Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | நினைவில் கொள்ளவேண்டியவை

முக்கோணவியல் | கணக்கு - நினைவில் கொள்ளவேண்டியவை | 10th Mathematics : UNIT 6 : Trigonometry

   Posted On :  19.08.2022 02:16 am

10வது கணக்கு : அலகு 6 : முக்கோணவியல்

நினைவில் கொள்ளவேண்டியவை

முக்கோணவியல் விகிதங்களைக் கொண்ட சமன்பாடானது வரையறுக்கப்பட்ட கோணங்களின் அனைத்து மதிப்புகளுக்கும் மெய்யெனில் அச்சமன்பாட்டை முக்கோணவியல் முற்றொருமை என்கிறோம்.

நினைவில் கொள்ளவேண்டியவை

· முக்கோணவியல் விகிதங்களைக் கொண்ட சமன்பாடானது வரையறுக்கப்பட்ட கோணங்களின் அனைத்து மதிப்புகளுக்கும் மெய்யெனில் அச்சமன்பாட்டை முக்கோணவியல் முற்றொருமை என்கிறோம். 

· முக்கோணவியல் முற்றொருமைகள்

(i) sin2 θ + cos2 θ = 1

(ii) 1 + tan2 θ = sec2 θ

(iii) 1 + cot2 θ = cosec2 θ

· நாம் ஒரு பொருளை உற்றுநோக்கும் போது நமது கண்ணிலிருந்து அப்பொருளுக்கு வரையப்படும் நேர்கோடு பார்வைக்கோடு எனப்படும். 

· கிடைநிலைக் கோட்டிற்கு மேல் பொருள் இருக்கும்போது, பார்வைக் கோட்டிற்கும் கிடைநிலைக் கோட்டிற்கும் இடையேயுள்ள கோணம் ஏற்றக்கோணம் எனப்படும். 

· கிடைநிலைக் கோட்டிற்குக் கீழ் பொருள் இருக்கும்போது, பார்வைக் கோட்டிற்கும் கிடைநிலைக் கோட்டிற்கும் இடையேயுள்ள கோணம் இறக்கக்கோணம் எனப்படும். 

· முக்கோணவியல் விகிதங்கள் மூலம் பொருட்களின் உயரம் அல்லது நீளம் அல்லது பொருட்களுக்கு இடைப்பட்ட தொலைவைக் கணக்கிடலாம்.


Tags : Trigonometry | Mathematics முக்கோணவியல் | கணக்கு.
10th Mathematics : UNIT 6 : Trigonometry : Points to Remember Trigonometry | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 6 : முக்கோணவியல் : நினைவில் கொள்ளவேண்டியவை - முக்கோணவியல் | கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 6 : முக்கோணவியல்