Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்தியாவின் சர்வதேச உறவுகள்
   Posted On :  05.07.2022 11:30 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 5 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

இந்தியாவின் சர்வதேச உறவுகள்

சுதந்திர இந்தியா தொடர்ந்து உலக அமைதியையும் சர்வதேச ஒற்றுமையையும் நிலைநிறுத்த ஊக்கமளிக்கிறது.

இந்தியாவின் சர்வதேச உறவுகள்


கற்றலின் நோக்கங்கள்

நமது அண்டை நாடுகளுடனான கொள்கைகள் குறித்துப் புரிந்துகொள்ளுதல்

வளர்ந்த நாடுகள் குறித்த இந்தியாவின் கொள்கையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுதல்

சர்வதேச நிறுவனங்களுடனான இந்தியாவின் உறவுகள் பற்றிய அறிவைப்பெறுதல்

பிரிக்ஸ் (BRICS) மற்றும் ஒபெக் (OPEC) நிறுவனங்களின் சாதனைகளை அறிதல்

உலக நாடுகளிடையே இந்தியாவின் உன்னத நிலை குறித்த மதிப்பினை உள்வாங்குதல்

 

ஒரு மோசமான அண்டை நாடு ஒரு துரதிர்ஷ்டம்; அதுவே ஒரு நல்ல நாடாக அமையுமேயானால் அதைவிட ஆசீர்வாதம் வேறு இல்லை

- ஹெசாய்ட்

 

அறிமுகம் 

சுதந்திர இந்தியா தொடர்ந்து உலக அமைதியையும் சர்வதேச ஒற்றுமையையும் நிலைநிறுத்த ஊக்கமளிக்கிறது. இந்தியா வெளிப்படையாக இராணுவக் கூட்டணியைக் கைவிட்டாலும், அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்பதிலும் ஒருங்கிணைப்பதிலும் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறியது போல நாம் ஒருவரை முற்றிலும் சார்ந்தோ அல்லது தனித்தோ இருக்க முடியாது. ஆனால் இவ்வுலகில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம்

இந்தியா தனது தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் அமைதியான வளமான அண்டை நாடுகளுடனான உறவை விரும்புகிறது. இந்தியா எப்பொழுதும் அமைதியை விரும்பும் நாடாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உலக அமைதிக்குத் தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகிறது. ஒரு நாடு வளர்ச்சியில் போதிய அளவு முன்னேற்றம் அடைவதற்குச் சர்வதேச உறவுகளைப் பராமரிப்பது என்பது முக்கியமான ஒரு பகுதி ஆகும். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் ஏராளமான அண்டை நாடுகளுடன் சூழப்பட்டிருப்பதால் அந்நாடுகளுடன் நட்புறவு மற்றும் நல்ல உறவினைப் பராமரித்து வருகிறது.


 

10th Social Science : Civics : Chapter 5 : India’s International Relations : India’s International Relations in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 5 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : இந்தியாவின் சர்வதேச உறவுகள் - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 5 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை