Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | சுதந்திரம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?
   Posted On :  25.09.2023 08:36 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்

சுதந்திரம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?

ஜனநாயகத்தில் சுதந்திரம் என்பது வேறு எந்த வகையான அரசாங்கத்தையும் விட பாதுகாப்பானது.

சுதந்திரம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?

அ) மக்களாட்சி

சுதந்திரம் என்பது மக்களாட்சியில் பாதுகாப்பாக இருக்கிறது. மக்களின் அரசாங்கமாக மக்களாட்சி செயல்படுகிறது.

ஆ) அரசமைப்பு

ஒரு நாட்டின் அரசமைப்பில் இருந்து தான் அரசின் அதிகாரத்துவம்/ ஆணையுரிமை பெறப்படுகிறது.

மக்களாட்சியைப் பற்றிய கவிதையாக இந்தியஅரசமைப்பின்முகவுரை விளங்குகிறது. இதுஒட்டுமொத்த இந்திய அரசமைப்பினுடைய அடிப்படை தத்துவத்தை தன்னுள் கொண்டதாகும். அரசாங்கத்தால் உருவாக்கப்படுகின்ற சட்டமும், அதனால் நிறைவேற்றப்படுகின்ற மக்கள் நல நடவடிக்கைகளும், மக்கள் நலனிற்கு உகந்ததா, இல்லையா என்பதை ஆராய்ந்து மதிப்பிடும் தன்மை படைத்தது அரசமைப்பு முகவுரையாகும். இந்திய அரசமைப்பின் ஆன்மாவாக முகவுரை கருதப்படுகிறது. 

இ) அடிப்படை உரிமைகள் 

அரசின் அதிகாரத்துவத்தை வரையறுப்பது அடிப்படை உரிமைகள் ஆகும். தனிமனிதர்களின் சொந்த விவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீடின்றி இருப்பதற்கு இவ்வகை உரிமைகள் உறுதியளிக்கின்றன.


ஈ) அதிகாரப் பரவலாக்கம்

சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு அதிகாரப் பரவலாக்கம் அவசியமாகின்றது. அதிகாரங்கள் முறையே மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கத்திற்கு பகிர்ந்து அளிக்கும் பட்சத்தில் நிர்வாகம் திறம்பட செயலாற்ற இயலும். 

சுதந்திரமான நீதித்துறை

இந்திய அரசமைப்பு, நீதித்துறை சுதந்திரமாக செயல்படத் தகுந்த முறையிலான அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சுதந்திரமாக செயல்படும் நீதித்துறையே, மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும், அரசமைப்பின் மேலான தன்மையையும் பாதுகாக்கிறது. 

* நீதிபதிகளின் நியமனத்திற்கு பாகுபாடற்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. 

* நீதிபதிகளுக்கு, உயர்ந்த தகுதிகளை நிர்ணயித்துள்ளது. 

* உச்சநீதிமன்ற நீதிபதிகள் 65 வயது வரையிலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 62வயது வரையிலும் பணியாற்றுவார்கள். 

உ) பொருளாதார இடர்காப்பு 

சுதந்திரத்தின் நிபந்தனையாக பொருளாதார சுதந்திரம் அமைகிறது. "ஏழை மற்றும் பணக்காரர், படித்தவர் மற்றும் படிக்காதவர் என்ற பிரிவினை சமூகத்தில் நிலைக்கும் வரையிலும் எஜமானர் மற்றும் பணியாளர் என்ற உறவுமுறை நீடிக்கும்". 

ஊ) சட்டத்தின் ஆட்சி

சட்டத்தின் ஆட்சி என்பது இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. சாதி, இனம், நிறம், மற்றும் நம்பிக்கை போன்றவைகளில் வேறுபாடுகள் இல்லாத சமமான ஆட்சியே சட்டத்தின் ஆட்சியாகும். சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம். குற்றங்களில் ஈடுபடும் போது தண்டனைக்கு உள்ளாக வேண்டிய நிலை அனைவருக்குமே ஏற்படுகிறது. 

எ) அரசியல் கல்வி மற்றும் காலவரம்பற்ற கண்காணிப்பு

சுதந்திரம் என்பதை நிரந்தரமாக பாதுகாக்க முடியும். கல்வியறிவு பெற்றவர்கள் முற்றிலுமாக உரிமைகளையும் கடமைகளையும் பற்றி அறிவர். காலவரம்பற்ற கண்காணிப்பு இருந்தாலொழிய, மக்கள் தவறுகள் செய்வதை நாம் கண்டறியமுடிவதில்லை . அரசாங்கம் தன் அதிகார எல்லையை மீறி மக்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடும்போது அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புரட்சி செய்கிறார்கள்.

11th Political Science : Chapter 3 : Basic Concepts of Political Science : How liberty is safeguarded? in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் : சுதந்திரம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்