Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | நினைவில் கொள்ள வேண்டியவை

வடிவியல் | கணக்கு - நினைவில் கொள்ள வேண்டியவை | 10th Mathematics : UNIT 4 : Geometry

   Posted On :  11.08.2022 09:09 pm

10வது கணக்கு : அலகு 4 : வடிவியல்

நினைவில் கொள்ள வேண்டியவை

கணக்கு : வடிவியல் : நினைவில் கொள்ள வேண்டியவை

நினைவில் கொள்ள வேண்டியவை

· இரு முக்கோணங்கள் வடிவொத்தவை எனில்,

(i) அவற்றின் ஒத்த கோணங்கள் சமம். 

(ii) அவற்றின் ஒத்த பக்கங்கள் சம விகிதத்தில் இருக்கும். 

· சர்வச் சம முக்கோணங்கள் அனைத்தும் வடிவொத்தவை. ஆனால் இதன் மறுதலை உண்மை இல்லை. 

· AA வடிவொத்த விதிமுறையானது A A A வடிவொத்த விதிமுறை ஆகும். 

· ஒரு முக்கோணத்தின் ஒரு கோணம் மற்றொரு முக்கோணத்தின் ஒரு கோணத்திற்குச் சமமாகவும், அவ்விரு முக்கோணங்களில் அக்கோணங்களை உள்ளடக்கிய ஒத்த பக்கங்கள் விகிதச் சமத்திலும் இருந்தால், அவ்விரு முக்கோணங்கள் வடிவொத்தவை ஆகும். (SAS)

· இரு முக்கோணங்களில், ஒத்த பக்கங்களின் விகிதங்கள் சமமானால், இரு முக்கோணங்கள் வடிவொத்தவை. (SSS) 

· இரு முக்கோணங்கள் வடிவொத்தவையாக இருப்பின், ஒத்த பக்கங்களின் விகிதம் அவற்றின் ஒத்த சுற்றளவுகளின் விகிதத்திற்குச் சமம். 

· இரு வடிவொத்த முக்கோணங்களின் பரப்பளவுகளின் விகிதம் அவற்றின் ஒத்த பக்கங்களின் வர்க்கங்களின் விகிதத்திற்குச் சமம். 

· வட்டத்தின் ஏதேனும் ஒரு புள்ளியில் வரையப்பட்ட தொடுகோடு, தொடுபுள்ளி வழிச் செல்லும் ஆரத்திற்குச் செங்குத்தாகும். 

· வட்டத்திற்கு வெளியே அமைந்த புள்ளியிலிருந்து வட்டத்திற்கு இரண்டு தொடுகோடுகள் வரையலாம். 

· வெளிப்புறப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட இரு தொடுகோடுகளின் நீளங்கள் சமம். 

· வட்டங்களுக்கு வரையப்பட்ட இரண்டு பொதுவான தொடுகோடுகளின் நீளங்கள் சமம்


Tags : Geometry | Mathematics வடிவியல் | கணக்கு.
10th Mathematics : UNIT 4 : Geometry : Points to Remember Geometry | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 4 : வடிவியல் : நினைவில் கொள்ள வேண்டியவை - வடிவியல் | கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 4 : வடிவியல்