மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - எண்ணியல் | 7th Maths : Term 3 Unit 1 : Number System

   Posted On :  07.07.2022 03:35 am

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல்

எண்ணியல்

கற்றல் நோக்கங்கள் • தசம எண்களை முழுமையாக்கத் தெரிந்து கொள்ளுதல். • தசம எண்களின் நான்கு அடிப்படை செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்.

அலகு 1

எண்ணியல்


கற்றல் நோக்கங்கள்

தசம எண்களை முழுமையாக்கத் தெரிந்து கொள்ளுதல்

தசம எண்களின் நான்கு அடிப்படை செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்.


தசம எண்கள் - மீள் பார்வை

முன் பருவத்தில் தசம எண்களைப் பற்றி நாம் கற்றறிந்தோம். கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பதன் மூலம் அவற்றை மீண்டும் ஒரு முறை மீள் பார்வை செய்வோம்.


இவற்றை முயல்க

1. 1/4  என்ற பின்னத்தைத் தசம எண்ணாக மாற்றுக.

தீர்வு :

1/4 = [1 × 25] / [4 × 25] = 25 / 100 = 0.25

2. 63.257 இல் 5 இன் இடமதிப்பு என்ன?

தீர்வு :

 63.257 இல் 5 இன் இடமதிப்பு நூறில் ஒன்று 

3. 75.036 இல் பத்தாம் இடத்திலுள்ள இலக்கத்தினைக் கண்டறிக.

தீர்வு : 0

4, 3.75 என்ற தசம எண்ணைப் பின்னமாக மாற்றுக.

தீர்வு :  3.75 = 375 / 100 = 15 / 4 

5. 5 1/5 என்ற கலப்பு பின்னத்தைத் தசம எண்ணாக எழுதுக.

தீர்வு : 5( 1/5) = 26 / 5 = [ 26 × 2 ] / [ 5 × 2 ] = 52 / 10 = 5.2

6. 0.567, 0.576 : இவற்றில் எது பெரிய எண்?

தீர்வு : 0.576 > 0.567

7. 3.30, 3.03 இவற்றை ஒப்பிடுக மேலும் இவற்றில் சிறிய எண்ணைக் கண்டறிக.

தீர்வு : இரண்டு எண்களிலும் முழு எண் சமம்

இப்போது 10வது இடத்தை ஒப்பிட்டு பார்த்தால் நமக்கு 3 > 0 உள்ளது

3.30 < 3.03 சிறிய எண் 3.03

8. சரியான குறியிடுக. (<,>,=)

  2.57 _____ 2.570

தீர்வு :  2.57 = 2.570

9. கீழ்க்காணும் தசம எண்களை ஏறுவரிசையில் எழுதுக.

   5.14, 5.41, 1.54, 1.45, 4.15, 4.51

ஏறுவரிசை : 1.45, 1.54. 4.15, 4.51, 5.14, 5.41


அறிமுகம்

மணி, காய்கறிகளை வாங்குவதற்காகக் கடைவீதிக்குச் சென்றார். கீழ்க்காணும் அட்டவணையில் உள்ளவாறு ஐந்து விதமான காய்கறிகளின் விலைப்பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.


மேற்காணும் காய்கறிகளின் விலையை மணி முழு எண்களாக மாற்ற விரும்புகிறார்

ஒவ்வொரு தசம எண்ணையும் எவ்வாறு முழுதாக்க இயலும்


Tags : Term 3 Chapter 1 | 7th Maths மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 1 : Number System : Number System Term 3 Chapter 1 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல் : எண்ணியல் - மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல்