Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | மைட்டோகாண்ட்ரியா

பணி, அமைப்பு - மைட்டோகாண்ட்ரியா | 10th Science : Chapter 12 : Anatomy and Plant Physiology

   Posted On :  30.07.2022 06:48 pm

10வது அறிவியல் : அலகு 12 : தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்

மைட்டோகாண்ட்ரியா

மைட்டோகாண்ட்ரியாவின் சவ்வுகள்: உள் மற்றும் வெளிச்சவ்வுகளால் சூழப்பட்ட ஒரு நுண்ணுறுப்பாகும். ஒவ்வொரு சவ்வும் 60 - 70 A° தடிமனுடையது. வெளிச்சவ்வானது வழவழப்பானது.

மைட்டோகாண்ட்ரியா

செல்லில் காணப்படும் இழைபோன்ற அல்லது துகள் போன்ற சைட்டோபிளாச நுண்ணுறுப்பு மைட்டோகாண்ட்ரியாவாகும். இவற்றை முதன் முதலில் 1857 ஆம் ஆண்டு கோலிக்கர் என்பவர் வரித்தசைச் செல்களில் கண்டறிந்தார். செல்லின் ஆற்றல் நாணயம் என அழைக்கப்படும். ATP மைட்டோகாண்ட்ரியாவில் உற்பத்தியாவதால் மைட்டோகாண்ட்ரியா செல்லின் ஆற்றல் நிலையம் என அழைக்கப்படுகிறது. மைட்டோகாண்ட்ரியாவின் அளவ 0.5 µm to 2.0 µm வரை பல்வேறு அளவுகளில் வேறுபட்டு காணப்படுகிறது. மைட்டோகாண்டரியாவில் 60-70% புரதம், 25 - 30% லிப்பிடுகள் 5-7% RNA, DNA மற்றும் கனிமங்களும் உள்ளன

 

1. மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு

மைட்டோகாண்ட்ரியாவின் சவ்வுகள்: உள் மற்றும் வெளிச்சவ்வுகளால் சூழப்பட்ட ஒரு நுண்ணுறுப்பாகும். ஒவ்வொரு சவ்வும் 60 - 70 A° தடிமனுடையது. வெளிச்சவ்வானது வழவழப்பானது. அனைத்து மூலக்கூறுகளையும் உட்செல்ல அனுமதிக்கும். இதில் நொதிகள், புரதம் மற்றும் லிப்பிடுகள் காணப்படுகின்றன. இச்சவ்வில் உள்ள போரின் மூலக்கூறுகள் (புரத மூலக்கூறுகள்) வெளிமூலக்கூறுகள் செல்வதற்கு கால்வாயாக செயல்படுகிறது.

உட்புறச்சவ்வு பல மடிப்புகளுடன் காணப்படுகிறது. இவை ஒரு தேர்வுகடத்து சவ்வாகவும், குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே செல்ல அனுமதிக்கும். இதில் கடத்துப் புரதங்களும் நொதிகளும் உள்ளன. இதில் 80% புரதம் மற்றும் லிப்பிடுகள் உள்ளன.


கிரிஸ்டே : உட்புறச்சவ்வில் காணப்படும் விரல் போன்ற நீட்சிகள் கிரிஸ்டே எனப்படும். இந்த கிரிஸ்டாவானது பரப்பளவை அதிகரிக்கிறது மற்றும் பல நொதிகளைப் பெற்றுள்ளன.

ஆக்ஸிசோம் அல்லது F1 துகள்கள் : கிரிஸ்டாவில் பல நுண்ணிய டென்னிஸ் ராக்கட் வடிவ துகள்கள் காணப்படுகின்றன. இவை ஆக்ஸிசோம்கள் (F1 துகள்கள்) என அழைக்கப்படுகின்றன. இவை ATP உற்பத்தியில் பங்குகொள்கின்றன.


மைட்டோகாண்ட்ரியாவின் மேட்ரிக்ஸ் : புரதம் மற்றும் லிப்பிடுகளைக் கொண்ட ஒரு சிக்கலான கலவையாகும். இதில் கிரப் சுழற்சிக்குத் தேவையான நொதிகள், 70S ரைபோசோம், tRNA க்கள் மற்றும் DNA ஆகியவை உள்ளன.

 

2. மைட்டோகாண்ட்ரியாவின் பணி

· சுவாசித்தலுக்கு தேவையான ஒரு முக்கிய நுண்ணுறுப்பாகும். இதில் ஏராளமான ATP க்கள் உருவாகின்றன. எனவே இது செல்லின் ஆற்றல் மையம் அல்லது சக்தி நிலையம் என அழைக்கப்படுகிறது.

· செல்லின் கால்சியம் அயனிகளின் சமநிலையைப் பாதுகாக்கிறது.

· செல்லின் வளர்சிதை மாற்ற செயலில் பங்கு கொள்கிறது.

 

Tags : Functions, Structure பணி, அமைப்பு.
10th Science : Chapter 12 : Anatomy and Plant Physiology : Mitochondria Functions, Structure in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 12 : தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் : மைட்டோகாண்ட்ரியா - பணி, அமைப்பு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 12 : தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்