வளங்கள் - புவியியல் - கலைச்சொற்கள் | 12th Geography : Chapter 3 : Resources

   Posted On :  27.07.2022 05:44 pm

12 வது புவியியல் : அலகு 3 : வளங்கள்

கலைச்சொற்கள்

புவியியல், வளங்கள், கலைச்சொற்கள்

கலைச்சொற்கள்

1. கனிமப்பொருளியல் (Mineralogy): கனிமங்கள் பற்றிய படிப்பு.

2. எங்கும் நிறைந்த வளங்கள் (Ubiquitous Resources): எல்லா இடங்களிலும் காணப்படும் வளங்கள்.

3. உலோகக்கலவை (Alloy): இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகக் கூறுகளை கலப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஓர் உலோகம்.

4. லோட்ஸ் (Lodes): புவிப்பாறையிடுக்கில் பெரிய அளவில் அகலமாக காணப்படும் உலோகத் தாது.

5. தீர்ந்து போகக்கூடிய வளங்கள் (Exhaustible Resources): வரையறுக்கப்பட்ட அளவில் உள்ள வளங்கள்.

6. ஒளிமின்னழுத்த விளைவு (Photovoltaic Effect): ஒளியின் வெளிப்பாட்டின் மீது மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டத்தை உருவாக்குதல் என்பது ஒரு இயற்பியல் மற்றும் வேதியியல் நிகழ்வு ஆகும்.

7. அணு சக்தி (Nuclear Power): அணு ஆற்றல் எரிபொருளை வெளியேற்றுவதன் மூலம் வெப்பத்தை உருவாக்கி அணுமின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது.

8. சிலிக்கான் பொருள்: (Silicon Material) சிலிக்கான் ஒரு வேதியியல் கூறு ஆகும். குறியீடு (SI) மற்றும் அணு எண்: 14.

9. வாசனைப்பொருள்: (Odorant)-ஒரு பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட வாசனையைக் கொடுக்கப்பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.

10. அரித்தல் (Corrosive): ஒரு பொருளை வேதியியல் மாற்றத்தின் மூலம் தொடர்பு கொள்ளும்போது ஒரு பொருள் மற்றொரு பொருளை அரித்து அழித்துவிடும்.


இணையச் செயல்பாடு


வளங்கள்


இச் செயல்பாடு மூலம் மாணவர்கள் இந்த உலகின் வளங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவற்றை கொடுக்கப் பட்டுள்ள தலைப்புகளின் அடிப்படையில் வகைப் பிரிக்க உதவும்.


 

படிகள்


படி 1: URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க. அங்கு பக்கம் ஒன்று திறக்கும். அதில் அநேக விருப்பத் தேர்வுகள் தோன்றும் அதில் "play game" ஐ தெரிவு செய்க

படி 2: அதை நாம் தொடும் போது ஒரு பக்கம் திறந்து அநேக வளங்களைக் காண்பிக்கும் . அவைகளை வகைப் பிரிக்க அதற்குரிய கூடைகளும் தோன்றும்.

படி 3: முதன் முதலில் பொருட்களை கூடைகளில் போடும்போது கூடைகளில் வகைப்படுத்தும் வகையில் அவற்றின்

பெயர்கள் தோன்றும்

படி 4: எல்லா பொருட்களையும் இழுத்து அதற்குரிய கூடையில் போட வேண்டும்.

படி 5: எல்லாம் முடிந்த பின் கூடையை சொடுக்கும் போது உங்களுக்கான மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம்.



உரலி

https://www.brainpop.com/games/sortifynaturalresources/

*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

Tags : Resources | Geography வளங்கள் - புவியியல்.
12th Geography : Chapter 3 : Resources : Glossary Resources | Geography in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 3 : வளங்கள் : கலைச்சொற்கள் - வளங்கள் - புவியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 3 : வளங்கள்