Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | லாந்தனாய்டுகளின் ஆக்சிஜனேற்ற நிலை
   Posted On :  15.07.2022 02:07 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 4 : இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்

லாந்தனாய்டுகளின் ஆக்சிஜனேற்ற நிலை

லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை +3 ஆகும். சில லாந்தனாய்டுகள் +3 ஆக்சிஜனேற்ற நிலையுடன் கூடுதலாக +2 அல்லது +4 ஆக்சிஜனேற்ற நிலைகளையும் கொண்டுள்ளன.

லாந்தனாய்டுகளின் ஆக்சிஜனேற்ற நிலை

லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை +3 ஆகும். சில லாந்தனாய்டுகள் +3 ஆக்சிஜனேற்ற நிலையுடன் கூடுதலாக +2 அல்லது +4 ஆக்சிஜனேற்ற நிலைகளையும் கொண்டுள்ளன.

Gd3+ மற்றும் Lu3+ அயனிகள் கூடுதல் நிலைப்புத் தன்மையினைப் பெற்றுள்ளன. காரணம் அவைகளின் ஆர்பிட்டால்களில் முறையே சரிபாதி மற்றும் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. அவைகளின் எலக்ட்ரான் அமைப்புகள் பின்வருமாறு.

Gd3+ :[Xe] 4f 7

Lu3+ :[Xe] 4f 14

இதைப் போலவே சீரியம் மற்றும் டெர்பியம் ஆகியன எலக்ட்ரான்களை இழந்து +4 ஆக்சிஜனேற்ற நிலையை அடையும் போது முறையே 4f° மற்றும் 4f7 ஆகிய எலக்ட்ரான் அமைப்புகளைப் பெறுகின்றன. Eu2+ மற்றும் Yb2+ அயனிகள் முறையே சரிபாதி மற்றும் முழுமையாக நிரப்பப்பட்ட எலக்ட்ரான் அமைப்புகளைப் பெற்றுள்ளன.

வெவ்வேறு ஆக்சிஜனேற்ற நிலைகளின் நிலைப்புத் தன்மையானது இத்தனிமங்களின் பண்புகளைத் தீர்மானிக்கிறது. லாந்தனாய்டுகளின் பல்வேறு ஆக்சிஜனேற்ற நிலைகள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.




12th Chemistry : UNIT 4 : Transition and Inner Transition Elements : Oxidation state of lanthanoids in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 4 : இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் : லாந்தனாய்டுகளின் ஆக்சிஜனேற்ற நிலை - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 4 : இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்