Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

நடுவண் அரசு | குடிமையியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : Civics : Chapter 2 : Central Government of India

   Posted On :  25.07.2022 01:35 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 2 : நடுவண் அரசு

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

பயிற்சி : I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. கோடிட்ட இடத்தை நிரப்புக. III. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும். IV. பொருத்துக. - புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

அலகு 2

நடுவண் அரசு

 

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் --------------------- ஆவார்.

அ) குடியரசுத் தலைவர்

) தலைமை நீதிபதி

இ) பிரதம அமைச்சர்

) அமைச்சர்கள் குழு

[விடை: () குடியரசுத் தலைவர்]

 

2. ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.

அ) குடியரசுத் தலைவர்           

ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

) நாடாளுமன்ற விவகார அமைச்சர்

ஈ) லோக் சபாவின் சபாநாயகர்

[விடை: () லோக்சபாவின் சபாநாயகர்]

 

3. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.

அ) குடியரசுத் தலைவர்

) மக்களவை

) பிரதம அமைச்சர்

) மாநிலங்களவை

[விடை: () மக்களவை]

 

4. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது --------------------- .

அ) 18 வயது

) 21 வயது

இ) 25 வயது

) 30 வயது

[விடை : () 25 வயது]

 

5. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர்/பெற்ற அமைப்பு.

அ) குடியரசுத் தலைவர்

) பிரதம அமைச்சர்

) மாநில அரசாங்கம்

) நாடாளுமன்றம்

[விடை: () நாடாளுமன்றம்]

 

6. கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?

அ) சட்டப்பிரிவு 352

) சட்டப்பிரிவு 360

இ) சட்டப்பிரிவு 356

) சட்டப்பிரிவு 365

[விடை: () சட்டப்பிரிவு 360]

 

7. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்.

) குடியரசுத் தலைவர்

) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

) ஆளுநர்

) பிரதம அமைச்சர்

[விடை: () குடியரசுத் தலைவர்]

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

 

1.  நிதி மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது.

2. பிரதம அமைச்சர் நாட்டின் உண்மையான தலைவராகவும், நாட்டின் முக்கியச் செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.

3. துணைக் குடியரசுத் தலைவர் அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்.

4. நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும், கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர் இந்திய அட்டர்னி ஜெனரல்.

5. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65.

6. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்சநீதிமன்றம் ஆகும்.

7. தற்சமயம், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை 28.

 

 

III. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

 

1. i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.

ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.

iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

) i & iv சரியானவை

) iii & iv சரியானவை

) 1 & iv சரியானவை

) i, ii & iii சரியானவை

[விடை : () i, ii & iii சரியானவை]

 

2.  i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.

ii) நடுவண் அரசின் மூன்றாவது அங்கம் நீதித்துறை ஆகும்.

iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.

iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

அ) ii & iv சரியானவை

) iii & iv சரியானவை

இ) i & iv சரியானவை

) i & ii சரியானவை

[விடை: () ii & iv சரியானவை]

 

IV. பொருத்துக.

 

1.  சட்டப்பிரிவு 53 - மாநில நெருக்கடிநிலை

2. சட்டப்பிரிவு 63 - உள்நாட்டு நெருக்கடிநிலை

3. சட்டப்பிரிவு 356 - குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள்  

4. சட்டப்பிரிவு 76 - துணைக் குடியரசுத் தலைவரின் அலுவலகம்

5. சட்டப்பிரிவு 352 - இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அலுவலகம்.

விடை:

1.  சட்டப்பிரிவு 53 - குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள்

2. சட்டப்பிரிவு 63 - துணைக் குடியரசுத் தலைவரின் அலுவலகம்

3. சட்டப்பிரிவு 356 - மாநில நெருக்கடிநிலை

4. சட்டப்பிரிவு 76 - இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அலுவலகம்.

5. சட்டப்பிரிவு 352 - உள்நாட்டு நெருக்கடிநிலை

 

Tags : Central Government of India | Civics | Social Science நடுவண் அரசு | குடிமையியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Civics : Chapter 2 : Central Government of India : One Mark Questions Answers Central Government of India | Civics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 2 : நடுவண் அரசு : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - நடுவண் அரசு | குடிமையியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 2 : நடுவண் அரசு