Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | உலோகவியல் : சரியான விடையைத் தேர்வு செய்க

வேதியியல் - உலோகவியல் : சரியான விடையைத் தேர்வு செய்க | 12th Chemistry : UNIT 1 : Metallurgy

   Posted On :  18.08.2022 11:02 pm

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 1 : உலோகவியல்

உலோகவியல் : சரியான விடையைத் தேர்வு செய்க

வேதியியல் : உலோகவியல் : சரியான விடைகளுக்கான பதில்கள், தீர்வு மற்றும் விளக்கம்

வேதியியல் : உலோகவியல்

I. சரியான விடையைத் தேர்வு செய்க


1. பாக்ஸைட்டின் இயைபு

) A12O3

) Al2O3.nH2

) Fe2O3.2H2

) இவை எதுவுமல்ல

விடை : ) Al2O3.nH2


2. ஒரு சல்பைடு தாதுவை வறுக்கும் போது (A) என்ற நிறமற்ற வாயு வெளியேறுகிறது. (A) ன் நீர்க் கரைசல் அமிலத்தன்மை உடையது. வாயு (A) ஆனது 

) CO2 

) SO3 

) SO2 

)H2S

விடை : ) SO2 


3. பின் வரும் வினைகளில் , எவ்வினையானது காற்றில்லா சூழலில் வறுத்தலைக் (Calcination) குறிப்பிடுகின்றது

) 2Zn +O2 + 2ZnO 

) 2ZnS + 3O2 – 2ZnO + 2SO2 

) MgCo3  – MgO + CO2 

) () மற்றும் ()

விடை : ) MgCO3 – Mgo + CO2


4. கார்பனைக் கொண்டு உலோகமாக ஒடுக்க இயலாத உலோக ஆக்ஸைடு

) PbO

) Al2O3 

) ZnO 

) FeO

விடை : ) Al2O3 


5. ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம் 

) A1 

) Ni 

) Cu 

) Zn

விடை : ) Al 


6. ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது

) CS2 மற்றும் H2S ஆகியவற்றைக் காட்டிலும் சல்பைடின் G°f மதிப்பு அதிகம்

) சல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும் வினைக்கு AG°r மதிப்பு எதிர்க்குறியுடையது

) சல்பைடை அதன் ஆக்ஸைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல் முறையாகும்

) உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான  ஒடுக்கும் காரணிகளாகும்

விடை : ) உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும்.


7. கலம் I உள்ளனவற்றைக் கலம் - II ல் உள்ளனவற்றுடன் பொருத்தித் தகுந்த விடையினைத் தெரிவு செய்க


கலம்  I    கலம்  II 

A. சயனைடு செயல்முறை – i.  மிகத்தூய்மையான Ge 

B.  நுரை மிதத்தல் செயல்முறை – ii.  ZnS தாதுவை அடர்பித்தல்

C. மின்னாற் ஒடுக்குதல் – iii.  Al பிரித்தெடுத்தல்

D. புலத்தூய்மையாக்குதல் – iv.  Au பிரித்தெடுத்தல்

                                                           - v.  Ni தூய்மையாக்குதல்

         A          B            C             D

)   (i)         (ii)           (iii)         (iv) 

)   (iii)       (iv)          (v)           (i) 

)    (iv)        (ii)          (iii)          (i)

)     (ii)         (iii)          (i)           (v) 

விடை : )    (iv)      (ii)     (iii)     (i) 


8. உல்ப்ரமைட் (Worframite) தாதுவை வெள்ளீயக்கல்லில் (tinstone) இருந்து பிரித்தெடுக்கும் முறை    

) உருக்குதல் 

) காற்றில்லாச் சூழலில் வறுத்தல் 

) வறுத்தல் 

) மின்காந்தப் பிரிப்பு முறை

விடை : ) மின்காந்தப் பிரிப்பு முறை 


9. பின்வருவனவற்றுள் நிகழ வாய்ப்பில்லாத வினை எது?

) Zn(s) + Cu 2+ (aq) → Cu(s) + Zn2+ (aq) 

) Cu(S) + Zn2+ (aq) → Zn(s) + Cu2+T(aq) 

) Cu(s) + 2Ag+ (aq) → 2Ag(s) + Cu2+(aq) 

) Fe(s) + Cu2 (aq) → Cu(s) + Fe2+(aq)

விடை : ) Cu(S) + Zn2+ (aq) + → Zn(s) + Cu2+T(aq)


10. பின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலில் மின்வேதி முறை பயன்படுகிறது

) இரும்பு

) லெட் 

) சோடியம் 

) சில்வர்

விடை : ) சோடியம் 


11. இளக்கி (Flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது?

) தாதுக்களை சிலிக்கேட்டுகளாக மாற்ற 

) கரையாத மாசுக்களை, கரையும் மாசுக்களாக மாற்ற 

) கரையும் மாசுக்களை கரையாத மாசுக்களாக மாற்ற

) மேற்கண்டுள்ள அனைத்தும் 

விடை : ) கரையாத மாசுக்களை கரையும் மாசுக்களாக மாற்ற 


12. பின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பிக்க நுரைமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்

) மேக்னடைட் 

) ஹேமடைட் ) கலீனா

) கேசிட்டரைட்

விடை : ) கலீனா 


13. அலுமினாவிலிருந்து மின்னாற்பகுத்தல் முறையில் அலுமினியத்தினை பிரித்தெடுத்தலில் கிரையோ லைட் சேர்க்கப்படுவதன் காரணம் 

) அலுமினாவின் உருகு நிலையினைக் குறைக்க 

) அலுமினாவிலிருந்து மாசுக்களை நீக்க 

) மின் கடத்துத் திறனைக் குறைக்க 

) ஒடுக்கும் வேகத்தினை அதிகரிக்க

விடை : ) அலுமினாவின் உருகு நிலையினைக் குறைக்க 


14. ZnO விலிருந்து துத்தநாகம் (Zinc) பெறப்படும் முறை 

) கார்பன் ஒடுக்கம் 

) வெள்ளியைக் கொண்டு ஒடுக்குதல் (Ag) 

) மின்வேதி செயல்முறை 

) அமிலக் கழுவுதல்

 விடை : ) கார்பன் ஒடுக்கம் 


15. பின்வருவனவற்றுள் எந்த உலோகத் தூய்மை யாக்கலில் புடமிடுதல் (Cupellation) பயன்படுகிறது 

) வெள்ளி (silver) 

) காரீயம் (lead) 

) தாமிரம் (copper) 

) இரும்பு (iron)

விடை : ) வெள்ளி (silver) 


16. சில்வர் மற்றும் தங்கம் பிரித்தெடுத்தல் முறையானது சயனைடைக் கொண்டு கழுவுதலை உள்ளடக்கியது. இம்முறையில் பின்னர் சில்வர் மீளப் பெறப்படுதல் 

) வாலை வடித்தல் (Distillation) 

) புலதூய்மையாக்கல் (Zone refining) 

) துத்தநாகத்துடன் (Zinc) உலோக இடப்பெயர்ச்சி வினை

) நீர்மமாக்கல் (liquation)

விடை : ) துத்தநாகத்துடன் (Zinc) உலோக இடப்பெயர்ச்சி வினை 


17. எலிங்கம் வரைபடத்தினைக் கருத்திற் கொள்க பின் வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகத்தினைப் பயன்படுத்த முடியும்

) Fe 

) Cu 

) Mg 

), Zn

விடை : ) Mg 


18. சிர்கோனியத்தினை (Zr) தூய்மையாக்கலின் பின் வரும் வினைகள் பயன்படுகின்றன. இம்முறை பின்வருமாறு அழைக்கப்படுகிறது

    

) உருக்கிப்பிரித்தல் 

) வான் ஆர்கல் முறை 

) புலத்தூய்மையாக்கல் 

) மான்ட் முறை 

விடை : ) வான் ஆர்கல் முறை 


19. உலோகவியலில், தாதுக்களை அடர்ப்பிக்க பயன் படுத்தப்படும் முறைகளுள் ஒன்று 

) வேதிக்கழுவுதல் 

) வறுத்தல் 

) நுரைமிதப்பு முறை 

) () மற்றும் ()

விடை : ) () மற்றும் (


20. பின்வருவனவற்றுள் சரியல்லாத கூற்று எது

) நிக்கல் மான்ட் முறையில் தூய்மையாக்கப் படுகிறது 

) டைட்டேனியம் வான் ஆர்கல் முறைப்படி தூய்மையாக்கப்படுகிறது 

) ஜிங்க் பிளன்ட் (ZnS) நுரை மிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது 

) தங்கத்தை பிரித்தெடுக்கும் உலேகாவியலில், உலோகமானது நீர்த்த சோடியம் குளோரைடு கரைசலைக் கொண்டு வேதிக்கழுவப்படுகிறது

விடை : ) தங்கத்தை பிரித்தெடுக்கும் உலேகாவியலில், உலோகமானது நீர்த்த சோடியம் குளோரைடு கரைசலைக் கொண்டு வேதிக்கழுவப் படுகிறது.


21. மின்னாற்பகுத்தல் முறையில் காப்பரை தூய்மை யாக்குவதில், பின்வருவனவற்றுள் எது நேர்மின் வாயாக பயன்படுத்தப்படுகிறது

) தூய காப்பர் 

) தூய்மையற்ற காப்பர் 

) கார்பன் தண்டு 

) பிளாட்டினம் மின்வாய்

விடை : ) தூய்மையற்ற காப்பர் 


22. பின்வருவனவற்றுள் எந்த வரைபடம் எலிங்கம் வரைபடத்தினைக் குறிப்பிடுகிறது

)  ∆S VsT

)  ∆G0VsT

) ∆0Vs1/T

)   ∆G0VsT2

விடை : )  ∆G0VsT


23. எலிங்கம் வரைபடத்தில், கார்பன் மோனாக்ஸைடு உருவாதலுக்கு

) (ΔSº/ΔT) எதிர்குறியுடையது

(ΔGº/ΔT)நேர்குறியுடையது

(ΔGº/ΔT) எதிர்குறியுடையது

)  (ΔT/ ΔGº)ஆரம்பத்தில் நேர்குறியுடையது

விடை : (ΔGº/ΔT) எதிர்குறியுடையது


24. பின்வருவனவற்றுள் எவ்வினை வெப்ப இயக்க வியலின்படி சாதகமான வினையல்ல?       

) Cr 2O3 + 2A1 → Al2O3 + 2Cr

) Al2O3 + 2Cr → Cr2O3 + 2Al 

) 3TiO2 + 4A1 →2Al2O3 + 3Ti 

) இவை எதுவுமல்ல

விடை : ) Al2O3 + 2Cr → Cr2O3 + 2Al 


25. எலிங்கம் வரைபடத்தைப் பொறுத்து, பின்வரு வனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது

) கட்டிலா ஆற்றல் மாற்றம் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. நிலைமையில் மாற்றம் ஏற்படும் போது நேர்கோட்டிலிருந்து விலகல் ஏற்படுகிறது

) CO2 உருவாதலுக்கான வரைபடமானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ இணையாக உள்ளது

) CO ஆனது எதிர்க்குறி சாய்வு மதிப்பினைப் பெற்றுள்ளது. எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது CO அதிக நிலைப்புத் தன்மை உடைய தாகிறது

உலோக ஆக்சைடுகள் நேர்க்குறி சார்பு, மதிப்பானது, வெப்பநிலை அதிகரிக்கும் போது அவைகளின் நிலைப்புத்தன்மை குறைவதைக் காட்டுகிறது

விடை : ) CO2 உருவாதலுக்கான வரை படமானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ இணையாக உள்ளது.


Tags : Chemistry வேதியியல்.
12th Chemistry : UNIT 1 : Metallurgy : Metallurgy: Choose the correct answer Chemistry in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 1 : உலோகவியல் : உலோகவியல் : சரியான விடையைத் தேர்வு செய்க - வேதியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 1 : உலோகவியல்