Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: கவின்மிகு கப்பல்: கேள்விகள் மற்றும் பதில்கள்

மருதன் இளநாகனார் | பருவம் 2 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: கவின்மிகு கப்பல்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal aakam

   Posted On :  13.07.2022 03:39 am

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம்

கவிதைப்பேழை: கவின்மிகு கப்பல்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் : கவிதைப்பேழை: கவின்மிகு கப்பல்: கேள்விகள் மற்றும் பதில்கள் - மருதன் இளநாகனார் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 1 : கவிதைப் பேழை : கவின்மிகு கப்பல்)

பாடநூல் மதிப்பீட்டு வினா


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இயற்கை வங்கூழ் ஆட்ட - அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் -------- 

அ) நிலம்

ஆ) நீர் 

இ) காற்று 

ஈ) நெருப்பு

[ விடை : இ. காற்று ] 


2. மக்கள் ------- ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர். 

அ) கடலில் 

ஆ) காற்றில் 

இ) கழனியில் 

ஈ) வங்கத்தில் 

[ விடை : ஈ. வங்கத்தில் ] 


3. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது

அ) காற்று 

ஆ) நாவாய் 

இ) கடல் 

ஈ) மணல் 

[ விடை : இ. கடல் ] 


4. ‘பெருங்கடல்' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

அ) பெரு + கடல்

ஆ) பெருமை + கடல் 

இ) பெரிய + கடல்

ஈ) பெருங் + கடல்

[ விடை : ஆ. பெருமை + கடல் ]


5. இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது. 

அ) இன்றுஆகி

ஆ) இன்றிஆகி 

இ) இன்றாகி

ஈ) இன்றாஆகி

[ விடை : இ. இன்றாகி ]


6. எதுகை இடம்பெறாத இணை --------------

அ) இரவு - இயற்கை 

ஆ) வங்கம் - சங்கம் 

இ) உலகு - புலவு

ஈ) அசைவு - இசைவு

[ விடை : அ. இரவு – இயற்கை ]


பொருத்துக.

வினா : 

1. வங்கம் - பகல் 

2. நீகான் - கப்பல் 

3. எல் - கலங்கரை விளக்கம் 

4. மாட ஒள்ளெரி - நாவாய் ஓட்டுபவன்

விடை : 

1. வங்கம் - கப்பல் 

2. நீகான் - நாவாய் ஓட்டுபவன் 

3. எல் - பகல் 

4. மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்


குறுவினா 

1. நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?

நாவாயின் தோற்றம் உலகம் இடம்பெயர்ந்தது போன்று இருந்ததாக அகநானூறு கூறுகிறது. 


2. நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணைசெய்கிறது?

இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தி நாவாய் ஓட்டிகளுக்குத் துணை செய்கின்றது..


சிறுவினா

1. கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது? 

உலகம் இடம்பெயர்ந்தது போன்று அழகிய தோற்றமுடையது நாவாய். 

அது புலால் நாற்றம் உடைய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும். 

இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும். 

உயர்ந்த தரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான். - என்று கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு விளக்குகிறது.


சிந்தனை வினா

1. தரைவழிப்பயணம், கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நீங்கள் விரும்புவது எது? ஏன்?

தரைவழிப்பயணம், கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நான் விரும்புவது : கடல்வழிப் பயணம். 

காரணம் : கடலின் அழகைக் கண்டு மகிழவும், கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும், கடல் தீவுகளின் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழவும் கடல்வழிப் பயணமே சிறந்தது. எனவே, நான் கடல்வழிப் பயணத்தை விரும்புகின்றேன்.


கற்பவை கற்றபின் 


1. கடலில் கிடைக்கும் பொருட்களின் பெயர்களைத் தொகுக்க.

முத்து, உலோகத் தாதுக்கள், எண்ணெய், இயற்கை வாயு, வளிம நீரேறிகள், பவளம், சுண்ணாம்பு கற்கள், சிப்பிகள், சங்குகள், உப்பு. 


2. கடற்பயணம் பற்றிய சிறுகதை ஒன்றனை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க. 

கடல் - எஸ்.கண்ணன்

அவன் ஒரு இளைஞன். அவனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். கள்ளச்சாரயம் குடித்து அவன் அப்பா இறந்துவிட்டார். அம்மா மற்றும் திருமணவயதில் தங்கை அவனுக்கு. அவனுக்குக் கிடைத்த வேலையில் குடும்பத்தை நடத்தவே பணம் போதவில்லை. தங்கையின் திருமணத்தை எப்படி நடத்தப் போகிறோம் என்ற கவலையே அவனுக்குப் பெரிதாக இருந்தது.

மனதின் நிம்மதிக்காக அனைவரும் கடற்கரை நோக்கிச் செல்வர். அவனும் அப்படியும் சில நாட்கள் சென்றான். கை நிறைய எப்போது சம்பாதிப்பது? எப்போது தங்கைக்குத் திருமணம் செய்வது? இவை அவன் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. ஒரு நாள் தற்கொலை செய்யலாம் என்ற எண்ணத்துடன் கரையோரம் அமர்ந்து இருந்தான். அது இரவு நேரம் கடற்கரையில் யாருமில்லை.

கடல் நீர் அவன் வேதனை போல் உப்பாகவே இருந்தது. தூரத்தில் யாரோ கடலை நோக்கி ஒடுவது போல் இருந்தது. இவன் அவளைக் காப்பாற்றினான். அவளது அப்பா, அம்மா ஓடோடி வந்தனர். திருமணம் ஆன மூன்று மாதத்தில் கணவன் இறந்ததால் அவள் இத்தகைய முடிவுக்கு வந்ததை அறிந்தான்.

அந்தப் பெண்ணின் அப்பா, பெரிய கார் நிறுவனத்தின் முதலாளி. இவன் நிலையை அறிந்து, அவனுக்கு வேலையும் கொடுத்து, அவனது தங்கைக்கும் திருமணம் செய்து வைத்தார். அவனது நன்னடத்தையால் நிறுவனத்தின் எம்.டி. ஆக உயர்ந்தான். முதலாளி அவரது பெண்ணையும் திருமணம் செய்து வைக்கின்றார். மீண்டும் தனக்கு வாழ்வு தந்த கடற்கரைக்குச் செல்கின்றான். அலை ஆனந்தத்துடன் ஆர்ப்பரித்து, அவன் மீது விழுந்தது. இன்பத்தில் கடல் நீர் இனிமையானது.


விடுகதைகள்

26. எட்டாத இராணியாம், இரவில் வருவாள், பகலில் மறைவாள். அது என்ன? நிலா

27. மண்ணுக்குள் கிடப்பான். மங்களகரமானவன். அது என்ன? மஞ்சள்

28. பல் துலக்காதவனுக்கு உடம்லல்லாம் பற்கள். அது என்ன? சீப்பு

29. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன? நாக்கு

30. மண்டையில் போட்டால் மகிழ்ந்து சீர்ப்பான். அது என்ன? தேங்காய்

31. நிலத்தில் முளைக்காத செடி, நிமிர்ந்து நிற்காத செடி. அது என்ன? தலைமுடி

Tags : by Marudhan ilanakanaar | Term 2 Chapter 1 | 7th Tamil மருதன் இளநாகனார் | பருவம் 2 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal aakam : Poem: Kavinmigu kappal: Questions and Answers by Marudhan ilanakanaar | Term 2 Chapter 1 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் : கவிதைப்பேழை: கவின்மிகு கப்பல்: கேள்விகள் மற்றும் பதில்கள் - மருதன் இளநாகனார் | பருவம் 2 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம்