Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | கவிதைப்பேழை: விருந்தோம்பல்: கேள்விகள் மற்றும் பதில்கள்

முன்றுறை அரையனார் | பருவம் 3 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: விருந்தோம்பல்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 3 Chapter 1 : Nayathagu nagrikam

   Posted On :  13.07.2022 04:06 pm

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்

கவிதைப்பேழை: விருந்தோம்பல்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் : கவிதைப்பேழை: விருந்தோம்பல்: கேள்விகள் மற்றும் பதில்கள் - முன்றுறை அரையனார் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 1 : கவிதைப் பேழை : விருந்தோம்பல்)


பாடநூல் மதிப்பீட்டு வினா


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மரம் வளர்த்தால் --------- பெறலாம். 

அ) மாறி 

ஆ) மாரி 

இ) காரி

ஈ) பாரி 

[விடை : ஆ. மாரி]


2. ‘நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------ 

அ) நீரு + உலையில்

ஆ) நீர் + இலையில் 

இ) நீர் + உலையில்

ஈ) நீரு + இலையில்

[விடை : இ. நீர் + உலையில்]


3. மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ----- 

அ) மாரியொன்று

ஆ) மாரிஒன்று 

இ) மாரியின்று

ஈ) மாரியன்று

[விடை : அ. மாரியொன்று]


குறு வினா

1. பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.

• அங்கவை 

• சங்கவை

 

2. 'பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை ’ - எவ்வாறு? 

• மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். 

• பாரி மகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.


சிந்தனை வினா

தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.

ஈகை, உயிரிரக்கம், நடுவுநிலைமை, பிறருக்கென வாழ்தல், எளிய வாழ்க்கை, தூய அன்பு, உலகப்பொதுமை ஆகியன தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகள் ஆகும்.



கற்பவை கற்றபின்


1. வள்ளல்கள் எழுவரின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.

பாரி, திருமுடிக்காரி, வல்வில் ஓரி, ஆய் அண்டிரன், பேகன், நள்ளி, அதியமான் நெடுமானஞ்சி ஆகியோர் கடை எழுவள்ளல்கள்.


2. விருந்தோம்பல் பண்பை விளக்கும் கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.

ஓர் ஊரில் சிவனடியார் வாழ்ந்து வந்தார். அவரும் அவரது குடும்பமும் தினமும் யாரேனும் ஒருவருக்காவது விருந்தோம்பல் செய்வது வழக்கம். சிவனடியாரின் குடும்பம் மிகுந்த வறுமையில் இருந்தாலும் அதனைக்காட்டாது, விருந்தினரை உபசரிப்பர். விருந்தினர் உண்ட பின்புதான் அனைவரும் உண்ணுவர். காலையில் இருந்து மாலை வரை உணவு தயாராக இருந்தும் விருந்தினர் வராததால் யாரும் உண்ணாமல் பட்டினி கிடந்தனர். சிவனடியாரின் குழந்தைகளும் காலையில் இருந்து மாலை வரை பட்டினியாகக் கிடந்து, அழ ஆரம்பித்துவிட்டனர். இரவு நேரத்தில் பெரியவர் ஒருவர் வந்தார். ஆனால் அவரோ தான் யார்வீட்டிலும் உண்ணுவதில்லை, இரவு தங்குவதற்கு இடம்தாருங்கள், அது போதும் என்றார். சிவனடியார் தன் நிலையை உணர்த்தி, தாங்கள் உண்டால் தான். என்னுடைய குழந்தைகள் உண்ண முடியும் என்றார். குழந்தைகளுக்காக அந்தப் பெரியவரும் சாப்பிட்டார். பிறகு அனைவரும் உண்டனர்.


Tags : by Moonturai araiyanar | Term 3 Chapter 1 | 7th Tamil முன்றுறை அரையனார் | பருவம் 3 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 3 Chapter 1 : Nayathagu nagrikam : Poem: Virunthompal: Questions and Answers by Moonturai araiyanar | Term 3 Chapter 1 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் : கவிதைப்பேழை: விருந்தோம்பல்: கேள்விகள் மற்றும் பதில்கள் - முன்றுறை அரையனார் | பருவம் 3 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம்