Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு

தயாரித்தல், பண்புகள், பயன்கள் - பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு | 12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II

   Posted On :  19.08.2022 06:42 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II

பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு

PC13ஐ அதிகளவு குளோரினுடன் வினைப்படுத்துபோது பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு பெறப்படுகிறது.
பாஸ்பரஸ் ட்ரைகுளோரைடு மற்றும் பென்டாகுளோரைடு: 

பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு: 


தயாரித்தல்

PC13ஐ அதிகளவு குளோரினுடன் வினைப்படுத்துபோது பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு பெறப்படுகிறது.

PC13 + C12 → PC13 


வேதி பண்புகள்

வெப்பப்படுத்தும்போது பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு சிதைவடைந்து பாஸ்பரஸ் ட்ரை குளோரைடு மற்றும் குளோரின் ஆகியவற்றை உருவாக்குகிறது.

PC13 (g) → PC13 (g) + C12 (g). 

நீருடன், பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு வினைப்பட்டு பாஸ்போரைல் குளோரைடு மற்றும் ஆர்த்தோபாஸ்பாரிக் அமிலத்தை தருகிறது.

PC15 + H2O → POC13 + 2HC1 

POC13 + 3H2O → H3PO4 + 3HC1  

ஒட்டுமொத்த வினை

PC15 + 4H2O → H3PO4 + 5HC1  

பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு , உலோகங்களுடன் வினைப்பட்டு உலோக குளோரைடுகளைத் தருகிறது. பாஸ்பரஸ் ட்ரை குளோரைடைப் போலவே இதுவும் கரிம சேர்மங்களை குளோரினேற்றம் அடையச் செய்கிறது.

2Ag + PC15 → 2AgC1 + PC13

Sn + 2PC15 → SnC14 + 2PC13

 C2H5OH + PC15 → C2H5C1 + POC13

 C2H5COOH + PC15 → C2H5 COC1 + HC1 + POC13


பாஸ்பரஸ் பென்டாகுளோரைடின் பயன்கள்

பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு ஒரு சிறந்த குளோரினேற்றக் காரனியாகும். இது ஹைட்ராக்ஸில் தொகுதிகளை குளோரின் அணுக்கள் கொண்டு பதிலீடு செய்யப் பயன்படுகிறது.



Tags : Preparation, Properties, Uses தயாரித்தல், பண்புகள், பயன்கள்.
12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II : Phosphorous pentachloride Preparation, Properties, Uses in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II : பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு - தயாரித்தல், பண்புகள், பயன்கள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II