Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | நினைவில் கொள்க

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு - நினைவில் கொள்க | 10th Science : Chapter 8 : Periodic Classification of Elements

   Posted On :  30.07.2022 03:25 am

10வது அறிவியல் : அலகு 8 : தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

நினைவில் கொள்க

நவீன ஆவர்த்தன விதி: தனிமங்களின் இயல் மற்றும் வேதியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் சார்பாக அமையும்.

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

நினைவில் கொள்க


நவீன ஆவர்த்தன விதி: தனிமங்களின் இயல் மற்றும் வேதியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் சார்பாக அமையும்.

 

தனிமங்களை சீரான முறையில், தொகுதிகளாவும், தொடர்களாவும், வரிசையாகக் கொண்ட அட்டவணை தனிம வரிசை அட்டவணை ஆகும்.

 

நன்கு வறுத்த உலோக ஆக்சைடை உலோகமாக உருக்கி ஒடுக்கும் முறை உருக்கி பிரித்தல் ஆகும்.

 

நீர்த்த மற்றும் அடர் நைட்ரிக் அமிலம் அலுமினிய உலோகத்துடன் வினைபுரியாது. பரப்பில் உருவாகும் ஆக்சைடு படலமே இதன் காரணம்.

 

இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்க தேவையானவை, வறுத்தெடுக்கப்பட்ட தாது, கரி, சுண்ணாம்புக்கல் முறையே 8:4:1 என்ற விகிதத்தில் ஆகும்.

 

தாமிரப் பாத்திரம் மீது ஈரக்காற்று படுவதால், அதன் புறப்பரப்பில் பச்சை நிற படலம் ஆனது கார காப்பர் கார்பனேட்டால் உருவாகிறது.

 

உலோகக் கலவை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களின் ஒருபடித்தான கலவையாகும்.

 

இரசக்கலவை என்பது உலகமும், பாதரசமும் கலந்த கலவையாகும். எ.கா Ag-Sn இரசக்கலவையானது பற்குழிகளை அடைக்கப்பயன்படுகிறது.

 

துருவின் வேதிப்பெயர் நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு ஆகும். அதன் சமன்பாடு Fe2O3.xH2O


 

Tags : Periodic Classification of Elements தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு.
10th Science : Chapter 8 : Periodic Classification of Elements : Points to Remember Periodic Classification of Elements in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 8 : தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு : நினைவில் கொள்க - தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 8 : தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு