குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் - தாவரவியல் - கலைச்சொற்கள் | 12th Botany : Chapter 3 : Chromosomal Basis of Inheritance

   Posted On :  18.12.2022 04:09 pm

12 வது தாவரவியல் : அலகு 3 : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்

கலைச்சொற்கள்

தாவரவியல் : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் : கலைச்சொற்கள்

தாவரவியல் : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்

கலைச்சொற்கள்


எதிர் உணர் இழை: இதற்கு வார்ப்பு இழை என்று பெயர், RNA படியெடுத்தலுக்கு இவ்விழை வார்ப்பாகச் செயல்படுகிறது.


கிளை இடப்பெயர்வு: ஒத்திசைவு இழைகளின் கார இணைகள் பரிமாற்றம் அடைந்து ஹாலிடே சந்திப்பில் DNA தொடர்வரிசை மேலோ அல்லது கிழோ நகரும் கிளைப்பகுதி.


சிஸ் அமைவு: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணைகளின் ஓங்கு அல்லீல்களை ஒரு குரோமோசோமிலும் மற்றும் ஒத்திசைவான குரோமோசோமில் ஒடுங்கு அல்லீல்களையும் பெற்றிருப்பது.


எக்ஸான்கள்: DNA வின் ஒரு பகுதி RNA வைப் படியெடுத்தல் மற்றும் மரபுச் செய்தி பெயர்த்து புரதத்தை உற்பத்திச் செய்கிறது.


ஆணாக மாறுதல் மற்றும் பெண்ணாக மாறுதல்: ஆணில் பெண் பண்புகளைத் தூண்டுவது, பெண்ணில் ஆண் தன்மையைத் தூண்டுவது.


வேற்றமைந்த ஈரிழை: பல்வேறு மூலங்களிலிருந்து உண்டாகும் மரபிய மறுகூட்டிணைவால் தோன்றிய நியூக்ளிக் அமிலத்தின் ஒரு ஈரிழை முலக்கூறு.


இண்ட்ரான்கள்: மெய்யுட்கரு உயிரிகளில் அமினோ அமிலத்தை உருவாக்காத தொடர் வரிசை மரபுக்குறியன்களை கொண்டிருப்பது


மானோசிஸ்ட்ரோனிக்: ஒரு மரபணுவில் இருந்து மெய்யுட்கரு உயிரி mRNA வில் அமினோ அமில குறியீட்டு செய்திகள் உருவாவது


ஓகாசகி துண்டங்கள்: தொடர்பிலா இழை இரட்டிப்பால் DNA வின் சிறிய துண்டு உருவாகிறது. 5’ 3’ திசைக்கு சற்று தூரத்தில் இரட்டிப்பாதல் நீட்சியடைகிறது.


பிரைமேஸ்: இது RNA பாலிமரேஸின் ஒரு வகை நொதி. ரைபோநியூக்ளியோடைடுகளின் பல்படியாக்கத்தினால் RNA வாக ஒடுக்கமடைகிறது. இது DNA உற்பத்தியின் பிரைமரை உருவாக்குகிறது.


முன்னியக்கி: குறிப்பிட்ட நியூக்ளியோடைடு வரிசையில் RNA பாலிமரேஸானது ஒரு மரபணுவிலிருந்து mRNA வின் படியாக்கத்தை துவக்குகிறது.


சுயபொருந்தாத்தன்மை: தன் கருவுறுதலை தடுத்தும் வெளியினக் கலப்பை ஊக்குவிக்கும் ஒரு மரபிய செயல்நுட்பம்


இணை சேர்தல்: குன்றல் பகுப்பின் போது நடைபெறும் இரண்டு ஒத்திசைவு குரோமோசோம்களின் இணைதல்


கதிர்குஞ்ச விதை: கதிர்குஞ்சம் பெண் தன்மை அடைவது


முடிவுறுதல்: குன்றல் பகுப்பின் போது இணை குரோமோசோம்களுக்கு இடையே உள்ள கிடைமட்ட பிணைப்புகளின் தொடக்கத்திலிருந்து குரோமோசோமின் நுனி பகுதியை நோக்கி நகர்வது


முடிவு மரபுக்குறியன்: ஒரு நிறுத்து மரபுக்குறியன்


ட்ரான்ஸ் அமைவு: ஒரு இணை மரபணுக்களின் ஓங்கு அல்லீல் மற்றும் மற்ற இணையின் ஒடுங்கு அல்லீல் அதே குரோமோசோமில் அமைந்திருப்பதாகும்.


படியாக்கம்: DNA வானது RNA வாக படியெடுக்கின்றது என்றும் அந்த RNA படியெடுப்பன் என்று அழைக்கப்படுகிறது.


மாற்று எஸ்டராக்குதல் வினை: ஒரு வினையின் ஒருங்கிணைந்த மாற்றத்தின் பொழுது வேதிப்பிணைப்பு பிளவுறுதல் மற்றும் உருவாதல் நிகழ்கிறது. இந்த மாற்றத்திற்கு ஆற்றல் தேவைப்படுவதில்லை.


இடம்பெயரும் கட்டுப்படுத்திக்கூறுகள்: மரபணுதொகையத்தில், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் DNA தொடர் வரிசைகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.


எச்ச உறுப்புகள்: பரிணாம வளர்ச்சியின் காலப்போக்கில் உடலின் முதிர்ச்சிபெறா உறுப்பு செயலற்று போகின்றன.


Tags : Chromosomal Basis of Inheritance | Botany குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் - தாவரவியல்.
12th Botany : Chapter 3 : Chromosomal Basis of Inheritance : Glossary Chromosomal Basis of Inheritance | Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 3 : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் : கலைச்சொற்கள் - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் - தாவரவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 3 : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்