இரண்டாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - எண்ணியல் | 7th Maths : Term 2 Unit 1 : Number System

   Posted On :  05.07.2022 07:16 pm

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல்

எண்ணியல்

கற்றல் நோக்கங்கள் ● தசமப் புள்ளிக் குறியீடு பற்றி அறிமுகப்படுத்துதல், தசம இடமதிப்பு பற்றி புரிந்துகொள்ளுதல். ● பகுதியில் பத்து அல்லது அதன் அடுக்குகளை உடைய பின்னங்களே தசம எண்கள் எனக் கற்றல். ● எண்கோட்டில் தசம எண்களைக் குறித்தல்.

இயல் 1

எண்ணியல்



கற்றல் நோக்கங்கள்

தசமப் புள்ளிக் குறியீடு பற்றி அறிமுகப்படுத்துதல், தசம இடமதிப்பு பற்றி புரிந்துகொள்ளுதல்

பகுதியில் பத்து அல்லது அதன் அடுக்குகளை உடைய பின்னங்களே தசம எண்கள் எனக் கற்றல்

எண்கோட்டில் தசம எண்களைக் குறித்தல்.


மீள் பார்வை

தசம எண்கள்  (Decimal Numbers)

கலா, கவின் இருவரும் நண்பர்கள். அவர்கள் பென்சில் வாங்கக் கடைக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கிடையேயான உரையாடல் பின்வருமாறு:

கலா : பென்சிலின் விலை என்ன?

கடைக்காரர் : ஒரு பென்சிலின் விலை நான்கு ரூபாய் ஐம்பது பைசா.

கலா : சரி ஐயா. ஒரு பென்சில் தாருங்கள்.

கவின் : நாம் வழக்கமாக இரசீதில் உள்ள தொகையை ரூபாயிலும் பைசாவைத் தசம எண்களிலும் குறிப்பிடுகிறோம். ஆகவே, பென்சிலின் விலையை  ₹4.50 எனக் குறிப்பிடுகிறோம். இங்கு 4 என்பது முழு எண் பகுதி; 50 என்பது தசமப் பகுதி; புள்ளியானது தசமப் புள்ளியைக் குறிக்கிறது.

( ஒரு வாரத்திற்குப் பிறகு வகுப்பறையில்

ஆசிரியர் : பின்னங்கள் மற்றும் தசம எண்களைப் பற்றி முந்தைய வகுப்பிலேயே படித்துள்ளோம். இப்போது தசமங்களைப் பற்றி நினைவு கூர்வோம். கலா! கவின்! உங்களுடைய பென்சில்களின் நீளங்களை அளக்க முடியுமா

கவின் : இரண்டு பென்சில்களும் ஒரே நீளமுள்ளவைப் போல் தோன்றுகிறது. அளந்து சரிபார்க்கலாமா?

கலா : சரி கவின், எனது பென்சிலின் நீளம் 4 செ.மீ, 3 மி.மீ. (படம் 1.1)


கவின் : எனது பென்சிலின் நீளம் 4 செ.மீ, 5 மி.மீ. (படம் 1.2)

கலா : இந்த நீளங்களைச் சென்டி மீட்டரில் குறிப்பிட இயலுமா

கவின் : ஒவ்வொரு சென்டிமீட்டரையும் 10 சமப் பாகங்களாகப்  பிரிக்கக் கிடைப்பது  மில்லிமீட்டர். பகுதியில் 10 உடைய பின்னம் பற்றி நாம் படித்துள்ளோம். நினைவில் உள்ளதா? எனது பென்சிலின் நீளத்தினை 4 மற்றும் 5/10 செ.மீ எனவும் கூறலாம்.

கலா : 1 மி.மீ = 1/10 செ.மீ அல்லது பத்தில் ஒரு செ.மீ ஆகும். எனவே 4.5 செ.மீ எனக் குறிப்பிடலாம்.

கவின் : உனது பென்சிலின் நீளம் 4.3 செ.மீ சரியா

ஆசிரியர் : இருவர் கூறியதும் சரியே. தற்பொழுது நாம் தசம எண்களைப் பற்றி மேலும் படிக்க உள்ளோம்.


இவற்றை முயல்க 

1. கீழ்க்காணும் படங்களை உற்றுநோக்கி வண்ணமிடப்பட்ட பகுதியைப் பின்னத்தில் எழுதித் தசம எண்களாகக் குறிப்பிடுக.. 

விடை:

(i) 4/8 = 0.5

(ii) 3/10 = 0.3

(iii) 5/10 = 0.5

2. கீழ்க்காணும் பின்னங்களின் பகுதிகளை 10 அல்லது 10 இன் அடுக்குகளாக உடைய பின்னங்களாக மாற்றித் தசம எண்களாகக் குறிப்பிடுக.



3. நம் வாழ்வியல் சூழலில் தசம எண்கள் பயன்படும் இரு நிகழ்வுகளைக் கூறுக.

சட்டை துணியின் நீளம் 2.50 மீ.

ஒரு சாக்லேட் பாக்கெட்டின் விலை ₹ 20.60


அறிமுகம்

கீழ்க்காணும் சூழலைக் கருதுக. இரவி என்பவர் தனது சொந்த ஊரான கந்தபுரத்தில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் திட்டமிடுகின்றார். அதற்காகப் புத்தாடைகளையும், மளிகை பொருள்களையும் வாங்குகிறார். அது பற்றிய தகவல்கள் பின்வருமாறு.

இரசீது -1

ABC துணிக்கடை

இரசீது -2

XYZ மளிகைக்கடை


மேற்கண்ட இரசீதுகளின் மூலம் என்ன கவனித்தீர்கள்? விலைகள் அனைத்தும் தசமங்களில் குறிப்பிடப்படுகின்றன. நீளங்களின் அளவுகளை மீட்டர் மற்றும் சென்டிமீட்டரிலும், எடையின் அளவுகளை கிலோகிராம் மற்றும் கிராமிலும் குறிக்கிறோம். அளவுகளை உயர் அலகுகளாகக் குறிப்பதற்கு நாம் தசம எண்கள் என்ற கருத்தைப் பயன்படுத்துகிறோம்.


எங்கும் கணிதம் - அன்றாட வாழ்வில் எண்ணியல்


ஆரோக்கிய உணவு - ஊட்டச் சத்து மதிப்புகள்



Tags : Term 2 Chapter 1 | 7th Maths இரண்டாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 2 Unit 1 : Number System : Number System Term 2 Chapter 1 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல் : எண்ணியல் - இரண்டாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல்