Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | வரிசைபடுத்துதல்

எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு - வரிசைபடுத்துதல் | 3rd Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  17.06.2022 01:21 am

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள்

வரிசைபடுத்துதல்

ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எண்கள்

வரிசைபடுத்துதல் 

• 2 மற்றும் 7 ஆகிய எண்களை எடுத்துக்கொள்வோம். 2 மற்றும் 7 ஆகிய எண்களைக் கொண்டு 27, 72, 22, மற்றும் 77 ஆகிய இரண்டிலக்க எண்களை உருவாக்கலாம்.

• 72 என்பது மிகப்பெரிய ஈரிலக்க எண் மற்றும் 27 என்பது மிகச்சிறிய ஈரிலக்க எண். 

• அதே போன்று, 7, 4 மற்றும் 8 கொடுக்கப்பட்ட எண்கள். இந்த எண்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய   மூன்றிலக்க எண்களை உருவாக்குவோம்.

• 874 என்பது மிகப் பெரிய மூவிலக்க எண் மற்றும் 478 என்பது மிகச்சிறிய மூவிலக்க எண்.

• மேலே கொடுக்கப்பட்ட எண்களைக் கொண்டு மூன்றிலக்க எண்களை உருவாக்குதல்.

748, 874, 847, 784, 487, 478

• மேற்குறிப்பிட்ட வரிசையை பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணாக வரிசைப்படுத்தினால் "இறங்கு வரிசை" கிடைக்கும்.

874, 847, 784, 748, 487, 478

• மேற்குறிப்பிட்ட வரிசையை சிறிய எண்ணிலிருந்து  பெரிய எண்ணாக வரிசைப்படுத்தினால் "ஏறு வரிசை" கிடைக்கும்.

478, 487, 748, 784, 847, 874


பயிற்சி செய் 

1. மிகப் பெரிய எண் மற்றும் மிகச்சிறிய எண் உருவாக்குதல் 


2. கீழ்க்கண்ட எண் வரிசையை பூர்த்தி செய்க.

111, 222, 333, 444, 555666777.

150, 155, 160, 165, 170175180.

210, 310, 410, 510, 610710810.

333, 433, 533, 633, 733833933.

 3. எண்களைக் கண்டுபிடி

அ. 4 நூறுகள்; 5 பத்துகள்; 0 ஒன்றுகள் 450

ஆ. 3 நூறுகள்; 0 பத்துகள்; 1 ஒன்று 301 

இ. 5 நூறுகள்; 8 பத்துகள்; 9 ஒன்றுகள் 589

ஈ. 8 நூறுகள்; 5 ஒன்றுகள் 805

4. எண் பெயர்களை எழுதுக.

எண்ணுரு : எண் பெயர்

 156 நூற்று ஐம்பத்து ஆறு 

 340 முந்நூற்று நாற்பது

 408 நானூற்று எட்டு 

 696 அறுனூற்று தொண்ணுற்று ஆறு

5. கோடிட்ட இடத்தை நிரப்புக.

அ. 405 என்பது 4 நூறுகள் 0 பத்துகள் 5 ஒன்றுகள் 

ஆ. 547 என்பது 5 நூறுகள் 4 பத்துகள் 7 ஒன்றுகள்

இ. 680 என்பது 6 நூறுகள் 8 பத்துகள் 0 ஒன்றுகள் 

6. வட்டமிடப்பட்ட எண்களின் இடமதிப்பைக் கூறுக  

அ. 1 9 8 விடை: நூறு

ஆ. 9 0 8 விடை: ஒன்று

இ. 5 4 3 விடை: பத்து

7. ஒற்றை எண்களையும் இரட்டை எண்களையும் தனித்தனியாக எழுதுக.

123 333 422 588 246 535


அ. ஒற்றை எண்கள்: 123, 333, 535

ஆ. இரட்டை எண்கள்: 422, 588, 246

8. பொருத்தமான <, >, = குறியீடுகளை இடுக

105 __ 150 விடை: 105 < 150

419 __ 547 விடை: 419 < 547

394 __ 387 விடை: 394 > 387

761 __ 683 விடை: 761 > 683

660 __ 660 விடை: 660 = 660

983 __ 990 விடை: 983 < 990

9. கொடுக்கப்பட்ட எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எழுதுக.

326 323 301 356 365 399 308 340

ஏறுவரிசை: 301, 308, 323, 326, 340, 356, 365, 399

இறங்கு வரிசை: 399, 365, 356, 340, 326, 323, 308, 301

10. 6, 8 மற்றும் 5 என்ற எண்களை ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தி மிகப் பெரிய மற்றும் மிகச்சிறிய எண்ணை உருவாக்குக

மிகப்பெரிய எண் : 865

மிகச்சிறிய எண் : 568


Tags : Numbers | Term 1 Chapter 2 | 3rd Maths எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 1 Unit 2 : Numbers : Ordering Numbers | Term 1 Chapter 2 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள் : வரிசைபடுத்துதல் - எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள்