Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: அப்படியே நிற்கட்டும் அந்த மரம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

ராஜமார்த்தாண்டன் | பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: அப்படியே நிற்கட்டும் அந்த மரம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu

   Posted On :  13.07.2022 02:52 am

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு

கவிதைப்பேழை: அப்படியே நிற்கட்டும் அந்த மரம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு : கவிதைப்பேழை: அப்படியே நிற்கட்டும் அந்த மரம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - ராஜமார்த்தாண்டன் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 2 : கவிதைப் பேழை : அப்படியே நிற்கட்டும் அந்த மரம்)


பாடநூல் மதிப்பீட்டு வினா 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது ________

அ) பச்சை இலை

ஆ) கோலிக்குண்டு 

இ) பச்சைக்காய்

ஈ) செங்காய்

[விடை : ஆ. கோலிக்குண்டு] 


2. ‘சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடப்படுபவை ________

அ) மண் ஒட்டிய பழங்கள்

ஆ) சூடான பழங்கள் 

இ) வேகவைத்த பழங்கள்

ஈ) சுடப்பட்ட பழங்கள் 

[விடை : அ. மண் ஒட்டிய பழங்கள்] 


3.  ‘பெயரறியா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

அ) பெயர + றியா

ஆ) பெயர் + ரறியா 

இ) பெயர் + அறியா

ஈ) பெயர + அறியா

[விடை : இ. பெயர் + அறியா] 


4. ‘மனமில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ________

அ) மன + மில்லை

ஆ) மனமி + இல்லை 

இ) மனம் + மில்லை

ஈ) மனம் + இல்லை

[விடை : ஈ. மனம் + இல்லை] 


5. “நேற்று + இரவு’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________ 

அ) நேற்று இரவு

ஆ) நேற்றிரவு 

இ) நேற்றுரவு

ஈ) நேற்இரவு

[விடை : ஆ. நேற்றிரவு]


குறுவினா

1. நாவல் மரம் எத்தனை தலைமுறையாக அங்கு நின்றிருந்தது?

நாவல் மரம் இரண்டு தலைமுறையாக அங்கு நின்றிருந்தது. 


2. சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்? 

1. காக்கை

2. குருவி 

3. மைனா 

4. பெயரறியாப் பறவைகள் 

5. அணில் 

6. காற்று


சிறுவினா

நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை? 

ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்பொழுது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கின்றது. 

அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய்ப் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும். 

பளபளக்கும் பச்சை இலைகளுடக் கருநீலக்கோலிக்குண்டுகள் போல நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும். 

காக்கை, குருவி, மைனா, பெயரறியாப் பறவைகள், அணில், காற்று ஆகின உதிர்த்துவிடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும். 

தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் கையில் பெட்டியுடன் நாவல்பழம் பொறுக்குகின்றனர். 

இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும். 

அப்பா வரும் வரை நாவல் மர நிழலில் கிளியாந்தட்டு விளையாடுவோம். நேற்று நண்பகல் என் மகன் விளையாடியதும் இந்த நாவல் மர நிழலில்தான்.


சிந்தனை வினா 

பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?

  பெருங்காற்றினால் நாவல் மரம் வேரோடு வீழ்ந்து விட்டது. அதனைப் பார்க்க ஊர்மக்கள் பதற்றத்தில் விரைந்து செல்கின்றனர். 

குன்றுகளின் நடுவே உள்ள பெரிய மலை போல அந்த நாவல் மரம் கவிஞர் மனதில் நிற்பதால் பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தை அவர் பார்க்க விரும்பவில்லை. 

அந்த மரம் கவிஞர் நினைவில் வாழ்கின்றது.


கற்பவை கற்றபின்


1. உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக ஐந்து தொடர்கள் எழுதுக.

பலாமரம் 

நெடுநெடுனு வளர்ந்த மரம், நேர்த்தியான பலாமரம். 

முக்கனியில் இராண்டாம் கனி தரு மரம். 

பெரும்பழம் சுமந்ததால் உன்மேனி இளைத்ததோ? 

பழுமரத்தை நாடி பரவசமாய் பறவை வரும். 

கொடுக்க குறையாத அமுதசுரபி மரம் பலாமரம். 


2. உங்கள் பகுதிகளில் மரங்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக. 

வேப்ப மரம், புளிய மரம், அரசமரம், ஆல மரம், வாழை மரம், முருங்கை மரம், தென்னை மரம், பனை மரம், பாக்கு மரம், பலா மரம், தேக்கு மரம், சந்தன மரம், அத்தி மரம், வாகை மரம், புங்க மரம்.



3. பின்வரும் புதுக்கவிதைகளைப் படித்துச் சுவைக்க.

• கொப்புகள் விலக்கி 

 கொத்துக் கொத்தாய் 

 கருவேலங்காய் 

 பறித்துப் போடும் மேய்ப்பனை 

 ஒருநாளும் 

 சிராய்ப்பதில்லை 

 கருவமுட்கள்

• குழந்தை 

வரைந்தது 

பறவைகளை மட்டுமே 

வானம் 

தானாக உருவானது.

- கலாப்ரியா

Tags : by Rajamarthandan | Term 1 Chapter 2 | 7th Tamil ராஜமார்த்தாண்டன் | பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu : Poem: Appadiyae nirkattum andha maram: Questions and Answers by Rajamarthandan | Term 1 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு : கவிதைப்பேழை: அப்படியே நிற்கட்டும் அந்த மரம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - ராஜமார்த்தாண்டன் | பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு