Home | 3 ஆம் வகுப்பு | 3வது தமிழ் | காகமும் நாகமும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 5 | 3 ஆம் வகுப்பு தமிழ் - காகமும் நாகமும்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 3rd Tamil : Term 3 Chapter 5 : Kahamum naghaamum

   Posted On :  02.07.2022 08:54 pm

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : காகமும் நாகமும்

காகமும் நாகமும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : காகமும் நாகமும்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்
பயிற்சி

வாங்க பேசலாம்


பாம்பு காகத்தின் முட்டைகளை உடைத்தது சரியா? கலந்துரையாடுக.

பாம்பு காகத்தின் முட்டையை உடைத்தது சரியன்று. ஏனெனில், காகம் தன்  இனத்தைப் பெருக்க எண்ணியது.


காகமும் நாகமும் கதையை உமது சொந்த நடையில் கூறுக.

காகம் ஒன்று ஆலமரத்தில் கூடுக்கட்டி வாழ்ந்து வந்தது. அந்த கூட்டில் தான் இடும் முட்டைகளை பாம்பு ஒன்று தின்று செல்வதை அறிந்து கவலை அடைந்தது. தன்னுடைய கவலையை தன் நண்பன் நரியிடம் கூறியது. அதற்கு நரி .ஒரு வழிமுறையைக் கூறியது.  அதன்படி குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இளவரசியின் முத்துமாலையைத் தூக்கி வந்து தன் கூட்டருகே வைத்தது. காகத்தைத் துரத்தி வந்த வீரர்களைப் பாம்பு தீண்ட முயன்றது. வீரர்கள் தங்கள் வேல் கம்பால் அந்த பாம்பைக் கொன்று முத்துமாலையை எடுத்துச் சென்றனர். காகம் அன்று முதல் மகிழ்வுடன்  வாழ்ந்தது.



படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. காகம் ___________ வாழும். 

அ) கூட்டில்                                         

ஆ) வீட்டில்

இ) புற்றில்                                            

ஈ) மண்ணில்

விடை : அ) கூட்டில் 


2. நண்பர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் 

அ) அன்பானவர்கள்                      

ஆ) உறவினர்கள் 

இ) பகைவர்கள்                                

ஈ) நெருங்கியவர்கள் 

விடை : இ) பகைவர்கள் 


3. முத்துமாலை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

அ) முத்து + மாலை                          

ஆ) முத்தும் + மாலை 

இ) முத்தும் + ஆலை                        

ஈ) முத்து + மலை 

விடை : அ) முத்து + மாலை


4. மரம் + பொந்து இதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

அ) மரம்பொந்து                                     

ஆ) மரப்பொந்து 

இ) மரப்பந்து                                             

ஈ) மரபொந்து

விடை : ஆ) மரப்பொந்து



வினாக்களுக்கு விடையளிக்க.

1. காகத்தின் முட்டைகளைப் பாம்பு என்ன செய்தது?

காகத்தின் முட்டையைப் பாம்பு தினமும் உடைத்தது. 


2. பாம்பை அழிப்பதற்காகக் காகம் யாரிடம் ஆலோசனை கேட்டது?

பாம்பை அழிப்பதற்காக காகம் நரியிடம் ஆலோசனை கேட்டது. 


3. 'காகமும் நாகமும்' கதை உணர்த்தும் நீதி என்ன?

பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வதே நல்லது. 



புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.




நான் ஒரு வீட்டு விலங்கு; இலை, தழைகளை உண்பேன்.  நான் யார்? ஆடு

மரத்திற்கு மரம் தாவுவேன்; வாழைப்பழம் விரும்பி உண்பேன். நான் யார்? குரங்கு

கரும்பே எனக்கு உணவாகும் கருமை எனது  நிறமாகும். - நான் யார்? யானை



முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக.

1. ஒன்று      கொக்கு       இருந்தது         குளக்கரையில்

குளக்கரையில் கொக்கு ஒன்று இருந்தது. 

2. எண்ணியது         சாப்பிட       மீன்களைச்

மீன்களைச் சாப்பிட எண்ணியது. 

3. அனைத்தும்     சென்றன     விளையாடிச்

அனைத்தும் விளையாடச் சென்றன.



எந்த உயிரினத்திற்கு என்ன பண்பு?




மொழி விளையாட்டு.


1. தா   தாய்   தாய்மை

2. வா  வாய்  வாய்மை

3. தூ   தூய்   தூய்மை

4. கா   காய்   காய்மை



பெயர் எது? செயல் எது?

                                      பெயர்         செயல்

1. குதிரை வேகமாக ஓடியது         குதிரை       ஓடியது

2. ஆசிரியர் பாடம் நடத்தினார்       ஆசிரியர்      பாடம் நடத்தினார்

3. குழந்தை சிரித்தது                 குழந்தை      சிரித்தது


கலையும் கைவண்ணமும்




செயல் திட்டம்.


பறவை  இறகுகளைச்  சேகரித்து  வருக. 


முத்துமாலை படம் வரைந்து வண்ணம் தீட்டி வருக.



Tags : Term 3 Chapter 5 | 3rd Tamil பருவம் 3 இயல் 5 | 3 ஆம் வகுப்பு தமிழ்.
3rd Tamil : Term 3 Chapter 5 : Kahamum naghaamum : Kahamum naghaamum: Questions and Answers Term 3 Chapter 5 | 3rd Tamil in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : காகமும் நாகமும் : காகமும் நாகமும்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 5 | 3 ஆம் வகுப்பு தமிழ் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : காகமும் நாகமும்