உயிரி தொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்- தாவரவியல் - கலைச்சொற்கள் | 12th Botany : Chapter 4 : Principles and Processes of Biotechnology

   Posted On :  08.08.2022 06:34 pm

12 வது தாவரவியல் : அலகு 4 : உயிரி தொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்

கலைச்சொற்கள்

தாவரவியல் : உயிரி தொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் : கலைச்சொற்கள்

தாவரவியல் : உயிரி தொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்

கலைச்சொற்கள்


3’ ஹைட்ராக்ஸி முனை: நியுக்ளிக் அமிலத்தில் கடைசி நியுக்ளியோடைடின் சர்க்கரையின் 3’ வது கார்பன் அணுவில் ஹைட்ராக்ஸில் தொகுதி இணைந்து காணப்படும்.


பாக்டீரிய செயற்கை குரோமோசோம் (BAC): மரபணுத் தொகையின் (Genomic DNA) DNA - விலிருந்து பிரித்தெடுக்கப்பட ஒரு நகலாக்க கடத்தி (Cloning vector) F-காரணியின் அடிப்படையில் கட்டப்பட்டது.


Chimeric DNA: தொடர்பில்லாத மரபணுக்களை கொண்ட மறுசேசர்க்கை DNA மூலக்கூறுகள்.


cleave (பிளவு / பிரிவு): (DS DNA) இரட்டை சுருள் DNA - வின் பாஸ்போ டை எஸ்டர் பிணைப்பை உடைத்தல். இது பெரும்பாலும் ரெஸ்ட்ரிக்சன் நொதி மூலம் நிகழ்கிறது. நகலாக்க களம்: DNA வை நகல் பெருக்க கடத்தியுடன் நுழைக்கும் இடம்.


நகல்பெருக்கம் நகலாக்கம் : DNA மூலக்கூறுடன் குரோமோசோமின் பகுதி அல்லது நகல் பெருக்க கடத்தியுடன் (cloning vector) கூடி இணைவது.


நகல்பெருக்க நகலாக்க கடத்தி : நகல் பெருக்க மரபணு நுழைக்கப்பட சிறிய, தன் பெருக்கமடையும் DNA.


ஒட்டிணைவுக் களம் (Cos sites): 12-வது காரம், ஒற்றை இழை, லேம்டா பேஜ் (A), DNA - வின் நிறைவு உண்டாகிற விரிவு பகுதி.


DNA பாலிமரேஸ்: DNA உருவாக்கத்தின் போது பாஸ்போடை எஸ்டர் (phosphodiester) பிணைப்பு உருவாவதை ஊக்குவிக்கும் நொதி


எண்டோநியுகிளியோஸ்: DNA-வின் உள்ளமைப்பில் பிளவை ஏற்படுத்தி DNA - வை குறிப்பிட்ட இடத்தில் வெட்டுவதை ஊக்குவிக்கும் நொதி.


மரபணு தொகையம்: ஓர் உயிரினத்தின் ஒட்டுமொத்த மரபுப்பொருள்.


செருகி DNA: நகல் பெருக்க கடத்தியுடன் இணையும் DNA மூலக்கூறு. லைகேஸ்: மரபணுப் பொறியியலில் துண்டிக்கப்பட்ட dsDNA க்களை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் நொதி


M13: DNA தொடர்வரிசையில் தாங்கிக்கடத்தியாக பயன்படுத்தப்படும் SSDNA பாக்டீரியஃபாஜ்


ஃபாஜ்மிட்: ஃபாஜ் DNA மற்றும் பிளாஸ்மிட்டில் இருந்து பெறப்பட்ட கூறுகளைக் கொண்ட நகலாக்கத் தாங்கிக்கடத்தி.


பிளாஸ்மிட்: பாக்டீரிய குரோமோசோமைத் தவிர பாக்டீரிய செல்களில் குரோமோசோமிற்கு வெளியே காணப்படும் தன்னிச்சையாக பெருக்கமடையக் கூடிய இரட்டை இழை (ds circular DNA) வட்ட வடிவ DNA மூலக்கூறு ஆகும்.


தடைக்கட்டு வரிபடம்: பல்வேறு தடைகட்டு நொதிகளால் துண்டிக்கப்பட்ட DNA வின் ஒரு நீண்ட ஆய்ந்த றிதல் களம்.


குறைதூரத் தாங்கிக்கடத்தி : இரு வேறு இரட்டிப்பாதல் தோற்றத்திற்கான Orizuk Ori.coli பெற்று இருவேறு உயிரினங்களில் பெருக்கமடையும் நகலாக்கக் தாங்கிக்கடத்தி.


Taq பாலிமரேஸ்: வெப்ப விரும்பும் பாக்டீரியமான தெர்மஸ் அக்குவாட்டிகஸ் பாக்டீரியத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் வெப்பம் தாங்கும் DNA பாலிமரேஸ்


தாங்கிக்கடத்தி: ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லுக்கு DNAவை மாற்றும் ஊர்தி


உயிரி எரிபொருள்: ஹைட்ரஜன், எத்தனால் மற்றும் மெத்தனால் போன்றவை உயிரிமூலங்களிலிருந்து நுண்ணுயிரி செயல்பாடுகளினால் உற்பத்தி செய்யப்படுபவை.


உயிரி கழுவிபகுத்தல்: உலோகங்கள் அவற்றின் தாதுக்கள் அல்லது மாசுற்ற சூழலில் இருந்து நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி மீட்டெடுக்கும் செயல்முறை.


உயிரி வழித்திருத்தம் : சூழலில் இருந்து நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி மாசுறுத்திகளை நீக்குதல் அல்லது குறைக்கும் செயல்முறை


பசுமைத் தொழில்நுட்பம் : மூலங்களில் மாசுறுத்திகளை கட்டுபடுத்தி, மாசுபாடில்லாத தொழில்நுட்பம்


தாவர வழித்திருத்தம்: தாவரங்களைப் பயன்படுத்தி சூழலில் இருந்து மாசுகள் அல்லது மாசுறுத்திகளை நீக்குதல்


மறுகூட்டிணைவு: மரபணுக்களின் மறுகூட்டிணைவினால் செல்கள் அல்லது உயிரினங்களை உருவாக்குதல்


தகவல் பரிமாற்றம் (Transformation): அயல் மரபணுவை செல்லினுள் செலுத்தி அதனுடைய மரபணுத் தொகையத்தினை மாற்றுதல்


தாங்கிக்கடத்திகள்: DNA மறுகூட்டிணைவு தொழில் நுட்பத்தில் அயல்செல்லிற்கு புதிய மரபணுவை எடுத்துச் செல்லும் கடத்தி


இயல்பான வகை : இயற்கையாக காணப்படும் உயிரினங்கள்

Tags : Principles and Processes of Biotechnology | Botany உயிரி தொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்- தாவரவியல்.
12th Botany : Chapter 4 : Principles and Processes of Biotechnology : Glossary Principles and Processes of Biotechnology | Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 4 : உயிரி தொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் : கலைச்சொற்கள் - உயிரி தொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்- தாவரவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 4 : உயிரி தொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்