Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | கலைச்சொற்கள் - புவியியலின் அடிப்படைகள்
   Posted On :  14.05.2022 07:08 pm

11 வது புவியியல் : அலகு 1 : புவியியலின் அடிப்படைகள்

கலைச்சொற்கள் - புவியியலின் அடிப்படைகள்

புவியியல் : புவியியலின் அடிப்படைகள்

கலைச்சொற்கள்

1. அறுதி அமைவிடம் (Absolute Location): அட்ச மற்றும் தீர்க்கரேகைகளின் படி ஓரிடத்தின் அமைவிடம். 

2. நிலவரைபடவியல் (Cartography) : நிலவரைபடத்தை உருவாக்கும் ஒரு அறிவியல் கலை மற்றும் தொழில்நுட்பம். 

3. உலகளாவிய அமைவிடம் கண்டறியும் தொகுதி (Global Positioning System): ஒரு இடத்தின் சரியான அமைவிடத் தகவல்களை தீர்மானிக்க செயற்கைக்கோளை பயன்படுத்தும் ஒரு முறை. 

4. பசுமை இல்ல விளைவு (Greenhouse Effect): கார்பன்டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களால் அசாதாரணமாக அதிகரிக்கும் வளிமண்டல வெப்ப நிலை. 

5. கிரீன்விச் திட்ட நேரம் (Greenwich Mean Time): இங்கிலாந்தில் கிரீன்விச் என்ற இடத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தின் வழியே செல்லும் முதன்மைத் தீர்க்கக் கோட்டின் தல நேரம். 

6. நிலவரைபடக் கோட்டுச்சட்டம் (Map Projection): புவியின் வளைந்த நிலப்பரப்பை சமதள நிலவரைபடத்தில் காட்டும் ஒரு முறை.

7. நாடு (Nation) கலாச்சார ரீதியாக தனித்துவம் வாய்ந்த மக்கள் குழுவாக வசிக்கும் ஒருதொகுதி. 

8. இயற்கை வளம் (Natural Resource): மனிதத் தேவைகளைப் பூர்த்திசெய்ய இயற்கையில் கிடைக்கும் பொருட்கள். 

9. ஓசோன் அடுக்கு (Ozone Layer): மூன்று ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட ஒரு வாயு மூலக்கூறு. 

10. முதன்மை தீர்க்கக் கோடு(Prime Meridian): இங்கிலாந்தில் கிரீன்விச் என்ற இடத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தின் வழியே செல்லும் சுழியம் மதிப்புடைய தீர்க்கக் கோடு.

11th Geography : Chapter 1 : Fundamentals of Geography : Glossary for Fundamentals of Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 1 : புவியியலின் அடிப்படைகள் : கலைச்சொற்கள் - புவியியலின் அடிப்படைகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 1 : புவியியலின் அடிப்படைகள்