Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பொருளாதார முன்னேற்றத்தை அளவிடுதல்
   Posted On :  17.03.2022 03:07 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்

பொருளாதார முன்னேற்றத்தை அளவிடுதல்

பொருளாதார முன்னேற்றத்தை நான்கு முறைகளில் அளவிடலாம்.

பொருளாதார முன்னேற்றத்தை அளவிடுதல்

பொருளாதார முன்னேற்றத்தை நான்கு முறைகளில் அளவிடலாம்.


* நாட்டின் மொத்த உற்பத்தி (Gross National Product GNP)

ஒரு நாட்டின் புவி எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் சந்தை மதிப்புடன் அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் ஈட்டிய வருமானத்திற்கும், வெளிநாட்டினர் சம்பாதித்து அவர்கள் நாட்டுக்கு அனுப்பிய வருமானத்திற்குமிடையிலான வேறுபாடுத்தொகையை கூட்டினால் கிடைக்கும் மொத்த மதிப்பே மொத்த நாட்டு உற்பத்தி எனலாம். இந்த கருத்தினைக் கொண்டு ஒரு நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பிடலாம். மற்றவை மாறாதிருக்கும் போது நாட்டின் மொத்த நாட்டு உற்பத்தி அதிகமாக இருந்தால் அந்நாட்டு மக்களின் உயர்வான வாழ்க்கைத்தரத்துக்கு வழிவகுக்கும் என கருதப்படுகிறது.

* தலாவீத மொத்த நாட்டு உற்பத்தி (GNP Per Capita)

ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஆண்டின் மொத்த உற்பத்தி மதிப்பை அந்த ஆண்டின் மக்கள் தொகையால் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகையே தலாவீத மொத்த நாட்டு உற்பத்தியாகும். இந்த அளவிடும் முறை நீண்டகாலத்தில் தலா உற்பத்தி மதிப்பு அதிகரித்தலைக் குறிப்பிடுகிறது. தலா வருமானம் அதிகரிக்கும் வேகம் மக்கள் தொகை அதிகரிக்கும் வேகத்தைவிட உயர்வாக இருக்க வேண்டும் என இந்த அளவிடும் முறை வலியுறுத்துகிறது.

* நலன்:

பண்டங்கள் மற்றும் பணிகளை மக்கள் வாங்கி பயன்படுத்துவது அதிகரிப்பதையே பொருளாதார முன்னேற்றமாக கருதப்படுகிறது. மக்கள் நலன் என்ற கண்ணோட்டத்தில் பொருளாதார முன்னேற்றத்தை மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு மேம்படுவதாக சார்ந்து வரையறுக்கலாம்.

* சமூகக் குறியீடுகள் (Social Indicators):

மக்களின் அடிப்படை மற்றும் கூட்டுத் தேவையை நிவர்த்தி செய்வதை சமூக குறியீடுகள் என அழைக்கப்படுகிறது. நேரடியாக வழங்கப்படும் அடிப்படைத் தேவை என்பது மக்களின் சுகாதாரம், கல்வி, உணவு, குடிநீர், துப்புரவு மற்றும் வீட்டு வசதி ஆகியவையாகும். இவற்றைக் கொண்டு சமூக பின்னடைவு தவிர்க்கப்படுகிறது.


பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள்

பல காரணிகள் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயம் செய்கின்றன. அவற்றை நான்கு வகையாக பிரிக்கலாம். அவையாவன பொருளாதாரம், சமூகம், அரசியல் மற்றும் மதம் சார்ந்த காரணிகள். இவற்றை பொருளாதாரம் மற்றும் பொருளாதாரம் சாராத பிற காரணிகள் என எளிமையாக இரண்டே வகையாகவும் பிரித்து விடலாம்.


12th Economics : Chapter 11 : Economics of Development and Planning : Measurement of Economic Development in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் : பொருளாதார முன்னேற்றத்தை அளவிடுதல் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்