Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: நீதி வெண்பா

கா.ப.செய்குதம்பிப் பாவலர் | இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: நீதி வெண்பா | 10th Tamil : Chapter 5 : Manarkeni

   Posted On :  22.07.2022 12:01 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி

கவிதைப்பேழை: நீதி வெண்பா

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி : கவிதைப்பேழை: நீதி வெண்பா - கா.ப.செய்குதம்பிப் பாவலர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கல்வி

கவிதைப் பேழை

நீதிவெண்பா

- கா.ப. செய்குதம்பிப் பாவலர்



நுழையும்முன்

கற்றவர் வழி அரசு செல்லும் என்கிறது சங்க இலக்கியம். தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்கிறது திருக்குறள். கல்வியைப் போற்றுவதைப் புறநானூற்றுக் காலத்திலிருந்து தற்காலம்வரை தொடர்கின்றனர் தமிழர். பூக்களை நாடிச் சென்று தேன் பருகும் வண்டுகளைப் போல, நூல்களை நாடிச் சென்று அறிவு பெறவேண்டும்.


அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.*

 

பாடலின் பொருள்

அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதைப் போற்றிக் கற்க வேண்டும்.

சதாவதானம்

'சதம்' என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம்.

 

நூல் வெளி

‘சதாவதானம்’ என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் (1874 – 1950), கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்; பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்; சீறாப்புராணத்திற்கு -உரை எழுதியவர்; 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப்பெற்றார். இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன. இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

 

கற்பவை கற்றபின்....

எதிர்காலத்தில் நீங்கள் பயில விரும்பும் கல்வி குறித்து வகுப்பறையில் கலந்துரையாடிக் குறிப்புரை உருவாக்குக.

 

 

Tags : by kaa.pa. Seikuthambi pavalar | Chapter 5 | 10th Tamil கா.ப.செய்குதம்பிப் பாவலர் | இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 5 : Manarkeni : Poem: Neethi venba by kaa.pa. Seikuthambi pavalar | Chapter 5 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி : கவிதைப்பேழை: நீதி வெண்பா - கா.ப.செய்குதம்பிப் பாவலர் | இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி