Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் | வரலாறு | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : History : Chapter 6 : Early Revolts against British Rule in Tamil Nadu

   Posted On :  24.07.2022 06:36 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. கோடிட்ட இடங்களை நிரப்புக. III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். IV. பொருத்துக. - புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள் :

அலகு 6

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

 

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?

) மருது சகோதரர்கள்

) பூலித்தேவர்

) வேலுநாச்சியார் 

) வீரபாண்டிய கட்டபொம்மன்

[விடை: () பூலித்தேவர்]

 

2. சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?

) வேலுநாச்சியார்

) கட்டபொம்மன்

) பூலித்தேவர்

) ஊமைத்துரை

[விடை: () பூலித்தேவர்]

 

3. சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?

) கயத்தாறு

) நாகலாபுரம்

) விருப்பாட்சி

) பாஞ்சாலக்குறிச்சி

[விடை: () நாகலாபுரம்]

 

4. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?

) மருது சகோதரர்கள்

) பூலித்தேவர்

) வீரபாண்டிய கட்டபொம்மன்

) கோபால நாயக்கர்

[விடை: () மருது சகோதரர்கள்]

 

5. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?

) 1805 மே 24

) 1805 ஜூலை 10

) 1806 ஜூலை 10

) 1806 செப்டம்பர் 10

[விடை: () 1806 ஜூலை 10]

 

6. வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக்  காரணமாயிருந்த தலைமைத் தளபதி யார்?

) கர்னல் பேன்கோர்ட்

) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்க்

) சர் ஜான் கிரடாக்

) கர்னல் அக்னியூ

[விடை: () சர் ஜான் கிரடாக்]

 

7. வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?

) கல்கத்தா

) மும்பை

) டில்லி

) மைசூர்

[விடை: () கல்கத்தா]

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. பாளையக்காரர் முறை தமிழகத்தில் விஸ்வநாத் நாயக்கர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

2. வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக கோபால நாயக்கர் பாதுகாப்பில் இருத்தனர்

3. கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் இராமலிங்கர் என்பவரை அனுப்பி வைத்தார்.

4.  கட்டபொம்மன் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.

5. மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில் இரண்டாவது பாளையக்காரர் போர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

6. பதேக் ஹைதர் என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.

 

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

 

1. i) பாளையக்காரர் முறை காகத்தீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.

ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும்செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார்.

iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764 இல் தூக்கிலிடப்பட்டார்.

iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.

அ) (i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி

ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி

இ) (iii) மற்றும் (iv) மட்டும் சரி

ஈ) (i) மற்றும் (iv) மட்டும் சரி

[விடை : () (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி]

 

2. i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து  சென்றன.

ii) காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப்பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்

iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழி நடத்தினார்.

iv) காரன்வாலிஸ் மே 1799இல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.

) (i), மற்றும் (ii) ஆகியவை சரி

) (ii) மற்றும் (iii) ஆகியவை சரி

) (ii), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி

) (i) மற்றும் (iv) ஆகியவை சரி

[விடை: () (ii) மற்றும் (iii) ஆகியவை சரி]

 

3. கூற்று : பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார்.

காரணம் : மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது.

) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி. எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.

) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.

) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி. காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.

) கூற்று தவறானது, காரணம் சரியானது.

[விடை: () கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி. எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.]

 

IV. பொருத்துக.

 

1. தீர்த்தகிரி - வேலூர் புரட்சி

2. கோபால நாயக்கர் - இராமலிங்கனார்

3. பானெர்மென் - திண்டுக்கல்

4. சுபேதார் ஷேக் ஆதம் - வேலூர் கோட்டை

5. கர்னல் பேன்கோர்ட் - ஓடாநிலை

விடை:

1. தீர்த்த கிரி - ஓடாநிலை

2. கோபால நாயக்கர் - திண்டுக்கல்

3. பானெர்மென் - இராமலிங்கனார்

4. சுபேதார் ஷேக் ஆதம் - வேலூர் புரட்சி

5. கர்னல் பேன்கோர்ட் - வேலூர் கோட்டை

 

Tags : Early Revolts against British Rule in Tamil Nadu | History | Social Science ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 6 : Early Revolts against British Rule in Tamil Nadu : One Mark Questions Answers Early Revolts against British Rule in Tamil Nadu | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்