Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | புவித் தட்டு எல்லைகள்

பாறைக்கோளம் - உள் இயக்கச் செயல்முறைகள் - புவித் தட்டு எல்லைகள் | 11th Geography : Chapter 3 : Lithosphere: Endogenic Processes

   Posted On :  14.05.2022 09:47 pm

11 வது புவியியல் : அலகு 3 : பாறைக்கோளம் - உள் இயக்கச் செயல்முறைகள்

புவித் தட்டு எல்லைகள்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட புவித் தட்டுகள் நகரும் பகுதியை புவிதட்டு எல்லைகள் என்கிறோம்.

புவித் தட்டு எல்லைகள்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட புவித் தட்டுகள் நகரும் பகுதியை புவிதட்டு எல்லைகள் என்கிறோம். தட்டுகளின் பரவல் மற்றும் நகர்வினைப் பற்றி புவித் தட்டு அமைப்பியல் (Plate tectonicsவிரிவாக கூறுகிறது. புவியின் மேற்பரப்பானது புவித் தட்டு எனப்படும் திடமான பாறைக்கோள பலகைகளைக் கொண்டுள்ளது. டெக்டானிக் (Tectonicஎன்ற வார்த்தை டெக்டான் (Tectonஎன்ற கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் "கட்டுதல்என்பதாகும்.

 

உங்களுக்குத் தெரியுமா?

உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பானது (Global Navigation Satellite System -GNSSபுவித்தட்டு நகர்வின் வேகத்தை அளக்கிறது. கடலடிப் பரவலானது ஆண்டுக்கு செ.மீட்டர் முதல் செ. மீட்டர் என்ற வீதத்தில் வட அட்லாண்டிக் மலைத்தொடர் பகுதியிலும் 15 செ.மீட்டருக்கு மேல் என்ற வீதத்தில் கிழக்கு பசிபிக் ஏற்றம் என்ற இடத்திலும் காணப்படுகிறது.

பாறைக்கோள புவித்தட்டுகள் சில சமயம் மேலோட்டு புவித் தட்டு அல்லது டெக்டானிக் புவித் தட்டு என்று அழைக்கப்படுகிறது. புவியின் பாறைக்கோளம் பெரிய மற்றும் சிறிய நகரும் புவித் தட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. யுரேஷியன் தட்டு, இந்தோ -ஆஸ்திரேலியா தட்டு, வட அமெரிக்கத் தட்டு, தென் அமெரிக்கத் தட்டு, பசிபிக் தட்டு, ஆப்பிரிக்கத் தட்டு, மற்றும் அண்டார்டிக்கா தட்டு போன்றவை முக்கிய புவித் தட்டுகளாகும். அரேபியன் தட்டு, கரீபியன் தட்டு, கோகாஸ் (Cocas) தட்டு மற்றும் ஸ்காட்டியா (Scotia) ஆகியவை சிறிய தட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். புவித்தட்டு சராசரியாக ஒரு வருடத்திற்கு 2 முதல் 3 செ.மீ நகர்கிறது.

புவித் தட்டுகள் கண்டம் அல்லது பெருங்கடல் நிலப்பகுதிகளால் ஆனது. பெருங்கடல் புவித் தட்டுகள் கீழ்நோக்கி அமிழ்வதால் அகழியின் அருகில் நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் ஏற்பட காரணமாக உள்ளது.


 படம் 3.8 புவித் தட்டுகளின் பரவல்


மாணவர் செயல்பாடு

கீழேகொடுக்கப்பட்ட நிலவரைபடத்தை பார்த்து புவித் தட்டுகளின் பெயர்களைக் குறிக்கவும்.

1. பசிபிக் தட்டு

2. ஆப்பிரிக்கா தட்டு

3. யுரேஷியா தட்டு

4. அரேபியன் தட்டு

5. ஆஸ்திரேலியன் தட்டு

6. கரீபியன் தட்டு

7. கோகாஸ் தட்டு

8. ஸ்காட்டியா தட்டு

9. வட அமெரிக்க தட்டு

10. தென் அமெரிக்க தட்டு

11. ஜோன் டே ப்யுகா தட்டு

12. இந்தியன் தட்டு

13. அண்டார்டிக் தட்டு

14. பிலிப்பைன்ஸ் தட்டு

15. நாஸ்கா தட்டு


1. இந்தோ ஆஸ்திரேலியன் தட்டுக்கு எல்லைகளாக அமைந்துள்ள தட்டுகளின் பெயர்களை எழுதுக.

----------------------------------------------------------------------------------------------------------------

2. ஆப்பிரிக்க தட்டு மற்றும் அரேபியன் தட்டுக்கு இடையில் எந்த கடல் அமைந்துள்ளது?

---------------------------------------------------------------------------------------------------------------

3. எந்த இரண்டு கண்டங்கள் ஒன்றுடன் ஒன்று சரியாகப் பொருந்தும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

---------------------------------------------------------------------------------------------------------------

 

 



 

மிக முக்கியமான நிலத்தோற்றங்களான எரிமலைகள், மடிப்புமலைகள், தீவு வளைவுகள் மற்றும் ஆழ்கடல் அகழிகள் போன்றவை ஏற்படுவதை புவித்தட்டு எல்லைகள் குறிக்கின்றன. மூன்று முக்கியமான புவித்தட்டு எல்லைகள் காணப்படுகின்றன. அவை விலகும் எல்லைகள், குவியும் எல்லைகள் மற்றும் பக்கவாட்டு தட்டு எல்லைகள்.

 

விலகும் எல்லைகள் (Divergentplate boundaries)

இரு புவித் தட்டுகள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்லும் எல்லையை விலகும் எல்லைகள் என்கிறோம். எடுத்துக்காட்டாகஆப்பிரிக்க புவித் தட்டும் தென் அமெரிக்க புவித் தட்டும் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்கிறது. இது விலகும் எல்லையை ஏற்படுத்துகிறது. குறுகலான பெருங்கடல்கள் புதிய விலகும் எல்லையையும் அகலமான பெருங்கடல்கள் பழைய பெருங்கடல் கொப்பரையையும் குறிக்கின்றது. பெருங்கடல் மலைதொடர்கள் புவித் தட்டுகளின் எல்லைகளாக அமைந்துள்ளன.

 

உங்களுக்குத் தெரியுமா?

அட்லாண்டிக் பெருங்கடல் ஆண்டிற்கு செ.மீட்டர் முதல் 10 செ.மீட்டர் வரை விரிவடைந்து வருகிறது. 


பெருங்கடல் புவித் தட்டு எல்லைகளில் பெருங்கடல் பாறைக்கோளம் பிரிகின்ற போது ஒரு பெரிய பிளவு தோன்றுகிறது. இந்த இடைவெளியை அஸ்தினோஸ்பியரிலிருந்து மேலெழுந்து வரும் மாக்மா நிரப்புகின்றது. மாக்மா குளிர்ந்து கெட்டியாகி இங்கு ஒரு புதிய பெருங்கடல் புவி ஓட்டினை உருவாக்குகின்றது. எனவே விலகும் எல்லைகளை ஆக்கபூர்வமான எல்லை (constructive plate boundary)என்றும் அழைக்கின்றோம். மேலும் இதனை வளர்ச்சிப்பெருக்க எல்லை (accreting plate marginஎன்றும் அழைக்கலாம்.

விலகும் எல்லையில் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்கலாம்.

முதலில் புவித் தட்டுகள் விலகும்போது பெருங்கடல் ஓட்டில் ஏற்படும் பிளவு வழியாக கடலடி மலைதொடர்கள் உருவாகின்றன. இதற்கு அட்லாண்டிக் பெருங்கடல் கடலடி மலைத்தொடர் சிறந்த எடுத்துக்காட்டாகும். இது உலகிலேயே மிக நீளமான கடலடிமலைத்தொடர் ஆகும். இது சுமார் 16,000 கி.மீ நீளமுடையது. இது 'S' வடிவத்தில் காணப்படுகிறது. வடக்கில் ஐஸ்லாந்திலிருந்து தெற்கில் பவௌட் தீவு (Bouvet Islandவரை பரவியுள்ளது. இது 80 முதல் 120 கி.மீ அகலம் உடையது.சில இடங்களில் மத்திய அட்லாண்டிக் கடலடி மலைத்தொடரானது கடல் மட்டத்திற்கு மேலே தீவாக காணப்படுகிறது. அவை அஸோர்ஸ் தீவுகள் (Azores), அசென்சன் தீவுகள் (Ascension), செயின்ட் ஹெலினா தீவுகள் (St.Helenaமற்றும் ட்ரிஸ்டன் டே குன்ஹா தீவுகள் (Tristan da cunhaஆகியனவாகும்.

மேலும் இரண்டு புவித் தட்டுகள் ஒன்றைவிட்டு ஒன்று விலகும்போது பிளவு பள்ளத்தாக்குகள் உருவாகின்றன. கண்டப்பகுதியில் விலகும் எல்லை இருக்குமானால் கண்டம் இரண்டாக பிரிந்து பிளவு பள்ளத்தாக்கு தோன்றுகிறது. இதற்கு கிழக்கு ஆப்பிரிக்க பள்ளத்தாக்கு எடுத்துக்காட்டாகும்.

 



குவியும் எல்லைகள்

இரண்டு புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் எல்லையை குவியும் எல்லை என்கிறோம். எடுத்துக்காட்டாகதென் அமெரிக்க புவித் தட்டு மற்றும் நாஸ்கா புவித் தட்டு ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன. குவியும் எல்லையுடன் இணைந்து இரு வகையான நிலத்தோற்றங்கள் உருவாகின்றன. அவற்றில் ஒன்று அகழியாகும்.

இரு புவித் தட்டுகள் மோதிக் கொள்ளும் எல்லையாக அகழி அமைகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

வாடெட்டிபெனியொப் மண்டலம் என்பது அமிழும் மண்டலம் ஆகும்

 

அகழி என்பது கடலடிச் சமவெளியின் அடிப்பகுதிகளில் அதிக அடர்த்தியுள்ள பெருங்கடல் தட்டு அடர்த்திக் குறைவான கண்டத் தட்டுக்கு அடியில் சரிந்து செல்வதால் உருவாகும் மிக நீளமான குறுகிய செங்குத்துச் சரிவுடைய ஆழமான பகுதியாகும். எடுத்துக்காட்டாகபசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழி உலகிலேயே மிக ஆழமானதாகும். பசிபிக் புவித் தட்டு யுரேசியன் புவித்தட்டுக்குக் கீழே மூழ்கும் போது மரியானா அகழி தோன்றியது. இது 10,994 மீட்டர் (10.99 கி. மீட்டர்) ஆழமுடையது. மரியானா அகழி 2,540 கி.மீ. நீளமும் 69 கி.மீ அகலமும் கொண்டது.

நீங்கள் மரியானா அகழியில் எவரெஸ்ட் சிகரத்தை முழுவதும் வைத்து மூழ்கச் செய்தாலும் கடல் மட்டத்தை அடைய இன்னும் ஒரு சில கி.மீ ஆழம் மீதம் காணப்படும். அவ்வளவு ஆழமானது மரியானா அகழியாகும். கண்டத் தட்டும்பெருங்கடல் தட்டும் மோதும்போது அடர்த்தி அதிகமுள்ள பெருங்கடல் தட்டு அடர்த்திக் குறைவான கண்டத்தட்டுக்கு கீழே சரிந்து செல்லும்போது அமிழும் மண்டலம் (Subduction Zone) உருவாகின்றது.

ஒரு புவித்தட்டானது மற்றொரு புவித்தட்டில் அமிழ்கின்ற எல்லை அமிழும் எல்லை எனப்படும். இதனை முதலில் கண்டுபிடித்தவர்கள் கியூ வாடெட்டி மற்றும் பெனியொப் (Kiyoo Vadati and Benioffஎன்பவர்கள் ஆவர்.

இரண்டாவது மடிப்பு மலைகள் இரு புவித் தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும் போது மடிப்பு மலைகள் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாகஇந்தியக் கண்டத் தட்டு யுரோசியன் கண்டத்தட்டுடன் மோதுவதால் இமயமலை உருவானது. ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் இரு புவித்தட்டுகளின் எல்லையை பிளவுக் கோடு (suture lineஎன்கிறோம்.

புவியோடு கவசத்தை விட அடர்த்திக் குறைவாக இருப்பதால்புதிதாக தோன்றிய மாக்மா புவியின் மேற்பரப்பில் வந்து எரிமலையாக தோன்றுகிறது. அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் அமிழும் மண்டலம் பெனியொப் மண்டலம் (Benioff zoneஎன்றும் அழைக்கப்படுகிறது.

 




பக்கவாட்டு நகர்வு எல்லைகள்

(Transform plate boundries)

இரண்டு புவித் தட்டுகள் பக்கவாட்டில் நகரும் எல்லையை பக்க வாட்டு நகர்வு எல்லை என்கிறோம். இந்த எல்லைப்பகுதியில் பாறைக்கோளம் உருவாக்கப்படுவதுமில்லை அழிக்கப்படுவதுமில்லை. எனவேபக்கவாட்டுநகர்வு எல்லைகளை செயலற்ற (passive plate boundaryஎல்லைகள் என அழைக்கின்றோம். கலிபோர்னியாவில் உள்ள சான் ஆண்ட்ரியாஸ் பிளவு வட அமெரிக்கா புவித் தட்டையும்பசிபிக் புவித் தட்டையும் பிரிக்கும் பக்கவாட்டு நகர்வு எல்லையாகும்.

Tags : Lithosphere: Endogenic Processes பாறைக்கோளம் - உள் இயக்கச் செயல்முறைகள்.
11th Geography : Chapter 3 : Lithosphere: Endogenic Processes : Plate boundaries Lithosphere: Endogenic Processes in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 3 : பாறைக்கோளம் - உள் இயக்கச் செயல்முறைகள் : புவித் தட்டு எல்லைகள் - பாறைக்கோளம் - உள் இயக்கச் செயல்முறைகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 3 : பாறைக்கோளம் - உள் இயக்கச் செயல்முறைகள்