Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | கலைச்சொற்கள் - உயிர்க்கோளம்

புவியியல் - கலைச்சொற்கள் - உயிர்க்கோளம் | 11th Geography : Chapter 7 : The Biosphere

   Posted On :  25.03.2022 07:08 pm

11 வது புவியியல் : அலகு 7 : உயிர்க்கோளம்

கலைச்சொற்கள் - உயிர்க்கோளம்

கலைச்சொற்கள் - புவியியல் : உயிர்க்கோளம்

கலைச்சொற்கள்


வடபுலம் (BOREAL) - புவியின் வடக்கு பக்கத்தில் காணப்படும் பிரதேசம் வடமுனை என்றும் சொல்லலாம்.

பவளமொட்டுகள் (CORAL POLYPS) - பவளப்பூச்சிகள். இவை கடல் வெள்ளரி மற்றும் ஜெல்லி மீன்கள் போன்று மென் உடலிகள்.

இவைகளின் அடிப்பாகம் பாதுகாக்கும் கடின பொருளான சுண்ணாம்புக் கல்லால் ஆனது. இது தான் பவளப்பாறையை உருவாக்குகிறது. இந்த மொட்டுகள் தங்களை கடலின் தரையிலுள்ள பாறையில் ஒட்ட வைத்துக் கொள்ளும் அதன் பிறகு பிரிந்து அல்லது புதிய மொட்டுகள் மூலம் ஆயிரக்கணக்கான பவள மொட்டுகளை உருவாக்கும் அதுவே பாறையாக மாறிவிடும்.

சூழலியல் வல்லுநர் (ECOLOGIST) - காற்று, நீர், நிலம், விலங்குகள் மற்றும் தாவரங்கள் இவற்றிற்கிடையே இயற்கையாக இருக்கக் கூடிய உறவை ஆராய்பவர்.

உட்பிரதேச உயிரிகள் (ENDEMIC) - இயற்கையாக அல்லது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே காணக்கூடிய உயிரிகள். எடுத்துக்காட்டாக, சிங்க வால்குரங்கு நீல்கிரியில் மட்டுமே காணப்படும்.

பூச்சியியலர் (ENTOMOLIGIST) - பூச்சிகளைப் பற்றி ஆராய்பவர் அல்லது பூச்சிகளைப் பற்றிய இயலில் நிபுணர்.

இயற்கை சூழலுக்கு வெளியில் உயிரிகளைப் பாதுகாத்தல் (EX- SITU CONSERVATION) - உயிரிகள் வாழக் கூடிய சூழலில் இல்லாமல் அதற்கு வெளியில் வாழ்கின்ற பன்முக உயிரிகளைப் பாதுகாப்பது. இது மரபணுக்களையும் நவீன உத்திகள் மற்றும் வசதிகளைப் பின்பற்றி பாதுகாக்கும்.

வாழிடம் (HABITAT) - ஒரு விலங்கு, தாவரம் அல்லது ஒரு நுண்ணுயிரியின் இயற்கையான வாழும் இடம்.

காயல் (LAGOON) - ஒரு சிறிய அளவுள்ள கடல் நீர் கடலிலிருந்து பவளப் பாறைகளாலோ மணல் திட்டுகளாலோ பிரிக்கப்பட்டு இருப்பது.

பாலைவனச் சோலை (OASIS) - பாலைவனத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நீர் காணப்படும் அது அங்குள்ள தாவரங்கள் வளர உதவி செய்யும். இச்சோலையானது புவி அடி நீர் சில வேளைகளில் புவியின் மேல் வந்து ஊற்றாகவோ அல்லது கிணறாகவோ உருவாகி தண்ணீர் தரும்.

நிலத்தடி உறை பனி (PERMAFROST) - துருவப் பகுதிகளில் உறை நிலைக்கு கீழே வருடம் முழுவதும் உறைந்திருக்கும் மணல் போன்ற பனி.

சட்ட விரோதமான வேட்டையாடல் (POACHING) - அத்து மீறி அல்லது எல்லை மீறி அடுத்தவர்களின் காப்பகங்களுக்கு சென்று அங்குள்ள விலங்குகளை வேட்டையாடுவது அல்லது திருடுவது.

கோரைகள் (SEDGES) - புல்லைப் போன்ற தாவரம். தரை மட்டத்தண்டு மற்றும் முக்கோண குறுக்கு வெட்டுத் தோற்றமுடைய தண்டு அமைப்பு கொண்டதாகவும் மிகச் சிறிய பூக்கள் உடையதாகவும் காணப்படும். இது ஈரநிலப்பகுதிகளில் அதிகம் காணப்படும்.

எளிதில் பாதிக்கப்படக்கூடிய / பலவீனமான (VULNERABLE) - எளிதில் தாக்கப்படக் கூடிய, ஊறுவிளைவிக்கப்படக் கூடிய அல்லது விரைவில் அழிக்கக் கூடிய நிலையில் இருப்பது.

Tags : Geography புவியியல்.
11th Geography : Chapter 7 : The Biosphere : Glossary for Biosphere Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 7 : உயிர்க்கோளம் : கலைச்சொற்கள் - உயிர்க்கோளம் - புவியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 7 : உயிர்க்கோளம்