Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | ஒருவிதையிலைத் தாவரத்தண்டின் உள்ளமைப்பு (மக்களாச்சோளம்)
   Posted On :  31.07.2022 06:40 am

10வது அறிவியல் : அலகு 12 : தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்

ஒருவிதையிலைத் தாவரத்தண்டின் உள்ளமைப்பு (மக்களாச்சோளம்)

ஒருவிதையிலைத் தாவரத்தண்டின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கீழ்கண்ட பகுதிகள் உள்ளன.

ஒருவிதையிலைத் தாவரத்தண்டின் உள்ளமைப்பு (மக்களாச்சோளம்)

ஒருவிதையிலைத் தாவரத்தண்டின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கீழ்கண்ட பகுதிகள் உள்ளன.



1. புறத்தோல்: இது வெளிப்புற அடுக்காகும். இது ஓரடுக்கு பாரன்கைமா செல்களால் ஆனது. இதன் வெளிப்புறச்சுவரில் கியூடிக்கிள் படிந்துள்ளது. பல செல் தூவிகள் காணப்படவில்லை. புறத்தோல் துளைகள் குறைவாக காணப்படுகின்றன.

2. புறத்தோலடித்தோல்: இவ்வடுக்கு சில அடுக்கு ஸ்கிளிரன்கைமா செல்களால் ஆனது. இப்பகுதியின் இடையிடையேகுளோரன்கைமா செல்கள் உள்ளன. ஸ்கிளிரன்கைமா தாவரங்களுக்கு உறுதியளிக்கிறது.

3. தளத்திசு: புறத்தோலடித் தோலுக்கு உட்புறமாக உள்ள அனைத்து பகுதிகளும் தளத்திசு எனப்படும். இவை அகத்தோல், புறணி, பெரிசைக்கிள், பித் என வேறுபட்டு காணப்படவில்லை.

4. வாஸ்குலார்கற்றை: மண்டை ஓட்டு வடிவ வாஸ்குலார் கற்றைகள் தளத்திசுவில் சிதறிக் காணப்படுகின்றன. வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்த, ஒருங்கமைந்த, மூடிய மற்றும் உள்நோக்கிய சைலம் கொண்டவை. ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையைச் சுற்றியும் ஸ்கிளிரன்கைமாவாலான கற்றை உறை உள்ளது.

(i) சைலம்: சைலக்குழாய்கள் ஆங்கில எழுத்து ‘Y’ வடிவில் அமைந்துள்ளது. முதிர்ந்த வாஸ்குலார் கற்றையில் சில புரோட்டோசைலக் கூறுகள் சிதைவடைவதால் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. இதற்கு புரோட்டோசைல இடைவெளி என்று பெயர்.

(ii) புளோயம்: புளோயம் சல்லடைக்குழாய் கூறுகள், துணைச்செல்கள் மற்றும் பாரன்கைமாவினைக் கொண்டது. புளோயம் நார்கள் காணப்படவில்லை.

5. பித்: மையத்தில் பித் காணப்படவில்லை.


இருவிதையிலைஒரு விதையிலைத் தாவரத்தண்டு – வேறுபாடுகள்


 

10th Science : Chapter 12 : Anatomy and Plant Physiology : Internal Structure of Monocot Stem (Maize) in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 12 : தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் : ஒருவிதையிலைத் தாவரத்தண்டின் உள்ளமைப்பு (மக்களாச்சோளம்) - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 12 : தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்