Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்

பொருளாதாரம் - பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் | 12th Economics : Chapter 8 : International Economic Organisations

   Posted On :  16.03.2022 07:33 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்

பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்

பன்னாட்டு பண நிதியம் (International Monetary Fund), உலக வங்கி (International Bank for Reconstruction and Development (IBRD) மற்றும் பன்னாட்டு வாணிக நிறுவனம் (International Trade organization (ITO) ஆகிய மூன்று நிறுவனங்களை உருவாக்க 1944ல் கூடிய பிரிட்டன் வூட்ஸ் மாநாடு பரிந்துரைத்தது

பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்


"மேம்பட்ட ஆற்றல் வளம் பரந்த நிலையில் காணப்படும் பொழுது இடர்கள் நிர்வகிக்கப்பட்டால் எண்ணற்ற அளவில் அந்நிய மூலதனத்திற்கான சூழ்நிலைகள் தெரிவு செய்யப்படுகின்றது”

- ருடி டார்புஷ்


 புரிதலின் நோக்கங்கள்

1. உலக வர்த்தகத்தின் அளவை அதிகரிப்பதில் சர்வதேச பொருளாதார அமைப்புகளின் பங்கை புரிந்து கொள்ளுதல்.

2. பன்னாட்டு பண நிதி, உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் நோக்கங்கள், பணிகள் மற்றும் சாதனைகள் பற்றி அறிந்து கொள்ளுதல்.

3. பிரிக்ஸ் (BRICS), ஏசியான் (ASEAN) மற்றும் சார்க் (SAARC)போன்றவர்த்தக தொகுதிகளின் நோக்கங்கள், பணிகள் மற்றும் சாதனைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்






அறிமுகம்

முந்தைய பாடத்தில் பன்னாட்டு வாணிபத்தின் அடிப்படைகள், வாணிபத்தின் பலன்கள், வாணிப வீதம், அயல்நாட்டுச் செலுத்துநிலை மற்றும் அந்நிய செலாவணி மாற்று வீதம் ஆகியவற்றை பயின்றோம். நாடுகளுக்கிடையே வாணிபம் நடைபெறும் போது, வளர்ந்த நாடுகளே எப்பொழுதும் ஆதாயம் பெறுகின்றது மற்றும் குறை வளர்ச்சி நாடுகள், பாதகமான வாணிப வீதம் மற்றும் அயல்நாட்டு செலுத்துநிலை, அவற்றின் மாற்றுவீதங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. 1930களில் ஏற்பட்ட உலக பெருமந்தம் மற்றும் இரண்டாம் உலகப்போர் தேசிய கொள்கைகளை உருவாக்க முனைந்ததால் ஒவ்வொரு நாடும் ஏற்றுமதியை பெருமளவில் ஊக்குவிப்பதற்கும், இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், வாணிபத் தடைகள், நாணய மாற்றுக் கட்டுப்பாடுகள் மற்றும் நாணய மதிப்புக் குறைத்தல் போன்ற தடைகளை விதித்தது.



ஜான் மேனார்டு கீன்ஸ் (வலது) மற்றும் ஹேரிடெக்ஸ்டர் வொய்ட் (இடது) ஆகியோர்கள் உலக வங்கி மற்றும் பன்னாட்டு பணநிதியம் ஆகிய இரண்டையும் தோற்றுவிக்க காரணமானவர்களாவர்

பன்னாட்டு பண நிதியம் (International Monetary Fund), உலக வங்கி (International Bank for Reconstruction and Development (IBRD) மற்றும் பன்னாட்டு வாணிக நிறுவனம் (International Trade organization (ITO) ஆகிய மூன்று நிறுவனங்களை உருவாக்க 1944ல் கூடிய பிரிட்டன் வூட்ஸ் மாநாடு பரிந்துரைத்தது பன்னாட்டு பண நிதியமும் உலக வங்கியும் 1945ல் செயல்படத் தொடங்கியது. பன்னாட்டு வாணிக நிறுவனத்துக்குப் பதிலாக தற்காலிக தீர்வாக வாணிகம் மற்றும் தீர்வைகளுக்கான பொது ஒப்பந்தம் (General Agreement on Tariff and Trade (GATT) என்ற அமைப்பு அமைப்பக. இது உலக வர்த்தக அமைப்பாக (World Trade Organisation-WTO) 1995ல் மாற்றப்பட்டு நிரந்தர நிறுவனமானது. பன்னாட்டு பண நிதியம், உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் தலைமை அலுவலகம் துவங்கப்பட்ட ஆண்டு அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.



Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 8 : International Economic Organisations : International Economic Organisations Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 8 : பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்