Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | இடங்களுக்கு இடையேயான தூரத்தை அளவை செய்தல்

புவியியல் - இடங்களுக்கு இடையேயான தூரத்தை அளவை செய்தல் | 11th Geography : Chapter 9 : Maps and Scale

   Posted On :  25.03.2022 07:58 pm

11 வது புவியியல் : அலகு 9 : நிலவரைபடம் மற்றும் அளவை

இடங்களுக்கு இடையேயான தூரத்தை அளவை செய்தல்

நிலவரைபடத்தில் நீளத்தை அளப்பதில் இரு வகைகள் உள்ளன. 1. நேர்க்கோடுகள் 2. வளைந்த கோடுகள்

இடங்களுக்கு இடையேயான தூரத்தை அளவை செய்தல்

நிலவரைபடத்தில் நீளத்தை அளப்பதில் இரு வகைகள் உள்ளன.

1. நேர்க்கோடுகள்

2. வளைந்த கோடுகள்

 

நேர்க்கோடுகளின் அம்சங்கள்.

சாலைகள், இருப்புப் பாதைகள் மற்றும் கால்வாய்கள் போன்றவற்றின் நீளத்தை அளவிடுவது எளிது. டிவைடர் அல்லது அளவையின் உதவியுடன் நேரடியாக நிலவரைபடத்தின் தூரத்தை அளவிடலாம். நிலவரைப்படத்தின் தூரத்தை நேர்க்கோட்டின் உதவியுடன் அளவிடலாம்.

 

வளைந்த கோட்டின் அம்சங்கள்.

வளைந்த தோற்றங்களான கடற்கரை, ஆறுகள், சிற்றாறு போன்றவைகளின் தூரத்தை மிக கவனமாக அளவிடுதல் வேண்டும். வளைந்த அமைப்பு கயிறு அல்லது நூல் வைத்து ஆரம்ப புள்ளியில் குறித்த பின்பு வளைந்த கோட்டின் இறுதி வரை அளந்து தூரத்தை அளவிடலாம். பின்பு கயிற்றை அளந்து தூரத்தை தெரிந்து கொள்ளலாம். ரோட்டோ மீட்டர் என்ற எளிய உபகரணம் பயன்படுத்தி தூரத்தை அளவிடலாம். ரோட்டோ மீட்டரில் உள்ள சக்கரம் வளைந்த பரப்பின் மேல் நகர்த்தியும் வளைந்த கோட்டின் தூரத்தை அளவிடும் ஆரம்பம் மற்றும் முடிவு வரை அளவை குறித்து கொள்ள வேண்டும். நூல் மற்றும் அளவுகோல் உதவியுடன் வளைந்த கோட்டின் தூரம் அளவிடுதல்.



உதாரணம்

அ) பீல் மற்றும் கேசில் நகரங்களுக்கு இடையே உள்ள நேர்க்கோட்டு தூரத்தை அளவிடுதல்



படி 1. பீல் மற்றும் கேசில் நகரங்களுக்கு இடையே உள்ள தூரத்தை அளவுகோல் அல்லது ஒரு நூல் உதவியுடன் சென்டிமீட்டரில் அளக்கவும் (எ.கா) 2.9 செ.மீ.

படி 2. 1 செ.மீ = 10கி.மீ என மேப்பின் அளவை எடுத்துக் கொள்ளவும்

படி 3. மேப்பின் அளவையால் அளவிடப்பட்ட தூரத்தை பெருக்கவும் (2.9 x 10 கி.மீ = 29 கி.மீ)

விடை இரண்டு நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் 29 கி.மீ ஆகும்

ஆ) வளைந்த கோடான அ மற்றும் ஆ என்ற இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரத்தை அளவிடுதல். நூல் உதவியுடன் வளைந்த கோட்டின் தூரம் அளவிடுதல்



படி 1. ஒரு நூலின் உதவியுடன் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரத்தை அளக்கவும்.

படி 2. நூலை அளவு கோல் மீது வைத்து செ.மீட்டரில் அளக்கவும் (எ.கா) 3.2 கி.மீ

படி 3. நிலவரைபடத்தில் அளவை 1 செ.மீ = 1 கி.மீ என குறிக்கவும்

படி 4. நிலவரைபடத்தில் அளவையை , அளக்கப்பட்ட தூரத்தால் பெருக்கவும் 3.2 x 1 கி.மீ = 3.2 கி.மீ

விடை: இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம் 3.2 கி.மீ

 

 

பயிற்சி

1. உனக்கு அருகில் உள்ள நகரத்திற்கும் சென்னை நகருக்கும் இடையேயான சாலை மற்றும் தொடர் வண்டி தூரத்தை தமிழ்நாடு வரைபடத்தின் உதவியுடன் அளந்து பார்.

2. தமிழ்நாடு கடற்கரையின் நீளத்தை அளக்கவும்

3. தலப்படத்தில் உள்ள ஏதேனும் இரண்டு கிராமங்களுக்கு இடையே உள்ள தூரத்தை அளந்து பார்க்கவும்.

-

 

செயல்பாடு

https://support.google.com/maps/ answer/1628031?co5GENIE...hl5e

மேற்கண்ட இணைய தொடர்பை பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட ஏதேனும் இரு இடங்களின் தூரத்தை கணக்கிடுக.

 

Tags : Geography புவியியல்.
11th Geography : Chapter 9 : Maps and Scale : Measurement of distance between places Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 9 : நிலவரைபடம் மற்றும் அளவை : இடங்களுக்கு இடையேயான தூரத்தை அளவை செய்தல் - புவியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 9 : நிலவரைபடம் மற்றும் அளவை