Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் | வரலாறு | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu

   Posted On :  24.07.2022 07:33 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. கோடிட்ட இடங்களை நிரப்புக. III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். IV. பொருத்துக. - புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள் - சமூக அறிவியல் : வரலாறு : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

அலகு 10

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

 

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. 1907இல் தரங்கம்பாடியில் -------------- ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.

அ) கால்டுவெல்

) F.W. எல்லிஸ்

இ) சீகன்பால்கு

) மீனாட்சி சுந்தரனார்

[விடை: () சீகன்பால்கு]

 

2. 1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை __________ நிறுவினார்.

அ) இரட்டைமலை சீனிவாசன்

) B.R. அம்பேத்கார்

இ) ராஜாஜி

) எம்.சி. ராஜா

[விடை: () இரட்டைமலை சீனிவாசன்]

 

3. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ------------- இல் உருவாக்கப்பட்டது.

அ) 1918

) 1917

இ) 1916 

) 1914

[விடை: () 1918]

 

4. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய --------------- நீதிக் கட்சியால் நிறுவப் பெற்றது.

அ) பணியாளர் தேர்வு வாரியம்

ஆ) பொதுப் பணி ஆணையம்

இ) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்

ஈ) பணியாளர் தேர்வாணயம்

[விடை: () பணியாளர் தேர்வு வாரியம்]

 

5. சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன்முறையாகச் சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்

அ) எம்.சி. ராஜா

) இரட்டை மலை சீனிவாசன்

) டி.எம். நாயர்

) பி. வரதராஜுலு

[விடை : () எம்.சி. ராஜா]

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. முதன்முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி தமிழ் ஆகும்.

2. புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் F.W. எல்லீஸ் ஆவார்.

3. மறைமலை அடிகள் தமிழ்மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.

4. தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது நீதிக்கட்சி ஆகும்.

5. சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் பரிமாற் கலைஞர் என மாற்றம் பெற்றது.

6. ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

7. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் முத்துலட்சுமி அம்மையார் ஆவார்.

 

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

 

1. i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.

ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.

iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.

iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால  முன்னோடியாக இருந்தார்.

) (i), (ii) ஆகியன சரி

) (i), (iii) ஆகியன சரி

) (iv) சரி

) (ii), (iii) ஆகியன சரி

[விடை: () (i), (iii) ஆகியன சரி]

 

2. கூற்று : சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.

காரணம் : இக்காலகட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.

) காரணம், கூற்று ஆகியவை சரி.

) காரணம் சரி ஆனால் கூற்றின் சரியான விளக்கமல்ல.

) காரணம், கூற்று இரண்டுமே தவறு.

) காரணம் சரி ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை.

[விடை: () காரணம், கூற்று ஆகியவை சரி.]

 

IV. பொருத்துக.

 

1. திராவிடர் இல்லம் - மறைமலையடிகள்

2. தொழிலாளன் - இரட்டைமலை சீனிவாசன்

3. தனித் தமிழ் இயக்கம் - சிங்காரவேலர்

4. ஜீவிய சரித சுருக்கம் - நடேசனார்

விடை:

1. திராவிடர் இல்லம் - நடேசனார்

2. தொழிலாளன் - சிங்காரவேலர்

3. தனித் தமிழ் இயக்கம் - மறைமலையடிகள்

4. ஜீவிய சரித சுருக்கம் - இரட்டைமலை சீனிவாசன்

 

Tags : Social Transformation in Tamil Nadu | History | Social Science தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu : One Mark Questions Answers Social Transformation in Tamil Nadu | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்