Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | மூடுவிதைத் தாவரச் சூலின் நீள்வெட்டுத் தோற்றம்

கண்ணாடித் தகடுகளைத் தயாரித்தலும், செயல்முறைகளும் - தாவரவியல் செய்முறைகள் - மூடுவிதைத் தாவரச் சூலின் நீள்வெட்டுத் தோற்றம் | 12th Botany : Practicals

   Posted On :  10.08.2022 02:07 am

12 வது தாவரவியல் : செய்முறைகள்

மூடுவிதைத் தாவரச் சூலின் நீள்வெட்டுத் தோற்றம்

நோக்கம் : மூடுவிதைத் தாவரச் சூலின் நீள்வெட்டுத் தோற்றத்தைக் கண்டறிதல்.

கண்ணாடித் தகடுகளைத் தயாரித்தலும், செயல்முறைகளும்


சோதனை எண் 2: மூடுவிதைத் தாவரச் சூலின் நீள்வெட்டுத் தோற்றம்

நோக்கம் : மூடுவிதைத் தாவரச் சூலின் நீள்வெட்டுத் தோற்றத்தைக் கண்டறிதல்.

கொள்கை : மலரின் பெண் இனப்பெருக்கப் பகுதியின் அகன்ற அடிப்பகுதி சூலகப்பை ஆகும். சூல்கள் சூலகப்பையினுள் காணப்படுகின்றன. கருவுறுதலுக்குப் பின் இவை விதைகளாகின்றன.

தேவையானவை: சூலின் நீள்வெட்டுத் தோற்றம் கொண்ட நிரந்தரக் கண்ணாடித் தகடு, கூட்டு நுண்ணோக்கி.


கண்டறியும் பண்புகள்

• சூல் அல்லது பெருவித்தகம் ஒன்று அல்லது இரு சூலுறைகளால் பாதுகாக்கப்படுகிறது.

• சூலின் காம்பு சூல்காம்பு எனப்படும்.

•சூல்காம்பு சூலுடன் இணையும் பகுதிக்கு ஹைலம் என்று பெயர்.

• சூலின் மையப்பகுதியில் காணப்படும் பாரங்கைமா திசுப் பகுதிக்குச் சூல்திசு என்று பெயர்.

• சூலுறை உருவாக்கும் துளை சூல்துளை என்றும் சூல்துளைக்கு எதிராக உள்ள பகுதி சலாசா என்றும் அழைக்கப்படுகிறது.

• சூல்திசுவினுள் சூல்துளை அருகில் காணப்படும் பெரிய, நீள்வட்ட வடிவைப் போன்ற அமைப்பு கருப்பை ஆகும்.

• ஒரு முதிர்ந்த சூலின் கருப்பை 8 உட்கருக்களைக் கொண்டிருக்கும்.

Tags : Preparation and Demonstration of Slides - Botany Practicals கண்ணாடித் தகடுகளைத் தயாரித்தலும், செயல்முறைகளும் - தாவரவியல் செய்முறைகள்.
12th Botany : Practicals : L.S of an Angiospermic ovule Preparation and Demonstration of Slides - Botany Practicals in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : செய்முறைகள் : மூடுவிதைத் தாவரச் சூலின் நீள்வெட்டுத் தோற்றம் - கண்ணாடித் தகடுகளைத் தயாரித்தலும், செயல்முறைகளும் - தாவரவியல் செய்முறைகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : செய்முறைகள்