது.



12th Chemistry : UNIT 13 : Organic Nitrogen Compounds : General methods of preparation Amines in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 13 : கரிம நைட்ரஜன் சேர்மங்கள் : அமீன்களின் பொதுவான தயாரிப்பு முறைகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 13 : கரிம நைட்ரஜன் சேர்மங்கள்