Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | GDPயின் வளர்ச்சி மற்றும் பொருளாதார கொள்கைகள்

மொத்த உள்நாட்டு உற்பத்தி | பொருளியல் - GDPயின் வளர்ச்சி மற்றும் பொருளாதார கொள்கைகள் | 10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction

   Posted On :  27.07.2022 05:36 am

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம்

GDPயின் வளர்ச்சி மற்றும் பொருளாதார கொள்கைகள்

பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அதிகரிப்பதற்கு சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்திய அரசு பல பொருளாதார கொள்கைகளை உருவாக்கியுள்ளது. முக்கியமான பொருளாதார கொள்கைகள் பின்வருமாறு:

GDPயின் வளர்ச்சி மற்றும் பொருளாதார கொள்கைகள் 

பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அதிகரிப்பதற்கு சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்திய அரசு பல பொருளாதார கொள்கைகளை உருவாக்கியுள்ளது. முக்கியமான பொருளாதார கொள்கைகள் பின்வருமாறு:

 

1. வேளாண் கொள்கை

உள்நாட்டு வேளாண்மை மற்றும் வெளிநாட்டு வேளாண்மை இறக்குமதி பொருள்கள் பற்றிய அரசின் முடிவுகளையும், நடவடிக்கைகளையும் பற்றியது வேளாண் கொள்கையாகும். சில பரவலான கருப்பொருள்கள், இடர் மேலாண்மை மற்றும் சரிசெய்தல், பொருளாதார நிலைத் தன்மை, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத் தன்மையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்நாட்டு பொருள்களுக்கான சந்தை அணுகல் ஆகியவை வேளாண் கொள்கையில் அடங்கும்.

சில வேளாண் கொள்கைகள்:- விலைக் கொள்கை நில சீர்திருத்த கொள்கை, பசுமைப் புரட்சி, பாசனக் கொள்கை, உணவுக் கொள்கை, விவசாய தொழிலாளர் கொள்கை மற்றும் கூட்டுறவு கொள்கை போன்றவைகளாகும்.


2. தொழில்துறை கொள்கை

தொழில் துறை முன்னேற்றம் எந்த ஒரு பொருளாதாரத்திற்கும் முக்கியமான அம்சமாகும். இது வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் நவீனமயமாக்கலுக்கு வழிவகுக்கப்பட்டு இறுதியில் பொருளாதாரம் தன்னிறைவு அடைகிறது. உண்மையில், தொழில் துறை வளர்ச்சி, விவசாயத்துறை (புதிய பண்ணை தொழில் நுட்பம்) மற்றும் பணிகள் துறை போன்ற துறைகளை ஊக்குவிக்கின்றன. இது பொருளாதார வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

1948லிருந்து பல தொழில் துறை கொள்கைகள் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்காக ஏற்படுத்தப்பட்டது. எடுத்துக்காட்டாக, சில தொழில் துறை கொள்கைகள்: ஜவுளித் தொழில் கொள்கை சர்க்கரை தொழில் கொள்கை, தொழில் துறை வளர்ச்சி விலைக் கொள்கை, சிறு தொழில் தொழிற்கொள்கை மற்றும் தொழில் துறை தொழிலாளர் கொள்கை போன்றவைகளாகும்.

 

3. புதிய பொருளாதாரக் கொள்கை

1990களின் ஆரம்பத்தில் இந்தியாவின் பொருளாதாரம் கணிசமான கொள்கை மாற்றங்களுக்கு உட்பட்டது. இந்த புதிய பொருளாதார சீர்திருத்தம் பொதுவாக, LPG அல்லது தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என அழைக்கப்படுகிறது. இந்த பொருளாதார சீர்திருத்தங்கள், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை ஒரு குறிப்பிடத் தக்க வகையில் முன்னேற்றமடையச் செய்தது.


மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)

‘GNH’ என்ற வார்த்தையை 1972ல் உருவாக்கியவர் ஜிகமே சிங்கயே வாங்ஹக் என்ற பூட்டான் அரசர். அவர் பம்பாய் விமான நிலையத்தில் நிதிகாலங்கள் (Financial Times) என்ற பத்திரிக்கைக்கு பிரிட்டிஷ் பத்திரிக்கையாளரின் நேர்காணலில் GNP ஐ விட GNH மிக முக்கியம் என்றார்.

2011ல் ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு மகிழ்ச்சிஎன்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. உறுப்பு நாடுகள் பூடானை ஒரு எடுத்துக்காட்டாக பின்பற்றி மகிழ்ச்சியையும், நல்வழியையும் மகிழ்ச்சி என அழைத்தனர். (அடிப்படை மனித குறிக்கோள்”).

GNHயின் 4 தூண்கள்

1. நிலையான மற்றும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சி

2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு

3. கலாச்சாரத்தை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்

4. நல்ல ஆட்சித் திறன்

உளவியல் நலன், உடல் நலம், நேரப் பயன்பாடு, கல்வி, கலாச்சார பன்முகத் தன்மை, நல்ல ஆட்சித் திறன், சமூகத்தின் உயர்வு, சுற்றுச் சூழல் பன்முகத் தன்மை, வாழ்க்கைத் தரம் ஆகியவை GNH இன் 9 களங்களாகக் கருதப்படுகிறது.

 


Tags : Gross Domestic Product | Economics மொத்த உள்நாட்டு உற்பத்தி | பொருளியல்.
10th Social Science : Economics : Chapter 1 : Gross Domestic Product and its Growth: an Introduction : Growth of GDP and Economic Policies Gross Domestic Product | Economics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம் : GDPயின் வளர்ச்சி மற்றும் பொருளாதார கொள்கைகள் - மொத்த உள்நாட்டு உற்பத்தி | பொருளியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 1 : மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம்