Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | நோய்த்தடைக்காப்பு துலங்கல்கள்

நோய்த்தடைக்காப்பியல் - நோய்த்தடைக்காப்பு துலங்கல்கள் | 12th Zoology : Chapter 8 : Immunology

   Posted On :  14.05.2022 04:28 pm

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 8 : நோய்த்தடைக்காப்பியல்

நோய்த்தடைக்காப்பு துலங்கல்கள்

தடைகாப்பு துலங்கல்கள் முதல் நிலையை அல்லது இரண்டாம் நிலையைச் சார்ந்ததாக இருக்கலாம்

நோய்த்தடைக்காப்பு துலங்கல்கள் (Immune Responses) 

தடைகாப்பு துலங்கல்கள் முதல் நிலையை அல்லது இரண்டாம் நிலையைச் சார்ந்ததாக இருக்கலாம் (அட்டவணை 8.3).

அட்டவணை 8.3 முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கல்களுக்கிடையேயான வேறுபாடுகள்


முதல்நிலை தடைக்காப்பு துலங்கல்கள

1. ஒரு எதிர்ப்பொருள் தூண்டி முதன் முதலாக நோய்தடைக்காப்பு அமைப்புடன் தொடர்புக் கொள்வதால் இவை உருவாகின்றன.

2. எதிர்ப்பொருளின் செறிவு 7 முதல் 10 நாட்களில் உச்ச நிலையை அடைகிறது.

3. இவ்வகை நோய்தடைக்காப்பு உருவாக நீண்ட நேரம் தேவைப்படுகிறது.

4. எதிர்ப்பொருள் அளவு விரைவாக வீழ்ச்சியடைகிறது.

5. நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலால் வெளிப்படுத்தப்படுகிறது.

இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கல்கள்

1. முதல் நிலையில் சந்தித்த அதே  எதிர்ப்பொருள் தூண்டியை இரண்டாவது அல்லது அடுத்தடுத்து எதிர்கொள்ளும் போது இத்தடைக்காப்பு உருவாகிறது.

2. எதிர்ப்பொருளின் செறிவு 3 முதல் 5 நாட்களில் உச்ச நிலையை அடைகிறது.

3. இவ்வகை நோய்தடைக்காப்பு உருவாக குறைவான நேரமே போதுமானது.

4. எதிர்ப்பொருளின் அளவு நீண்ட காலம் உயர் நிலையில் உள்ளது.

5. எலும்பு மஜ்ஜை அதனை தொடர்ந்து நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலால் வெளிப்படுத்தப்படுகிறது.



முதல் நிலை தடைக்காப்பு துலங்கல் 

ஒரு நோயூக்கி நோய்த்தடைக்காப்பு அமைப்புடன் முதன் முதலாக தொடர்பு கொள்ளும்போது இத்தகைய முதல்நிலை தடைக்காப்பு வெளிப்படுகிறது. இந்த தடைகாப்பின் போது தடைகாப்பு மண்டலம் எதிர்பொருள் தூண்டியை இனம் காணுதல், அதற்கு எதிரான எதிர்ப்பொருளை உற்பத்தி செய்தல் மற்றும் இறுதியாக நினைவாற்றல் லிம்போசைட்டுகளை உருவாக்குதல் ஆகியவற்றை அறிந்து கொள்கிறது. இவ்வகை துலங்கல் மந்தமாகவும், குறுகிய காலம் மட்டும் செயல்படக்கூடியதாகவும் உள்ளன.

உங்களுக்குத் தெரியுமா?

எலும்பு மஜ்ஜையில் இரத்த செல்கள் உருவாகும் செயல் முறைகள், ஹீமட்டோபாயசிஸ் (Haematopoiesis) என அழைக்கப்படுகிறது.


இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கல் 

ஒரு நபர் மீண்டும் அதே நோயூக்கியை இரண்டாம் முறையாக எதிர்கொள்ளும்போது இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கல் நடைபெறுகிறது. இந்நேரத்தில் நோய்த்தடைகாப்பு நினைவாற்றல் தோற்றுவிக்கப்பட்டதும் நோய்த்தடைகாப்பு மண்டலம் உடனடியாக எதிர்ப்பொருள் உற்பத்தியை துவக்குகிறது. எதிர்ப்பொருள் தூண்டிகளை கண்டறிந்த சில மணி நேரத்திற்குள்ளே பல புதிய பிளாஸ்மா செல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2 அல்லது 3 நாட்களுக்குள் இரத்தத்தில் உள்ள எதிர்ப்பொருளின் செரிவு படிப்படியாக உயர்ந்து முதல்நிலைத் துலங்கலை விட அதிக அளவை அடைகிறது. எனவே இதனை ஊக்கி துலங்கல் (Booster response) எனவும் அழைக்கலாம்.



Tags : Immunology நோய்த்தடைக்காப்பியல்.
12th Zoology : Chapter 8 : Immunology : Immune responses Immunology in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 8 : நோய்த்தடைக்காப்பியல் : நோய்த்தடைக்காப்பு துலங்கல்கள் - நோய்த்தடைக்காப்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 8 : நோய்த்தடைக்காப்பியல்