Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | தொகுதி 15 (நைட்ரஜன் தொகுதி) தனிமங்கள்

வளம், இயற் பண்புகள் | P-தொகுதி தனிமங்கள் -II | வேதியியல் - தொகுதி 15 (நைட்ரஜன் தொகுதி) தனிமங்கள் | 12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II

   Posted On :  11.11.2022 05:31 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II

தொகுதி 15 (நைட்ரஜன் தொகுதி) தனிமங்கள்

இந்த அலகில் எஞ்சியுள்ள p-தொகுதிகளான நிக்டோஜன்கள், சால்கோஜன்கள், ஹேலஜன்கள் மற்றும் மந்த வாயுக்கள் பற்றிக் கற்றறிவோம்.

அலகு 3

P-தொகுதி தனிமங்கள் -II


சர் வில்லியம் ராம்சே, ' (1852 - 1916)

சர் வில்லியம் ராம்சே ஒரு ஸ்காட்லேண்டைச் சார்ந்த வேதியியல் அறிஞர் ஆவார். மந்த வாயுக்களைக் கண்டறிந்தவர் இவரே. 1885-1890 க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் நைட்ரஜனின் ஆக்ஸைடுகள் குறித்து பல முக்கியமான ஆயுவுக் கட்டுரைகளை வெளியிட்டார். ராம்சே காற்றிலிருந்து ஒரு கனமான தனிமத்தை பிரித்தெடுத்து அதற்கு ஆர்கான் (மந்தமான எனப்பொருள்படும் கிரேக்கச் சொல்) எனப் பெயரிட்டார். தொடர்ந்து மாரிஸ் ட்ராவெர்ஸ் எனும் அறிவியலாளருடன் இணைந்து பணியாற்றி நியான், கிரிப்டான் மற்றும் செனான் ஆகியவற்றைக் கண்டறிந்தார். இவர், 1910 ஆம் ஆண்டில் ரேடான் வாயுவை பிரித்தெடுத்து அதன் பண்புகளை ஆய்வு செய்தார். மந்த வாயுக்களை கண்டறிதலில் அவர் ஆற்றிய சேவையை போற்றும் வகையில், 1904 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. மந்த வாயுக்களை பிரித்தெடுத்தலில் இவர் ஆற்றிய மகத்தான பணியினால் தனிம வரிசை அட்டவணையில் ஒரு புதிய தொகுதி உருவாதற்கு வழிவகை ஏற்பட்டது.


கற்றலின் நோக்கங்கள் 

இப்பாடப்பகுதியைக் கற்றறிந்த பின்னர், 

* நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் முக்கியமான சேர்மங்களின் தயாரிப்பு மற்றும் பண்புகள் குறித்து விவாதித்தல். 

* ஆக்ஸிஜன் மற்றும் சல்பர் ஆகியவற்றின் முக்கியமான சேர்மங்களின் தயாரிப்பு மற்றும் பண்புகள் குறித்து விளக்குதல். ஹேலஜன்கள் மற்றும் ஹைட்ரஜன் ஹேலைடுகள் ஆகியவற்றின் தயாரிப்பு மற்றும் பண்புகள் குறித்து விளக்குதல். 

* ஹேலஜன் இடைசேர்மங்களின் வேதியியலைப் பற்றி விளக்குதல். 

* மந்தவாயுக்களின் பண்புகள் மற்றும் பயன்களை விளக்குதல். 

* அன்றாட வாழ்வில் p-தொகுதி தனிமங்கள் மற்றும் அவற்றின் சேர்மங்களின் முக்கியத்துவத்தை பாராட்டுதல் ஆகிய திறன்களைப் மாணவர்கள் பெறலாம்.




அறிமுகம்:

p-தொகுதி தனிமங்களின் பொதுப் பண்புகள், ஐகோசாஜன்கள் ( போரான் தொகுதி) மற்றும் டெட்ராஜன்கள் ( கார்பன் தொகுதி) ஆகிய முதல் இரண்டு தொகுதி தனிமங்கள் பற்றி முந்தைய பாடப்பகுதியில் கற்றறிந்தோம். இந்த அலகில் எஞ்சியுள்ள p-தொகுதிகளான நிக்டோஜன்கள், சால்கோஜன்கள், ஹேலஜன்கள் மற்றும் மந்த வாயுக்கள் பற்றிக் கற்றறிவோம்.


தொகுதி 15 (நைட்ரஜன் தொகுதி) தனிமங்கள்: 


வளம்:

பூமியின் வளிமண்டலமானது ஏறத்தாழ 78% டைநைட்ரஜன் (N2) வாயுவைக் கொண்டுள்ளது. மேலும் இது சோடியம் நைட்ரேட்டாகவும் (சிலி வெடியுப்பு) பொட்டாசியம் நைட்ரேட்டாகவும் (இந்திய வெடியுப்பு) புவியின் மேற்பரப்பில் காணப்படுகிறது. அதிகமாக கிடைக்கக்கூடிய பதினோராவது தனிமமான பாஸ்பரஸ், பாஸ்பேட்டுகளாக (புளூரபடைட், குளோரபடைட் மற்றும் ஹைட்ராக்ஸிஅபடைட்) காணப்படுகிறது. மற்ற தனிமங்களான ஆர்சனிக், ஆன்டிமனி மற்றும் பிஸ்மத் ஆகியன அவற்றின் சல்பைடுகளாக காணப்படுகின்றன. ஆனால் இவை அதிகளவில் கிடைப்பதில்லை. 


இயற் பண்புகள்:

15ஆம் தொகுதித் தனிமங்களின் சில இயற் பண்புகள் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. 

அட்டவனை 3.1 : 15 ஆம் தொகுதித் தனிமங்களின் சில இயற் பண்புகள் 



Tags : Occurrence, Physical properties | p-Block Elements-II | Chemistry வளம், இயற் பண்புகள் | P-தொகுதி தனிமங்கள் -II | வேதியியல்.
12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II : Group 15 (Nitrogen group) elements Occurrence, Physical properties | p-Block Elements-II | Chemistry in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II : தொகுதி 15 (நைட்ரஜன் தொகுதி) தனிமங்கள் - வளம், இயற் பண்புகள் | P-தொகுதி தனிமங்கள் -II | வேதியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II