Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | நினைவில் கொள்க

உயிரின் தோற்றமும் பரிணாமமும் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 19 : Origin and Evolution of Life

   Posted On :  31.07.2022 06:13 pm

10வது அறிவியல் : அலகு 19 : உயிரின் தோற்றமும் பரிணாமமும்

நினைவில் கொள்க

அடுத்த தலைமுறையின் இளம் சந்ததிகளுக்குப் பெறப்பட்ட பண்புகள் கடத்தப்படுகின்றன என லாமார்க் முன்மொழிந்தார்.

உயிரின் தோற்றமும் பரிணாமமும்

நினைவில் கொள்க

* அடுத்த தலைமுறையின் இளம் சந்ததிகளுக்குப் பெறப்பட்ட பண்புகள் கடத்தப்படுகின்றன என லாமார்க் முன்மொழிந்தார்.

* உள்ளார்ந்த முக்கிய வல்லமை, சூழ்நிலையும் புதிய தேவைகளும், பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாடு மற்றும் மரபுவழியாகப் பெறப்பட்ட பண்புகளின் கோட்பாடு ஆகியவை லாமார்க்கின் முக்கிய கொள்கைகள்.

* அதிக இனப்பெருக்கத்திறன், வாழ்க்கைக்கான போராட்டம், வேறுபாடுகள், தக்கன உயிர் பிழைத்தல் அல்லது இயற்கைத் தேர்வு மற்றும் சிற்றினங்களின் தோற்றம் ஆகியவைடார்வினின் முக்கிய கொள்கைகள்.

* ஒவ்வொரு சிற்றினமும் மிக அதிக எண்ணிக்கையிலான இளம் சந்ததியினரை உருவாக்குகிறது. ஆனால் தக்கன மட்டுமே உயிர் பிழைக்கும்.

* அமைப்பு ஒத்த உறுப்புகள், செயல் ஒத்த உறுப்புகள் மற்றும் கருவியல் சான்றுகள் ஆகியவை பரிணாமத்தின் தொடர்புகளை விளக்குகின்றன.

* உயிரினங்கள் சில ஒத்த பண்புகளைப் பெற்றுள்ளன. ஏனெனில் அப்பண்புகள், ஒரு பொதுவான முன்னோரிடம் இருந்து மரபுவழியாகப் பெறப்பட்டவை.

* புதை உயிர்ப் படிவம், பழங்கால உயிரிகளைப் பற்றிய ஆதாரமாக விளங்குகிறது. பழமையான வாழிடங்களை இயற்கை எப்படிப் பாதுகாத்தது என்பதைப் பற்றி விளக்குகிறது.

* பாரம்பரிய அறிவின் மூலம் வட்டார இனத் தாவரங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

* வான் உயிரியல் / புற வெளிமண்டல உயிரியல் மூலம் அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வது குறித்துத் தெரிந்து கொள்ள முடிகிறது.


 

Tags : Origin and Evolution of Life உயிரின் தோற்றமும் பரிணாமமும்.
10th Science : Chapter 19 : Origin and Evolution of Life : Points to Remember Origin and Evolution of Life in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 19 : உயிரின் தோற்றமும் பரிணாமமும் : நினைவில் கொள்க - உயிரின் தோற்றமும் பரிணாமமும் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 19 : உயிரின் தோற்றமும் பரிணாமமும்