Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: மலைப்பொழிவு: கேள்விகள் மற்றும் பதில்கள்

கண்ணதாசன் | பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: மலைப்பொழிவு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 3 Chapter 3 : Maanudam vellum

   Posted On :  13.07.2022 04:36 pm

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்

கவிதைப்பேழை: மலைப்பொழிவு: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் : கவிதைப்பேழை: மலைப்பொழிவு: கேள்விகள் மற்றும் பதில்கள் - கண்ணதாசன் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 3 : கவிதைப் பேழை : மலைப்பொழிவு)


பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது ------------

அ) பணம் 

ஆ) பொறுமை 

இ) புகழ் 

ஈ) வீடு 

[விடை : ஆ. பொறுமை] 


2. சாந்த குணம் உடையவர்கள் ------------ முழுவதையும் பெறுவர். 

அ) புத்தகம் 

ஆ) செல்வம் 

இ) உலகம் 

ஈ) துன்பம்

[விடை : இ. உலகம்] 


3. ‘மலையளவு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -----------

அ) மலை + யளவு

ஆ) மலை + அளவு 

இ) மலையின் + அளவு

ஈ) மலையில் + அளவு 

[விடை : ஆ. மலை + அளவு] 


4. 'தன்னாடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – 

அ) தன் + னாடு

ஆ) தன்மை + நாடு 

இ) தன் + நாடு

ஈ) தன்மை + நாடு

[விடை : இ. தன் + நாடு] 


5. இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ---- 

அ) இவையில்லாது

ஆ) இவைஇல்லாது 

இ) இவயில்லாது

ஈ) இவஇல்லாது

[விடை : அ. இவையில்லாது]


பொருத்துக.

வினா :

1. சாந்தம் - சிறப்பு 

2. மகத்துவம் - உலகம் 

3. தாரணி - கருணை 

4. இரக்கம் - அமைதி

விடை : 

1. சாந்தம் - அமைதி 

2. மகத்துவம் - சிறப்பு 

3. தாரணி - உலகம் 

4. இரக்கம் - கருணை


குறு வினா

1. இந்த உலகம் யாருக்கு உரியது?

சாந்தம் என்ற அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இந்த உலகம் உரியது. 

2. உலகம் நிலைதடுமாறக் காரணம் யாது?

சாதிகளும் கருத்து வேறுபாடுகளும் உலகம் நிலைதடுமாறக் காரணம் ஆகும். 

3. வாழ்க்கை மலர்ச் சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கை மலர்ச் சோலையாக மாற நல்ல உள்ளத்தோடு வாழ வேண்டும்.


சிறுவினா

சாந்தம் பற்றி இயேசு காவியம் கூறுவன யாவை? 

சாந்தம் என்ற அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இந்த உலகம் உரியது. அவர்களே தலைவர்கள் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார். 

வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சிசெய்யும் பெருமை உடையது என்றார். 

சாதிகளும் கருத்து வேறுபாடுகளும் உலகம் நிலைதடுமாறுகின்றது. 

அறத்தை நம்பினால் சண்டை இல்லாமல் உலகம் அமைதியாகிவிடும். 

பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும்.


சிந்தனை வினா

எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?

எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ மதம், சாதி, இனம், மொழி, ஏழை, பணக்காரன் ஆகியன ஒழிய வேண்டும். பொறாமை, வன்முறை, அறியாமை ஆகியன அழிந்து மனிதநேயம் மலர வேண்டும்.அனைவரும் ஒன்றெனக் கருத வேண்டும்.



கற்பவை கற்றபின்


இயேசுவின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு ஒன்றினை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.

ஒரு நாள் பெரிய பிரசங்க கூட்டம் ஒன்று நடைபெற்று வந்தது. அங்கு ஒரு சிறுவன் இயேசுவைக் காண வந்தான். அங்கு சுமார் 5000 பேர் இருந்தனர். சிறுவன் 5 ரொட்டி, 2 மீன்கள் கொண்டு வந்தான். அதனை இயேசு ஆசிர்வதிக்க அவை பலவாகப் பெருகி 5000 பேருக்குக் கொடுக்கப்பட்டு மீதம் 12 கூடைகள் இருந்தன.

Tags : by Kannadasan | Term 3 Chapter 3 | 7th Tamil கண்ணதாசன் | பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 3 Chapter 3 : Maanudam vellum : Poem: Malai polivu: Questions and Answers by Kannadasan | Term 3 Chapter 3 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் : கவிதைப்பேழை: மலைப்பொழிவு: கேள்விகள் மற்றும் பதில்கள் - கண்ணதாசன் | பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்