Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | நிலவரைபடம் மற்றும் அளவை

அறிமுகம் - புவியியல் - நிலவரைபடம் மற்றும் அளவை | 11th Geography : Chapter 9 : Maps and Scale

   Posted On :  25.03.2022 07:44 pm

11 வது புவியியல் : அலகு 9 : நிலவரைபடம் மற்றும் அளவை

நிலவரைபடம் மற்றும் அளவை

நிலவரைபடம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவையில் புவி முழுவதையும் அல்லது ஒரு பகுதியை மட்டும் தட்டையான பரப்பில் குறிப்பிட்டுக் காட்டுவதாகும்.

நிலவரைபடம் மற்றும் அளவை


அத்தியாயக் கட்டகம் 

9.1 அறிமுகம்

9.2 நிலவரைபடத்தின் அளவை

9.3 இடங்களுக்கிடையேயான தூரத்தை

அளவை செய்தல்

9.4 பரப்பளவை அளவை செய்தல்

9.5 நிலவரைபடத்தை பெரிதாக்குதலும் சிறிதாக்குதலும்.

 

அறிமுகம்

நிலவரைபடம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவையில் புவி முழுவதையும் அல்லது ஒரு பகுதியை மட்டும் தட்டையான பரப்பில் குறிப்பிட்டுக் காட்டுவதாகும். நிலவரைபடங்கள் இயற்கை மற்றும் கலாச்சார கூறுகளான நிலத்தோற்றம், காலநிலை, இயற்கை வளங்கள், அரசியல் எல்லைகள், சாலைகள், மக்கள் தொகை, பொருளாதார நடவடிக்கைகள் போன்றவற்றை சித்தரித்துக் காட்ட முயற்சிக்கிறது.

 

நிலவரைபடக் கூறுகள்

தலைப்பு, குறிப்பு, திசை, அளவை மற்றும் ஆதாரம் ஆகியவை நிலவரைபடத்தின் அடிப்படைக் கூறுகளாகும். இது வரையப்பட்ட நிலவரைபட பகுதியின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளின் பரவலைத் தருகிறது.

 

கற்றல் நோக்கங்கள்

நிலவரைபடக் கூறுகளைக் கண்டறிதல்.

நிலவரைபட வகைகள் மற்றும் அளவையை அறிதல்.

நில வரைபட அளவையை ஒரு அளவையிலிருந்து மற்றொரு அளவைக்கு மாற்றி அமைத்தல்.

பலவகையான நிலவரைபட அளவைகளை வரைதல். 

 

தலைப்பு

தலைப்பு நிலவரைபடத்தின் பொருளடக்கத்தை எடுத்துரைக்கிறது. இது பெரும்பாலும் நிலவரைபடத்தின் மேல்மையப் பகுதியில் அல்லது கீழ்மையப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.


அளவை

நில வரைபடத்தில் இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரத்திற்கும், நிலப்பரப்பில் உள்ள அதே இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தை அளவை என்கிறோம். இது சொற்றொடர், பிரதிபின்னம் அல்லது நீள் அளவை முறைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. நிலவரைபடத்தின் அளவை மிக முக்கியமான இடத்தில் கொடுக்கப்பட வேண்டும். இது தலைப்புக்குக் கீழ் அல்லது நிலவரைபடத்தின் கீழ் பகுதியில் ஏதோ ஒரு இடத்தில் இடம்பெற வேண்டும்.



குறிப்பு

குறிப்பு என்பது நிலவரைபடத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறுபட்ட முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளைப் பற்றி விளக்குகிறது. இது வழக்கமாக நிலவரைபடத்தின் கீழ்பகுதியில் இடது அல்லது வலது மூலையில் இடம்பெற்றிருக்கும்.


திசைகள்

திசைகள் பெரும்பாலும் நில வரைபடத்தின் மேல்பகுதியில் வடக்கு நோக்கி அமைந்திருப்பது தான் வழக்கம். இது நிலவரைபடத்தின் மேல், வலது மூலையில் ஒரு மேல்நோக்கிய அம்புக்குறியால் குறிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் திசையைக் காட்ட அம்புகுறிக்குப் பதிலாக ஒரு உயர்ந்த திசைக்காட்டிப் பயன்படுத்தப்படுகிறது.

 

ஆதாரம்

ஒவ்வொரு நிலவரைபடமும் பயன்படுத்தப்படும் புள்ளிவிவரங்களின் ஆதாரத்தை தரவேண்டும். சாதாரணமாக, இந்த ஆதாரங்கள் நிலவரைபடத்தின் சட்டகத்திற்கு (frane) வெளியே கீழ்ப்பகுதியின் வலப்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். கீழ் இடப்பக்கத்தில் ஆசிரியர், வெளியீட்டாளர், வெளியிடப்படும் இடம் மற்றும் வெளியிடப்பட்ட ஆண்டு போன்றவை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

பயிற்சி 1

படம் 9.1 இல் உள்ள நிலவரைபடத்தைப் பார்த்து நில வரைபடக் கூறுகளை இந்திய புறவரி நிலவரைபடத்தில் குறிக்கவும்.

 



பயிற்சி 2 

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், தமிழ்நாடு நிலவரைபடத்தில் அதன் முக்கிய கூறுகளை உரிய இடங்களில் குறிக்கவும்.




பயிற்சி 3 

நிலவரைபடத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு பிரிவுக் குறியீடுகளைக் கொண்டு

அ. இருப்புப் பாதை

ஆ. சாலை வழிகள்

இ. நீர் நிலைகள்

ஈ. இயற்கைப் பிரிவுகள்

உ. கலாசாரப் பிரிவுகள்

ஊ. தாவரங்கள் போன்றவற்றை வரையவும். 


Tags : Introduction | Geography அறிமுகம் - புவியியல்.
11th Geography : Chapter 9 : Maps and Scale : Maps and Scale Introduction | Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 9 : நிலவரைபடம் மற்றும் அளவை : நிலவரைபடம் மற்றும் அளவை - அறிமுகம் - புவியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 9 : நிலவரைபடம் மற்றும் அளவை