இந்தியாவில் நிர்வாக அமைப்பு | அரசியல் அறிவியல் - அருஞ்சொற்பொருள் | 12th Political Science : Chapter 6 : Administrative Machinery in India

   Posted On :  03.04.2022 12:47 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : இந்தியாவில் நிர்வாக அமைப்பு

அருஞ்சொற்பொருள்

அரசியல் அறிவியல் : இந்தியாவில் நிர்வாக அமைப்பு

அருஞ்சொற்பொருள்



குடிமைப்பணி: சட்டமன்றம், நீதித்துறை, இராணுவம் இம்மூன்றும் அல்லாத அரசு பணிகள் குடிமைப் பணிகள் ஆகும். இப்பணிகளுக்கான நியமனங்கள் பொதுவாக போட்டி தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. வேலைகளும் மற்றும் பணி செய்வோரையும் அரசாங்கத்தின் மூலம் பணி அமர்த்தப்பட அனைத்து பணியாளர்கள் அரசின் குடிமைக் கிளைகள் மூலம் பணியமர்த்தப்படுகின்றன.


பணி நியமனம்: இது தேர்ந்தெடுக்கபடாத அரசுப் பணி ஆகும். பல்வேறு விதமான நிர்வாகம் பதிவுகளின் கீழ் பல்வேறு விதமான நியமனங்கள் நடைபெறுகின்றன. போட்டியில்லா நியமனங்கள் அரசாங்கத்தின் மூலம் பெறப்படுகிறது. இது குடிமைப் பணி பதிவேடுகளில் இடம் பெறாது. 


குடிமைப் பணி மறுசீரமைப்பு: குடிமைப் பணி திறனை மேம்படுத்தவும், ஆள்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு, சம்பளம், பணியாளர்களின் எண்ணிக்கை, பணியாளரின் செயல்திறன் மதிப்பீடு போன்றவற்றில் உள்ள சிக்கல்களை களைந்து சீர்செய்வது. இதன் உண்மையாள பயன்பாடு பொருளாதாரத்திலிருந்தும், அரசியல் பொருளாதாரத்திலிருந்தும் பெறுகின்றது.


நேர்மைத் தன்மை: பொது நிர்வாகத்தில் நேர்மைத் தன்மை என்பது ஒருவர் தன் கடமையை நிறைவேற்றுவதில் இருக்கும் நம்பகத்தன்மையை குறிக்கும். ஊழலுக்கும், அதிகார பாகுபாடுகளுக்கும் எதிரான கருத்தியல் போக்கைக் கொண்டது. இது பொறுப்புணர்வும், வெளிப்படை தன்மையையும் உள்ளடக்கியது ஆகும். மேலும் நேர்மைத் தன்மை என்பது தவறிழைக்க இயலாத, ஒரு சிதைவுறா நிலையாகும். நம்பிக்கை, நாணயத்தின் மறு பெயர்தான் நேர்மைத் தன்மை ஆகும்.


பொது நிர்வாகம்: பொது நிர்வாகத்தின் உட்கருத்தானது அரசாங்க கொள்கைகளையும் திட்டங்களையும் அமைப்பது மேலும் அரசாங்க அதிகாரிகளின் நடத்தை மூலம் தங்கள் கடமைகளுக்குப் பொறுப்பேற்கச் செய்வது.


வெளிப்படைத் தன்மை: மக்களுக்கு தேவையான தகவல்களை தடையில்லாமலும், சரியான நேரத்தில் உண்மையான தகவல்களையும், பொதுத்துறை நிறுவனங்களின் செயல் தகவல்களையும்,பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறனையும், அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளையும் ஒளிவு மறைவு இல்லாமல் கொடுப்பதே வெளிப்படைத் தன்மை ஆகும்.


மக்கள் நல அரசு: அரசியல் அமைப்பு என்பது மக்கள் நலவாழ்வில் அரசு காட்டும் அக்கறையிலிருந்து கட்டமைக்கப்படுகிறது. அவர்களுக்கு குறைந்தபட்ச தரமான வாழ்க்கையை வாழ வழி செய்ய வேண்டும். அதாவது தரமான இலவச கல்வி, சீரான சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள், ஊனம், நோய், வருமானத்திற்கான ஊக்கத் தொகை, வேலையின்மை ஆகியனவற்றுக்கு எதிரான காப்பீடு, வருவாயை ஈடுகட்டும் குடும்ப சலுகைகள், முதியோர் ஓய்வூதியம் ஆகியனவற்றை இடையூறு இல்லாமல் வழங்க வேண்டும். 


அதிகார பரவலாக்கம்: அதிகாரம், செயல்பாடுகள், வள ஆதாரங்கள் இவையெல்லாம் மத்திய அரசாங்கத்தில் இருந்து உள்ளூர் பஞ்சாயத்து வரை இடமாற்றம் செய்தலே ஆகும். நடைமுறையில் பரவலாக்கம் என்பது ஒருவிதமான சமநிலையை மத்திய அரசாங்கம் மற்றும் பஞ்சாயத்துக்கு இடையே ஏற்படுத்துவதே ஆகும்.


மின்-மக்களாட்சி: மின்-மக்களாட்சி என்பது செயல் முறைகளை பரவலாக்கம் செய்யும் வகையில் இணையம் போன்ற மின்னனு தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது ஆகும். தேர்தல் மற்றும் பங்கேற்பு அமைப்புகள் உள்ளடக்கியது. ஒப்பீடு அளவில், புதிய அரசியல் வளர்ச்சி ஆகும். அரசு, குடிமைக் குழுக்கள், சமுதாயங்கள் இடையே விவாதங்களை உருவாக்க வல்லவை.


மின் ஆளுகை: தகவல்கள், தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி அரசாங்கம், மக்கள் மற்றும் அலுவல்கள் இவற்றிற்கிடையே எளிமையான உருவாக்க தொடர்புகளை செய்வது ஆகும். அரசு செயல்பாடுகளுக்கு இடையே மக்களாட்சிப்படுத்தப்பட்ட ஆளுகையை எளிமைப்படுத்தி, மேம்படுத்துவது ஆகும்.


நல்லாட்சி: நல்லாட்சிக்கு இன்றியமையாததாக இருப்பது சிறந்த வலுவான மேலாண்மை (திறன், செயல்திறன்,பொருளாதாரம்) பொறுப்புணர்வு, தகவல் மற்றும் பரிமாற்றம், வெளிப்படைத்தன்மை, வளர்ச்சிக்கான சட்டபூர்வமான கட்டமைப்பு (நீதித்துறை, மனித உரிமைகள், சுதந்திரம்).



Tags : Administrative Machinery in India | Political Science இந்தியாவில் நிர்வாக அமைப்பு | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 6 : Administrative Machinery in India : Glossary Administrative Machinery in India | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : இந்தியாவில் நிர்வாக அமைப்பு : அருஞ்சொற்பொருள் - இந்தியாவில் நிர்வாக அமைப்பு | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : இந்தியாவில் நிர்வாக அமைப்பு