Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

இந்திய அரசியலமைப்பு | குடிமையியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : Civics : Chapter 1 : Indian Constitution

   Posted On :  25.07.2022 01:11 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு1 : இந்திய அரசியலமைப்பு

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

பயிற்சி: I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. கோடிட்ட இடத்தை நிரப்புக. III. பொருத்துக. - புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சமூக அறிவியல் : குடிமையியல் : இந்திய அரசியலமைப்பு

அலகு 1

இந்திய அரசியலமைப்பு


பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. கீழ்க்காணும் வரிசையில்முகவுரைபற்றிய சரியான தொடர் எது? ----------------------

அ) குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை.

ஆ) இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக

இ) இறையாண்மை, குடியரசு, சமயச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக.

ஈ) இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.

[விடை: () இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு]

 

2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

அ) ஒரு முறை

) இரு முறை

இ) மூன்று முறை

) எப்பொழுதும் இல்லை

[விடை: () ஒரு முறை]

 

3. ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும்  எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?

அ) வம்சாவளி

) பதிவு

இ) இயல்புரிமை

) மேற்கண்ட அனைத்தும்

[விடை: () இயல்புரிமை]

 

4. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.

அ) சமத்துவ உரிமை

) சுரண்டலுக்கெதிரான உரிமை

இ) சொத்துரிமை

) கல்வி மற்றும் கலாச்சார உரிமை

[விடை: () சொத்துரிமை]

 

5. கீழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.

அ) கர்நாடகாவிலிருந்து, கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல்.

ஆ) கிறித்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல்.

இ) ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்.

ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்.

[விடை: () பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்.]

 

6. பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர். B.R அம்பேத்கர் அவர்களால்இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா' என விவரிக்கப்பட்டது?

) சமய உரிமை

) சமத்துவ உரிமை

) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

) சொத்துரிமை

[விடை: () அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை]

 

7. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?

) உச்சநீதி மன்றம் விரும்பினால்

) பிரதம மந்திரியின் ஆணையினால்

) தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்

) மேற்கண்ட அனைத்தும்

[விடை: () தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்]

 

8. நமது அடிப்படை கடமைகளை ------------ இடமிருந்து பெற்றோம்.

) அமெரிக்க அரசியலமைப்பு

) கனடா அரசியலமைப்பு

) ரஷ்யா அரசியலமைப்பு

) ஐரிஷ் அரசியலமைப்பு

[விடை: () ரஷ்யா அரசியலமைப்பு]

 

9. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?

) சட்டப்பிரிவு 352

) சட்டப்பிரிவு 356

) சட்டப்பிரிவு 360

) சட்டப்பிரிவு 368

[விடை: () சட்டப்பிரிவு 360]

 

10. எந்தக் குழுக்கள்/கமிஷன்கள் மத்திய-மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?

1) சர்க்காரியா குழு 2) ராஜமன்னார் குழு 3) M.N வெங்கடாசலையா குழு

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

) 1, 2 & 3

) 1 & 2

) 1 & 3

) 2 & 3

[விடை : () 1 & 2]

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

 

1. முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றியது.

2. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக டாக்டர் சச்சிதானந்தா சின்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு 1949, நவம்பர் 26

4. நீதிப்  பேராணைகள் சட்டப்பிரிவு 32இல் குறிப்பிடப்படுகின்றன.

5. இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் 51A பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ளன.

 

III. பொருத்துக.

 

1. குடியுரிமைச் சட்டம் - ஜவகர்லால் நேரு

2. முகவுரை  - 42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்

3. குறு அரசியலமைப்பு – 1955

4. செம்மொழி - 1962

5. தேசிய அவசரநிலை - தமிழ்

விடை :

1. குடியுரிமைச் சட்டம் - 1955

2. முகவுரை  - ஜவகர்லால் நேரு

3. குறு அரசியலமைப்பு - 42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்

4. செம்மொழி - தமிழ்

5. தேசிய அவசரநிலை - 1962

 

Tags : Indian Constitution | Civics | Social Science இந்திய அரசியலமைப்பு | குடிமையியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Civics : Chapter 1 : Indian Constitution : One Mark Questions Answers Indian Constitution | Civics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு1 : இந்திய அரசியலமைப்பு : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - இந்திய அரசியலமைப்பு | குடிமையியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு1 : இந்திய அரசியலமைப்பு