Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | கலைச்சொற்கள் - சூரியக் குடும்பமும் புவியும்

புவியியல் - கலைச்சொற்கள் - சூரியக் குடும்பமும் புவியும் | 11th Geography : Chapter 2 : The Solar system and the Earth

   Posted On :  14.05.2022 09:35 pm

11 வது புவியியல் : அலகு 2 : சூரியக் குடும்பமும் புவியும்

கலைச்சொற்கள் - சூரியக் குடும்பமும் புவியும்

புவியியல் : சூரியக் குடும்பமும் புவியும்

கலைச்சொற்கள்

1. புலப்படாத ஆற்றல் (Dark Energy): பேரண்டத்தின் விரிவாக்கத்தை வேகப்படுத்தும் விண்வெளிப்பகுதி முழுவதும் நிறைந்துள்ள ஒரு புலப்படாத ஆற்றல்.

2. காந்தப்புலம் (Magnetic Field): இயங்கும் மின்அயனிகள் மற்றும் இரு காந்த முனையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு விசை. இது மற்ற இயங்கும் மின் அயனிகள் மற்றும் இரு காந்த முனையங்களின் மீது விசையைச் செலுத்தும்.

3. புற நிழல் (Penumbra): ஒரு ஒளி புகாபொருளினால் உருவாக்கப்பட்ட நிழல் பகுதியாக மறைக்கப்பட்ட வெளிப்புற பகுதி.

4. குறுங்கோள்(Asteroid): சிறு பாறை போன்ற விண்பொருட்கள். இவை மற்ற கோள்களைப் போல சூரியனைச் சுற்றிவருபவை.

5. திட்ட நேரம் (Standard Time): ஒரே தீர்க்கரேகையில்காணப்படும் இடங்களுக்காக அல்லது தேசங்களுக்காக சட்டம் அல்லது வழக்கத்தின் மூலம் ஒரே சீராக உருவாக்கப்பட்ட நேரம்.

6. அண்ட இயக்கம் (Galactic Movement): புவிசூரியன் மற்றும் சூரிய குடும்பத்தின் அனைத்துப் பொருட்களோடும் பால்வழி விண்மீன் கூட்டத்தை நீள்வட்டப்பாதையில் வலம் வருவது.

2. காந்தப்புலம் (Magnetic Field): இயங்கும் மின்அயனிகள் மற்றும் இரு காந்த முனையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு விசை. இது மற்ற இயங்கும் மின் அயனிகள் மற்றும் இரு காந்த முனையங்களின் மீது விசையைச் செலுத்தும்.

7. சம நாள் (Equinox): நில நடுகோட்டுப் பகுதியில் சூரியன் செங்குத்தாக தோன்றும் நேரம். இந்நேரத்தில் இரவு பகல் சமமாக காணப்படும்.

8. கூனல் நிலவு (Gibbous): மூன்றில் ஒருபங்கு நிலவின் தோற்றம்.

9. சூரிய புயல் (Solar Flare): சூரியனில் உருவாகும் மின்காந்த புயல். இது அதிக அளவு வாயுக்களை உருவாக்கும். இவைகள் சூரிய புயலை உருவாக்கக்கூடியவை.

10. சூப்பர் நோவா (Super Nova): ஒருநட்சத்திரம் வெடித்து மரணம் அடைவது. அந்த சமயத்தில் இவை 100 மில்லியன் சூரியனின் பிரகாசத்தை அடையக்கூடும்.

Tags : Geography புவியியல்.
11th Geography : Chapter 2 : The Solar system and the Earth : Glossary for the Solar system and the Earth Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 2 : சூரியக் குடும்பமும் புவியும் : கலைச்சொற்கள் - சூரியக் குடும்பமும் புவியும் - புவியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 2 : சூரியக் குடும்பமும் புவியும்