அறிமுகம் - புவியியல் - தலப்பட விவரணம் | 11th Geography : Chapter 11 : Interpretation of Topographical Map

   Posted On :  26.03.2022 01:08 am

11 வது புவியியல் : அலகு 11 : தலப்பட விவரணம்

தலப்பட விவரணம்

நிலவரைபடம் என்பது புவியின் மேற்பரப்பை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ இரு பரிமாண தோற்றத்தில் குறிப்பதாகும்.

தலப்பட விவரணம்


அத்தியாயக் கட்டகம்

11.1 அறிமுகம்

11.2 முறைக் குறிகளும் குறியீடுகளும்

11.3 வரிசைக்கிரமமான நிலவரைபடங்கள்

11.4 எல்லையோர விவரங்கள்

11.5 தலப்பட விவரணம்

11.6 தேர்ந்தெடுக்கப்பட்ட தலப்படத்தை விவரணம் செய்தல்


கற்றல் நோக்கங்கள்

• முறைக் குறிகள் மற்றும் குறியீடுகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல்.

• எல்லையோர விவரங்களை அறிந்து போற்றுதல்.

• நிலவரைபடத்தை படித்தறியும் திறனை வளர்த்துக் கொள்ளுதல்.

• தலப்படத்திலுள்ள இயற்கை மற்றும் கலாச்சாரக் கூறுகளை அடையாளம் காணுதல்.

• தலப்படத்தை விவரணம் செய்தல்.

 

அறிமுகம்

நிலவரைபடம் என்பது புவியின் மேற்பரப்பை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ இரு பரிமாண தோற்றத்தில் குறிப்பதாகும். நில வரைபடம் ஒரு சிறந்த வழிகாட்டிஆனால் அதை முறையாக பயன்படுத்த அதில் கொடுக்கப்பட்டுள்ள திசைகள் மற்றும் தகவல்களை படித்தறியும் திறனை நிலவரைப்படத்தை பயன்படுத்துபவர்கள் பின்பற்ற வேண்டும்.

நிலவரைபடத்தை படித்தறிதல் என்பது நிலத்தில் நாம் பார்க்கும் ஒரு பகுதியானது நிலவரைபடத்தில் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதாகும். இதற்கு சிறந்த பயிற்சி தேவைப்படுகிறது. ஒருவர் ஒரு இடத்தின் தோற்றத்தினை புரிந்து கொள்வதற்கு அவர் அந்த இடத்தோடு அதன் தலப்படத்தை ஒப்பிட்டு பார்க்க நேரடி களப்பயணம் சிறந்த வழியாகும்.


புவியின் அனைத்து தகவல்களையும் நேரடி கள ஆய்வு மூலம் சேகரித்தல் என்பது ஒருவரது வாழ்நாளில் செய்ய முடியாத செயலாகும். ஆனால் மாணவர்கள் புவிப்பரப்பின் தகவல்களை தலப்படங்கள் அல்லது நில வரைபடங்கள் மூலமாக பெற முடிகிறது.

தலப்படம் என்பது பொதுவாக தலப்படத் தாள்கள் என அறியப்படுகிறது. நில அளவை துறையால் தயாரிக்கப்படும் சிறப்பான தலப்படமானது முப்பரிமாண நிலப்பரப்பை தாளில் இரு பரிமாணத்தில் காட்டுகிறது. இந்தியாவில் நாடு முழுமைக்குமான தலப்படங்கள் இந்திய நில அளவைத்துறையால் தயாரிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 1:50,000 என்ற அளவையில் தயாரிக்கப்படுகிறது. மேலும் 1:25,000, 1:2,50,000, மற்றும் 1:1,000,000 அளவையில் தயாரிக்கப்படுகிறது.

Tags : Introduction | Geography அறிமுகம் - புவியியல்.
11th Geography : Chapter 11 : Interpretation of Topographical Map : Interpretation of Topographical Map Introduction | Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 11 : தலப்பட விவரணம் : தலப்பட விவரணம் - அறிமுகம் - புவியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 11 : தலப்பட விவரணம்