Home | 2 ஆம் வகுப்பு | 2வது கணிதம் | ரூபாயும் நாணயங்களும்

பருவம்-3 அலகு 4 | 2வது கணக்கு - ரூபாயும் நாணயங்களும் | 2nd Maths : Term 3 Unit 4 : Money

   Posted On :  04.05.2022 12:39 am

2வது கணக்கு : பருவம்-3 அலகு 4 : பணம்

ரூபாயும் நாணயங்களும்

ஆசிரியருக்கான குறிப்பு : கொடுக்கப்பட்ட பணத்திற்கு ஏற்பப் பொருட்களை வாங்குவதற்கான பட்டியல் தயாரிக்க மாணவர்களை ஊக்கப்படுத்தலாம்.

ரூபாயும் நாணயங்களும்


பயணம் செய்வோம்

கடை வீதியில்


குழலினிஅவள் தாயுடன் கடைவீதிக்குச் செல்கிறாள். அங்குஅவள் எல்லாப் பொருள்களிலும் விலைகள் கொண்ட மதிப்பீட்டு வில்லைகள் (Price Tags) கட்டப்பட்டிருப்பதைக் காண்கிறாள். தன் தாயிடம் அதைப் பற்றிக் கேட்டறிந்தாள். அவர்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு பொருட்கள் வாங்க உதவவும்.

ஆசிரியருக்கான குறிப்பு

கொடுக்கப்பட்ட பணத்திற்கு ஏற்பப் பொருட்களை வாங்குவதற்கான பட்டியல் தயாரிக்க மாணவர்களை ஊக்கப்படுத்தலாம்.

 

கற்றல்

₹ 50 நோட்டின் அறிமுகம்

50 ரூபாயானது ஐந்து 10 ரூபாய்க்குச் சமம்.


 

பயிற்சி

கொடுக்கப்பட்ட தொகைக்கேற்ப அட்டவணையை நிறைவு செய்க.


வாங்கப்பட்ட மதிப்பீட்டு வில்லைகளுக்குச் செலுத்த வேண்டிய தொகையைக் கணக்கிடுக.


 

மகிழ்ச்சி நேரம்

கொடுக்கப்பட்டுள்ள சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பினை எழுதுக.


 

கற்றல்

விலையை ஒப்பிடுதல்

பாரி அவன் தங்கைக்கு ₹ 50 இக்கு பொம்மை வாங்கினான்.

அறிவு அவன் தம்பிக்கு ₹ 70 இக்கு அதேபோன்று பொம்மையை வாங்கினான்.


அறிவு வாங்கிய பொம்மையின் விலை பாரி வாங்கிய பொம்மையின் விலையை விட அதிகம்.

எனவே பாரி வாங்கிய பொம்மையின் விலையைவிட அறிவின் பொம்மை விலை உயர்ந்தது.

தண்ணிர்ப் புட்டியை (பாட்டிலை) ₹ 80 இக்கு குறள் வாங்கினாள்.

அதே போன்ற தண்ணீர்ப் புட்டியை (பாட்டிலை) ₹ 95 இக்கு மதி வாங்கினாள்.


குறள் வாங்கிய தண்ணீர்ப் புட்டியின் விலை மதி வாங்கிய தண்ணீர்ப் புட்டியின் விலையை விட குறைவு. எனவே குறள் வாங்கிய தண்ணீர்ப் புட்டியின் விலை மலிவானது.

 

பயிற்சி

கொடுக்கப்பட்ட இரு பொருட்களில் விலை உயர்ந்த பொருளை (குறியிடுக.


கொடுக்கப்பட்ட இரு பொருட்களில் விலை மலிவான பொருளை (குறியிடுக.


 

கற்றல்

திருவிழா தினத்தில்

இறைவிகதிர்வாஞ்சிமுகில் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலாப் பொருட்காட்சிக்குச் செல்கின்றனர். அவர்கள் விரும்பி விளையாடிய சில விளையாட்டுகள் கீழே காண்பிக்கப்பட்டுள்ளன.



பயிற்சி

பின்வருவனவற்றிற்கு விடையளி:

1. கதிர்  நான்கு விளையாட்டுகளையும் விளையாடுகிறான் எனில் அவன் செலுத்த வேண்டிய மொத்த பணம் எவ்வளவு?

90 ரூபாய்கள்

2. முகில்  இரங்க இராட்டினம் இருமுறை விளையாடினாள். அவள்  செலுத்தினாள் எனில்அவள் மீதம் பெற வேண்டிய தொகை எவ்வளவு?

1ரூபாய்கள்

3. கதிர்  வாஞ்சி  மற்றும் முகில்  ஆகிய மூவரும் ஒருமுறை இராட்டினம் விளையாடினர் எனில்அவர்கள் செலுத்த வேண்டிய மொத்தப் பணம் எவ்வளவு?

20 + 20 + 20 = 60

ஆசிரியருக்கான குறிப்பு

மாணவர்களை அனைத்து வகையிலும் ஏதேனும் 3 விளையாட்டுகளில் விளையாடக் கொடுக்க வேண்டிய தொகையைக் கூட்டி கண்டறியச் செய்யவும். கொடுக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப விளையாட்டைத் தேர்ந்தெடுக்க மாணவர்களை ஊக்கப்படுத்தலாம்.

 

பயிற்சி

வாங்கிய பொருட்களின் விலையை உற்றுநோக்கவும். உங்களிடம் உள்ள பணத்தை எண்ணிசெலவு செய்த பணத்தையும்மீதம் உள்ள பணத்தையும் கணக்கிடுக.


 

முயன்று பார்

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் விலையை உற்றுநோக்கி அட்டவணையை நிறைவு செய்து கூடுதல் காண்க


உன்னிடம் ₹20 உள்ளதெனில் மேலே உள்ள பொருள்களில் எவற்றை வாங்குவாய்?

விடை : கைவளையம்

Tags : Term 3 Chapter 4 | 2nd Maths பருவம்-3 அலகு 4 | 2வது கணக்கு.
2nd Maths : Term 3 Unit 4 : Money : Notes and coins Term 3 Chapter 4 | 2nd Maths in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2வது கணக்கு : பருவம்-3 அலகு 4 : பணம் : ரூபாயும் நாணயங்களும் - பருவம்-3 அலகு 4 | 2வது கணக்கு : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2வது கணக்கு : பருவம்-3 அலகு 4 : பணம்